இன்னும் இரண்டு வாரங்களில் இறுதி முடிவு
சஹீத் அஹமட் :கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதிஉயர் பீட கூட்டத்தில் எடுக்கப் படும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கரஸ் தவிசாளர் பிரதியமைச்சர் பசீர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
பொத்துவிலில் நேற்றும் இன்றும் இடம்பெற்ற இரண்டு நாள் கூட்டம் தொடர்பாக பேசியபோதே இதனை அவர் தெரிவித்தார்.
அதேவேளை ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம், அரசுடன் இணைந்து போட்டியிடுவதாயின் தமது கட்சி அரசாங்கத்துக்கு சில நிபந்தனைகளை விதிக்கும் என்றும் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதற்கான சூழ்நிலைகளே தற்போது காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கிறது .







