Lankamuslim.org

One World One Ummah

அமைச்சர் றிஷாதின் உதவிக்கரம்

leave a comment »

இர்ஷாத் றஹ்மத்துல்லா: மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் நடை முறைப்படுத்தப்படவுள்ள குடிநீர் திட்டம் குறித்து ஆராயும் வகையிவ் நீர்வழங்கள், வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று விஜயமொன்றை மேற்கொண்டார். வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதீயுதீன் விடுத்த அழைப்பின் பேரில் இந்த விஜயத்தை அமைச்சர் தினேஷ் குணவர்தன மேற்கொண்டிருந்தார்.

மன்னார் அரசாங்கத அதிபர் பணிமனையில் காலை இடம் பெற்ற கூட்டத்ல பங்கெடுத்துக் கொண்ட அமைச்சர் தினேஷ் மன்னாரில் தற்போது இடம் பெறும் நீர்வழங்களின் விபரங்களை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார்.

அப்போது அங்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் மன்னார் பிரசித்தி பெற்ற தீருகேதீஸ்வரம் திருத்தலத்திற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வருகைத் தருகின்றனர். அவர்களுக்கு தேவயான தண்ணீர் வசதிகளை செய்து கொடுப்பதற்கு நடவடிக்கையெடுக்குமாறு வீடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அமைச்சர் தினேஷ் குணவர்தன,இது குறித்து நடவடிக்கையெடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

தற்போ மன்னார் மாவட்டத்தில் காணப்படும் குடிநீர் பிரச்சினை குறித்து விசேட கவனம் தன்னால் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும்,அமைச்ர றிசாத் பதியுதீன் மேற்கொண்டுவரும் பணிகள் பாராட்டக் கூடியது என்றும் அமைச்சர தினேஷ் குணவர்தன கூறினார். வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்,வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி,யாழ் மாவட்ட பாராளுமனற் உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் உட்பட திணைக்களத் தலைவர்கள்,அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

அதனையடுத்து 1968 ஆம் ஆண்டு பேசாலையில் டின் மீன் தொழிற்சாலையொன்றை அமைப்தற்காக அன்றைய கைத்தொழில்,கடற்றொழில் அமைச்சராக இருந்த தற்போதைய அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தந்தையான டீ.ஆர்.பி.குணவர்தனவினால் அடிக்கல் நடப்பட்டு நிர்மாணிக்கப்பட் தொழிற்சாலையினையும் அமைச்சரகள் பார்வையிட்டதுன்,தற்போது மன்னார் நகருக்கு நீர் விநியோகம் செய்யப்படும் எழுத்துர்,தோட்டக்காடு நீர் வழங்கள் பகுதிக்கு விஜயம் செய்து அதனையும் பார்வையிட்னர்.

இதே வேளை வங்காலை சான்த ஆனா மத்திய கல்லுரியில் நிர்மாணிக்கப்பட்ட மழைநீர் சேமிப்பு திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கல் திட்டத்தையும் அமைச்சரிகள் ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.மாலை வவுனியாவில் இடம் பெற்ற கூட்டத்தில் வ்வுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் குடிநீர் திட்டம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக வ்வுனியா பிரதேசத்தில் குடிநீரின் தன்மை குறித்தும் கருத்துப் பறிமாறப்பட்டதுடன்,வவுனியா தெற்கு பிரதேச சபை பிரிவில் தண்ணீரின் தன்மை மிகவும் ஆசுத்தமான நிலையில் காணப்படுவதால் பலர் சிறுநீரக வியாதிகளுக்கு உட்பட்டுள்ளதாகவும்,இது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என அமைச்சர றிசாத் பதியுதீன் ,அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

About these ads

Written by lankamuslim

June 10, 2012 at 7:25 pm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,805 other followers

%d bloggers like this: