முர்ஸிக்கு பராக் ஒபாமா வாழ்த்து
எகிப்திய ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற முர்ஸிக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன்போது எகிப்துக்கான அமெரிக்காவின் ஆதரவு தொடரும் எனவும் ஒபாமா உறுதியளித்துள்ளார் .’ஜனநாயகத்தை நோக்கிய எகிப்தின் மாற்றத்திற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவியளிக்கும் எனவும் எகிப்திய மக்கள் தமது புரட்சியின் உறுதிமொழிகளை நிறைவேற்றும் நிலையில் அவர்களுக்கு சார்பாக அமெரிக்கா இருக்கும் எனவும் ஒபாமா கூறியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது .
இத்தேர்தலில் வெற்றி பெற்ற முஸ்லிம் சகோதரத்துவ கட்சி வேட்பாளரான முர்ஸி – ஜூலை முதலாம் திகதி எகிப்திய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இருநாடுகளினதும் பொதுவான நலன்களை முன்னெடுத்துச்செல்வதற்கு ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள முர்ஸியுடன் பரஸ்பர மதிப்பின் அடிப்படையில் இணைந்து செயற்பட தான் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் ஒபாமா குறிப்பிட்துள்ளார் .
அதேவேளை, எகிப்திய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மற்றொரு வேட்பாளரான அஹமட் ஷபிக்கும் தொலைபேசி அழைப்பு மேற்கொண்ட ஒபாமா, சிறப்பான பிரசாரம் மேற்கொண்டமைக்காக பாராட்டு தெரிவித்துள்ளார்







