தம்புள்ள மஸ்ஜித் பகுதியில் நில அளவை பணிகள் ஆரம்பம்
தம்புள்ள மஸ்ஜித் பகுதியில் நில அளவை பணிகள் ஆரம்பம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் நடவடிக்கை ,தன்புள்ள மஸ்ஜித் தொடர்பாக இதுவரை சாதகமான முடிவும் அறிவிக்கப் படாத நிலையில் மஸ்ஜித் காணியில் நகர அபிவிருத்தி அதிகார சபை நில அளவீடுகளைமேற்கொண்டுள்ளது . எனவே ரமழான் மாதத்திற்கு முன்பு இது தொடர்பில் தீர்வொன்றினைப் பெற்றுத் தருமாறு தம்புள்ள மஸ்ஜித் நிர்வாகம் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவிடம் கோரியுள்ளது .
தம்புள்ள மஸ்ஜித் நிர்வாகத்தின் ஏழு உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் அண்மையில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் தலைமையகத்துக்கு விஜயம் மேற்கொண்டு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர் . மஸ்ஜித் விவகாரத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட நிறுவங்கள் பல பணிகளை மேற்கொண்டு வருகின்றது என்றும் சுட்டி காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் கருத்துரைத்த ஜம்இயதுல் உலமாவின் உதவி பொது செயலாளர் மௌலவி தாஸீம் ஜம்இயதுல் உலமாவுடனான சந்திப்பில் தம்புள்ள மஸ்ஜித் அதே இடத்திலேயே இருக்கவேண்டும் ,இடமாற்றம் செய்யக் கூடாது என்ற நிலைப்பாட்டிலேயே ஜம்இயதுல் உலமாவும் ,இலங்கை முஸ்லிம்களும் இருக்கிறார்கள் , நாட்டின் தலைமைத்துவமும் தம்புள்ள பிரதேச அமைச்சரும் பெரும்பான்மை மக்களும் இதனையே விரும்புகிறார்கள் என்று தெரிவித்தார் .
தம்புள்ள தொடர்பான முந்திய செய்திகள்:








தம்புள்ளை பள்ளிவாசல் அதே இடத்தில் இருக்கும் – ஜனாதிபதி
தம்புள்ளைப் பள்ளிவாசல் எந்த இடத்தில் இருக்கிறதோ அதே இடத்தில்தான் எதிர்காலத்திலும் இருக்கும். அதற்காக யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில். வாணிபத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
A.J.M.
June 14, 2012 at 12:35 pm
Please don’t throw always blames on muslim politicians and think what we did?
Mohammed
June 14, 2012 at 4:05 pm
BR Mohamed,
Public gives their mandate at elections to their chosen representatives to look after and safe guard their interests ..this is what we, Muslims, also have done…so, Muslims have every right to question and make accountable their representatives for failures in their duty towards the community..it’s NOT wise and some times childish to say NOT to blame the politicians and to think what we did….
Murshi
June 15, 2012 at 8:53 am