புத்தளத்தில் 11 பேர் கைது
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்வதற்கு முயற்சித்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் 11 பேர் புத்தளத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் மட்டக்களப்பையும் ஏனைய இருவரும் முல்லைத்தீவையும் சேர்ந்த தமிழ் வாலிபர்கள் என தெரிவிக்கப் படுகிறது .
புத்தளம் வைத்தியசாலையின் புன்புறமாக உள்ள விடுதி ஒன்றில் வைத்து இவர்கள் இன்று காலை 11.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்த இடத்திற்கு நேற்றைய தினம் இரவு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்புவதற்கு முயற்சித்த முகவர்களை இனங்கண்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் சிலர் முகவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபா பணத்தை வழங்கியுள்ளனர்.
இப் 11 பேரும் படகு ஒன்றின் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல தயாராகியுள்ளனர் என புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .







