Lankamuslim.org

One World One Ummah

இலங்கை அரசியலிலும் தாக்கம் செலுத்தப் போகும் கலாநிதி முஹம்மது முர்ஸியின் வெற்றி

with 12 comments

 அபூ காஸி
எகிப்தில் இரண்டாம் கட்ட ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 16, 17 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலில்  வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ள வேட்பாளராக இஹ்வான்களின் வேட்பாளர் முஹம்மது முர்ஸி மீண்டும் பிரகாசிக்கிறார் . இவரின் வெற்றி புதிய எகிப்தியர்களுக்கு மட்டுமல்ல இலங்கை போன்ற நாடுகளில் அரசியலிலும் பிரதிபலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை , முர்ஸியின் வெற்றி இலங்கை தம்புள்ளை வரையிலும் அதன் தாக்கத்தை கொண்டிருக்கும் என்பது மிகைப்படுத்தப் பட்ட கூற்றல்ல.அந்த வகையிலும் முர்ஸி பற்றி தெரிந்து கொள்வது இலங்கை அரசியலிலும் முக்கியத்துவம் பெறுகிறது .

எகிப்தில் கடந்த மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் எவருக்கும் 50 வீதத்திக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்க வில்லை. 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் இஹ்வான்களின் வேட்பாளர் முஹம்மது முர்ஸி பல முன்னணி சர்வதேச நோக்கர்களின் எதிர்வு கூறல்களை பொய்ப்பித்து வேட்பாளர்களில் அதிகூடிய வாக்குகளை பெற்றார் . தேர்தலில் முஹம்மது முர்ஸி 58 லட்சம் வாக்குகளை பெற்று முதல் இடத்தை பெற்றார் . இரண்டாவது இடத்தை முபாரக் ஆட்சியின் இறுதிக் காலகட்டத்தில் பிரதமர் பதவி வகித்த அஹ்மத் ஷபீக் எவரும் எதிர்பார்க்காத விதமாக 55 லட்சம் வாக்குகளை பெற்றுகொண்டார் . அதேவேளை முன்னாள் இஹ்வான் உயர் மட்ட உறுப்பினரான அப்துல் முன்இம் அபுல் புதூஹ்வுக்கு 41 லட்சம் வாக்குகளை பெற்றுகொண்டார் .மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அரபு லீக்கின் பொதுச்செயலாளர் அம்ர் மூஸா 5வது இடத்திற்கு தள்ளப்பட்டார். மூன்றாவது இடத்தை 48 லட்சம் வாக்குகளை பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹம்தீன் ஸபாஹி பெற்றுள்ளார் .

மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்ட எகிப்து ஜனாதிபதி தேர்தலில் எவரும் ஐம்பது வீத பெரும்பான்மையை பெறவில்லை இதில் முதல் இரண்டு இடங்களை பெற்றவர்களான இஹ்வான்களின் வேட்பாளர் முஹம்மது முர்ஸி , முபாரக் ஆட்சியின் இறுதிக் காலகட்டத்தில் பிரதமர் பதவி வகித்த அஹ்மத் ஷபீக் ஆகிய இருவரும் போட்டியிடவுள்ளனர் .

இரண்டாம் கட்ட தேர்தலில் 58 லட்சம் வாக்குகளை பெற்று முன்னிலையில் இருக்கும் இஹ்வான் வேட்பாளர் முஹம்மது முர்ஸிக்கு சலபிகள்  அமைப்பு தமது ஆதரவை தெரிவித்துள்ளது . அதேவேளை 41 லட்சம் வாக்குகளை பெற்ற முன்னாள் இஹ்வான் உயர் மட்ட உறுப்பினரான அப்துல் முன்இம் அபுல் புதூஹ்வும் தனது ஆதரவை முஹம்மது முர்ஸிக்கு வழங்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் எகிப்திய மக்கள் எழுச்சியின் வேட்பாளராக முஹம்மது முர்ஸியை தாங்கள் கருதுவதாக பொது வாலிப எழுச்சி அமைப்புகள் அறிவித்துள்ளது. அதேவேளை அஹ்மத் ஷபீக்கை எகிப்திய சர்வாதிகார ராஜாங்கத்தின் எச்சம் என்றும் அந்த அமைப்புக்கள் வர்ணித்துள்ளது .

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப் பட்டுள்ள ஆயுள் தண்டனையை அந்த அமைப்புகள் ”இது நீதிமன்றத்தின் தீர்ப்பல்ல இது ஒரு அரசியல் தீர்ப்பு” என்று தெரிவித்துள்ள . முஹம்மது முர்ஸி அதிகாரத்தை கைப்பற்றினால் மீண்டும் ஹுஸ்னி முபாரக் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு ”நீதிமன்ற தீர்ப்பு” வழங்கப் படவேண்டும் என்று அந்த அமைப்புக்கள் கோரிவருகிறது . இதற்கு முஹம்மது முர்ஸியும் உடன்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலில் இடம்பெறவுள்ளது . இது தொடர்பாக நான் கடந்த மாதம் 15 ஆம் திகதி தொகுத்து விடிவெள்ளி பத்திரிகையில் வெளியான ஆக்கத்தை lankamuslim.org க்கு சில மாற்றங்களுடன் தருகிறேன் .

எகிப்து இஹ்வான்களின் ஜனாதிபதி வேட்பாளரான முஹம்மத் முர்ஸி இன்றை எகிப்து ஜனாதிபதி தேர்தல் களத்தில் அதிகள் பேசப்படும் நபர். எகிப்து அரசியல் வெளியில் மின்னும் தாரகை. இவர் எகிப்தில் மட்டுமல்ல முஸ்லிம் உலகில் பரவலாக எதிர்பார்க்கப் படும் எகிப்தின் எதிர்கால ஜனாதிபதி. மீண்டும் எகிப்து ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 16 ,17 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையில் இவரை பற்றி சற்று தெரிந்து கொள்வோம்.

கலாநிதி முஹம்மது முர்ஸி , இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அரசியல் கட்சியான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான கட்சியின் தலைவராவார். இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் வழிகாட்டல் பிரிவில் முன்னாள் உறுப்பினரான இவர் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் மிக முக்கிய அரசியல் பிரமுகர்களில் ஒருவர். கலாநிதி முஹம்மது முர்ஸி 2000-2005 ஆண்டுகால பகுதில் பாராளுமன்ற மக்கள் சட்டமன்றத்தில் இஹ்வான் அணியின் பாராளுமன்ற தலைவராக கடமையாற்றியுள்ளார்.

இவர் எகிப்து சகஜிக் (Zagazig University) பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தின் பருப்பொருள் அறிவியல் துறையின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளதுடன் ஆய்வு அறிவியல் துறைக்கு பெரிதும் பங்காற்றியுள்ளார் .

முஹம்மத் முர்ஸி ஈஸா அல் இயாத் என்பது அவரது முழுப் பெயர் எகிப்தின் ஷர்க்கிய்யா மாகாணத்தின் அத்வா எனும் கிராமத்தில் 1951 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். அவர் 1975 ஆம் ஆண்டில் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பொறியியல் இளங்கலை பட்டத்தை பெற்றார். அதன்பின்னர் 1978 இல் அதே பல்கலை கழகத்தில் இருந்து உலோக தொழிற்கலை பொறியியல் முதுகலைப்பட்டம் (Master of Engineering degree in Metallurgy) பெற்றார். அவர் மேற்கொண்டு, 1982 இல் அமெரிக்க தெற்கத்திய கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் டாக்டர் (PhD) பட்டத்தை பெற்றுக்கொண்டார்.

இவர் ஒரு சிறந்த விரிவுரையாளராகவும், ஒரு ஆசிரியர் உதவியாளராகவும் , கெய்ரோ பல்கலைக்கழகத்திலும் ஐக்கிய அமெரிக்காவின் தெற்கத்திய கலிஃபோர்னியா பல்கலைக்கழக பொறியியல் பீடத்திலும் கடமையாற்றியுள்ளார். 1982 மற்றும் 1985 க்கு இடைபட்ட காலத்தில் கலிஃபோர்னியா வட ரிட்ஜ் (North Ridge in California) பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராகவும் (Assistant Professor) பணியாற்றியுள்ள இவர் 1985 இலிருந்து 2010 ஆண்டுவரை சாகஜிக் (The University of Zagazig) பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் மூலப்பொருள்கள் பொறியியல் துறையின் பேராசிரியராகவும், தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். அந்த காலப்பகுதியில் அவர் சாகஜிக் பல்கலைக்கழகத்தில் ஆசிரிய பணியாளர்கள் கிளப் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் எண்பதுகளில் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவிழும் (NASA) கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிட்டு சொல்லக்கூடியது.

இவர் பேராசிரியராக கடமையாற்றிய போது அரசியல் கட்சிகள் மற்றும் நிறுவனங்களின் சர்வதேச மாநாடு உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டார். எகிப்திய சியோனிச திட்டங்களை எதிர்க்கும் அமைப்பின் இஸ்தாபக -உறுப்பினராகவும் விளங்கும் இவர் தான் வகித்த ஒவ்வொரு பொறுப்பிலும் தனது கடின உழைப்பினால் சிறந்து விளங்கியுள்ளார்.

கலாநிதி முஹம்மது முர்ஸி பல்வேறு அறிவியல் துறைகளில் இருந்து தனது சிறப்பான திறமைகள் மற்றும் திறன்களை நிரூபித்து அதன் மூலம் ஒரு உறுதியான ஆற்றல் மிக்க , தீர்க்கமான இஸ்லாமிய அரசியல் முற்போக்கு தலைவவராக உருவாகியுள்ளார் . இவர் நடைமுறை உற்பத்தி தீர்வுகள் (practical production solutions) தொடர்பாக எகிப்தில் தொழில் துறையின் பல முக்கிய பிரிவுகளில் ஆராய்ச்சிகளை செய்துள்ளார் என்பது சிறப்பம்சமாகும் .

அவர் ஆரம்ப எண்பதுகளில் விண்கலம் இயந்திரங்கள் மேம்பாட்டியல் அறிவியல் துறையில் நாசாவில் பணியாற்றிய போது “உலோகங்களில்”, “metal surface treatment” என்ற துறையில் அதிகமான ஆய்வுகள் செய்துள்ளார். .

அதேவேளை சர்வாதிகார அடக்குமுறைகளையும் மற்றும் தூக்கியெறியப்பட்ட ஆட்சியின் அடக்குமுறை நடவடிக்கைகளையும் தொடர்ந்து உறுதியாக எதிர்த்து வந்துள்ளார் .இந்த நிலைப்பாடு காரணமாக, கலாநிதி முஹம்மது முர்ஸி பல முறை கைது செய்யப்பட்டு சிறை வாழ்க்கையையும் அனுபவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு தேர்தலில் பின்னர், கலாநிதி முஹம்மது முர்ஸி அப்பட்டமான தேர்தல் மோசடி எதிராக சுதந்திரம் கோரிய நீதிபதிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் வழிநடத்தினார். இதன் விளைவாக, இவர் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க 500 உறுப்பினர்களுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டார். மத்திய கெய்ரோவின் வட கெய்ரோ நீதிமன்றம் மற்றும் அல் ஜலா கோர்ட் வளாகம் முன் எதிர்ப்பு ஆர்பாட்டயங்களில் இஹ்வானுல் முஸ்லிமீன் ஈடுபட்டபோது மே 18, 2006 காலை இவர் கைது செய்யப்பட்டு . சிறையில் ஏழு மாதங்கள் அடைக்கப்பட்டார்.

எகிப்து முழுவதும் முன்னாள் சர்வாதிகாரிக்கு எதிரான ஆர்பாட்டங்களை அடக்க ‘கோபத்தின் வெள்ளியன்று’ “Friday of Anger” இஹ்வான்கள் ஆர்பாட்டங்களில் பங்கு பற்றுவதை தடுக்க ஆட்சியாளர் இவர்களை மீண்டும் சிறையில் அடைத்தனர். பல சிறைச்சாலைகளில் ஆர்பாட்ட காரர்களால் உடைக்கப்பட்டன பல கைதிகள் தப்பி சென்றனர். ஆனால் எப்போதும் எல்லாவற்றிலும் ஒழுங்குகளை பேணும் முஹம்மது முர்ஸி அவரது சிறை கூடத்தில் இருந்து வெளியேற மறுத்துவிட்டார். நீதித்துறை அதிகாரிகள் சிறைக்கு வந்து சிறையில் முஸ்லீம் சகோதரத்துவ தலைவர்கள் எந்த சட்ட காரங்களுகாக கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை விளக்க வேண்டும் என்று செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேனல்கள் மூலம் கோரிக்கை முன்வைத்தார். ஆனால் எவரும் அங்கு சென்று பார்கவில்லை.

கலாநிதி முஹம்மது முர்ஸி பல வதைகளை அனுபவித்தார். அவர் மட்டுமல்ல. சர்வாதிகார ஆட்சியாளர் ஹுசனி முபாரக்கின் அநியாயம் அவரது குடும்பத்தையும் விட்டுவைக்கவில்லை . அவரது மகன், டாக்டர் அஹமத் , 2000 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தில் தனது தந்தை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த பின்னர் கைது செய்யப்பட்டார். அவர் தனது தந்தை ‘மக்கள் சட்டமன்றத்தில்’ ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது 3 முறை கைது செய்யப்பட்துள்ளார் .

கலாநிதி முஹம்மது முர்ஸி பாராளுமன்றத்தில் ஐந்து ஆண்டு காலத்தில் சிறப்பான அரசியல் சேவையை வெளிப்படுத்தினார். அதன் பின்னர் அவர் இஹ்வான் இயக்கத்தின் வழிகாட்டல் பிரிவின் உறுப்பினராக அதன் சூரா சபையால் தெரிவு செய்யப்பட்டார். ஜனவரி 25 புரட்சிக்கு பின்னர், இஹ்வான்களினால் சுதந்திரதற்கும் நீதிக்குமான அரசியல் கட்சி நிறுவப்பட்டது போது அதன் தலைவராக அவர் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் சூரா அவையால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2000 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் கலாநிதி முஹம்மது முர்ஸி இஹ்வான் அமைப்பின் பாராளுமன்ற குழு தலைவராக மிகவும் தாக்கமுள்ள ,செல்வாக்குள்ள முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் . மக்களுக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராக செயல்பட்டுள்ளார் . இதன் காரணமாக சர்வதேச அரங்கில் இவர் 2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2005 ஆம் ஆண்டுவரையான காலத்திற்கான சிறந்த பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானார். .

கலாநிதி முஹம்மது முர்ஸி இஹ்வான்களின் அரசியல் திட்ட முகாமையில் அளப்பெரிய பங்காற்றியுள்ளார் . 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இயக்க மறுசீரமைப்பு பணியில் இவரின் பங்களிப்பு பெரிதும் பேசப்படுகிறது. 2007ஆம் ஆண்டு இஹ்வான்கள் வெளியிட்ட அரசியல் வேலைத்திட்ட அறிக்கையிலும் இவரின் பங்களிப்பு பெரிதும் இருந்துள்ளது.

இன்று மீண்டும் எகிப்தில் சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தலில் களத்தில் பிரகாசமாக மின்னும் தாரகையாக கலாநிதி முஹம்மது முர்ஸி வெளிப்படுகிறார். இன்னும் இரு வாரங்களில் நடைபெறபோகும் ஜனாதிபதி தேர்தலில் பின்னர் இவர் பற்றிய வெற்றி அறிவிப்பை இஸ்லாத்தின் ஒரு கட்ட அரசியல் வெற்றியாக கண்டுகொள்ள முடியும் – என்பதுடன் இலங்கை அரசியலிலும் அவரின் வெற்றி தாக்கம் கொண்டதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இன்ஷா அல்லாஹ்

About these ads

Written by lankamuslim

June 6, 2012 at 9:46 pm

12 Responses

Subscribe to comments with RSS.

  1. Dear Abu Gazi,
    Everything seems fine, but you’ve not said how his victory will reflect in Sri Lankan politics or at least Muslims’ politics in Sri Lanka? Don’t spread day dreams like these. Always remember Tamils, who dreamt American, European , Norwiegian and India help. I don’t need to tell you the end of their daydreams.

    If our politicians aren’t able to deliver anything to keep Sri Lanka moving and only work on the hidden agenda of Singhalization of the country, we can then dream of an “Afghanistan” in yellow robes. Mark my word.

    Ahmed Nadvi

    June 6, 2012 at 11:29 pm

    • Dear Ahmed Nadvi I understand your point of view , but here, my article focused only on Dr. Mursi’s profile, not his’ victory and the impact’ on Sri lankan -muslim – politics. If possible I will write InshaAllah .

      But easy to understand the impact. Even in Sri lankan politics when Muslim Brotherhood (MB) come to power .

      To understand the matter NO need to look into the relationship between Egypt MB, and Srilanka MB or Egypt MB’s relationship with other Sri lankan institutions .

      NO need to look deeper into the relationship between Dr.yusuf al qaradawi and MB ,or Dr.yusuf al qaradawi and Qatar Ameer Hamad bin Khalifa Al Thani and Al jazeera .

      NO need to look deeper into the relationship between The International Union of Muslim Scholars (IUMS) and IUMS branch in Sri lanka , or IUMS and ACJU relationship.

      Can easily understand when you look Iran’s activities in Sri lanka , when dambulla mosque was attacked by mobs , the first statement came condemning the attack was from Iran, the first diplomatic talk with SL Prime minister regarding Dambulla mosque was by Iran. to the date the country Iran keeps monitoring the situation development in Dambulla and other part of SL.

      this gives direct and indirect impact on SL political leaders isn’t it… I hope you may understand something which lead you to understand.

      Abu Gazi

      June 7, 2012 at 6:45 pm

      • Dear Father of Gazi,

        Iran is not a muslim state, it is a shia state.
        It uses the opportunity maximise it’s hold on SL muslims to spread shiaism.

        You do not even understand this basic fact, then how we are to expect you to understand much deeper things?

        Pls note that there is not a single masjid in Tehran to pray 5 times.

        Lanka Moor

        June 11, 2012 at 11:23 am

  2. இவரது வெற்றி இலங்கைக்கு மாத்திரமல்ல அகில உலக முஸ்லிம்களுக்கும் கிடைக்கப் போகும் வெற்றியாகவே நாம் கருத வேண்டும். இஸ்லாத்தின் எதிரிகளான அமெரிக்கா இஸ்ரவேல் ஆகிய நாடுகளுக்கு சோரம் போன முன்னைய தலைவர்களின் ஆதிக்கத்தை உடைத்து ஒரு இஸ்லாமிய அரசை உருவாக்க நிச்சயம் நமது இஹ்வானுல் முஸ்லிம்களால் முடியும். ஆனாலும் முபாரக்கின் அடிவருடியான ஏன் அமெரிக்காவின் கையாள் அஹ்மத் ஷபீக்கை சூழ்ந்து துணையாக நிற்கும் பணக்கார வர்க்கம், இராணுவ அமைப்பு, நாட்டின் கிரிஸ்தவ சமுகத்தின் சில பிரிவுகள், ஸுபிக் கூட்டம் (சியார வழிபாடுகளில் ஈடுபாடுள்ள கூட்டம்) மற்றும் முன்னைய அரசின் ஆதரவாளர்கள் ஆகியோரின் தில்லுமுல்லுகள் இல்லாவிடில் நிச்சயமாக கலாநிதி முர்ஸி அவர்களுக்கு அபார வெற்றி நிச்சயமே. ஆயினும் ஒரு அரசியலமைப்பு இல்லாத நிலையில் அவர் வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி எங்ஙனம் பேணப்பட போகின்றது என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இதனால் தான் முன்னாள் சர்வதேச அணுசக்தி முகவர் நிலையத்தின் தலைவராக இருந்த எகிப்தின் மாபெரும் விஞ்ஞானியான முஹம்மத் பர்தாயி இந்த தேர்தலில் பங்கெடுக்கவில்லை. எனினும் முதல் கட்ட வாக்கெடுப்பின்போது மூன்றாம் நான்காம் இடங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் சுமார் எண்பது லட்ச வாக்குகளும் முர்ஸி அவர்களுக்கு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் சுமார் 12 அல்லது 13 மிலியன் வாக்குகளைப் பெற்று வெற்றிவாகை சூடுவார் என நம்புகின்றோம். இன்ஷா அல்லாஹ் !

    Ossan Salam - Doha

    June 7, 2012 at 10:16 am

  3. masah allah

    aa

    June 7, 2012 at 12:45 pm

  4. ALLAHU BARAKFEE.

    farhan

    June 7, 2012 at 1:47 pm

  5. Assalamu allaikkum, Bro. Gazi,

    I’m not arguing with you. Your heading in Tamil may have mislead me. Please read the title again. Now we just concentrate on Dr. Mursi. I appreciate all his achievements and I wish him all the best with the help of Al-mighty Allah. But the point is that the world we see and its complex politics is not so genuine. Remember when president Obama took office his first official call was to Abu Mazam( Abbas) of Palastine. Now he is making ready for his second term, but the Palastine question remains as it was.

    Iran is upto something in Sri Lanka. There has been coldwar between President and top religious leader in Iran. Human rights violation like in Sri Lanka has been reported in Iran. See Syria, Iran’s best friend. Is that alright for Assad to kill so many innocent people? Compare to Dambulla Syria’s human lost is colossal. But Iran still cares Dambulla rather than Syria and innocent Muslim lives.

    Look Saudi Arabia. What they do in Bahrain? is it alright? being ourselves Muslim we have to be example to our belief, otherwise we are just symbolic Muslims. So don’t jump to conclusion about Dr. Mursi now. Wait and see. No Muslims want to see him 11th person in the row of 1oth already. May Allah guide all of us. Anyway it’s interesting to talk to you. See you soon.

    Ahmed Nadvi

    June 8, 2012 at 12:06 am

    • Walaikum salam Bro Ahmed Nadvi.
      I just talk about ‘just impact’ , not about how much impact, …how.. deeper and stronger.. that is different story .

      Abu Gazi

      June 8, 2012 at 11:34 pm

    • Jazakunullah Ahamed Nadvi for your understanding and expression of Iran, It seems you have understood about Islam better than the writer who pulls in to the matter Iran as caretaker of Muslims.
      Very funny, how it could be while they depress Sunni muslims in Iran?

      There have been a lot of Hystorical sunni masjids were either demolished by government or converted to somehting else. They have no moral rights to talk about Dambulla.

      Lanka Moor

      June 11, 2012 at 11:29 am

  6. very informative article thank u Mr.Abu Gazi

    Umar Farook

    June 9, 2012 at 12:18 am

  7. Dear Abu-Gazi,
    Good article, please do a analyse, before publish, in every corner, Because this writings have an impact to society. this is not just a blame, kind of shape up for your future publication. its true Iran has a hidden agenda all over, so admit it.@ lanka moor &ahmed nadvi thanks for sharing the points

    jaleelmohamed

    July 1, 2012 at 1:04 pm

  8. இலங்கை முஸ்லிம்களிடம் காணப்படும் சிந்தனையில் மாற்றம் தேவை. நாமும் இந்நாட்டுப் பிரஜைகளே! நமக்கும், இந்நாட்டின் பெரும்பான்மையினருக்குள்ள அதேயளவு உரிமைகள் உண்டு. இன்னும் சொல்லப் போனால், மற்றைய இனங்களை விட நாம் இந்நாட்டுக்கு விஸ்வாசமாக நடந்துள்ளோம். சிங்களவரும், தமிழரும் கூட இந்நாட்டில் புரட்சி, உரிமை என்ற பெயர்களில் இரத்த ஆறை ஓட வி்ட்டுள்ளனர். ஆனால் நாம் என்றும் இந்நாட்டின் அரசியல் யாப்புக்கெதிராக கிளர்ந் தெழுந்ததில்லை. நமக்குப் பிரச்சினைகள் ஏற்பட்ட போதெல்லாம் பேச்சு வார்த்தை மூலமும், நீதிமன்றின் மூலமும் அவற்றைத் தீர்த்துக் கொண்டு சிங்கள, தமிழ் மக்களோடு சகஜீவன வாழ்வை மேற் கொண்டு வந்துள் ளோம். நமக்குப் பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்ட போதெல்லாம் நாம் மற்றைய இனங்களைக் குற்றம் கூறவோ, திட்டித் தீர்க்கவோ இல்லை. மாறாக அதில் ஈடுபட்டவர்களை மட்டும் நியாயமான முறையில் கண்டித் துள்ளோம். அவர்களுடன் அதற்காக என்றும் பகைமை பாராட்டிய தில்லை. இது இந்நாட்டு முஸ்லிம்களின் பாரம்பரியம்.

    ஆனால் அண்மையில் நமக்கும், நமது வழிபாட்டு நிலையங்களுக்கும், சில மத அனுஷ்டானங்களுக்கும் சில மதவிரோத சக்திகளால் பல் வகையில் பிரச்சினைகள் உருவாக்கப்பட்ட போது, சிறந்த முறையில் அதனை அணுகவில்லை என்றே கூற வேண்டியுள்ளது. அல்லது அணுகும் சந்தர்ப்பங்கள் அற்றுப் போயிருந்ததாகவே நினைக்க வேண்டியுள்ளது.

    1. பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கலாம் என்ற பொறிமுறையைக் கையாள நம்மிடம் சரியான தலைமைத்துவம் இருக்கவில்லை.
    2. பேசக்கூடிய நிலையில் ஸ்தாபன ரீதியாக இயங்கிக் கொண்டிருந்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஹலால் முத்திரை என்ற பொறியில் தள்ளப்பட்டு, குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டிருந்தது. அதனால், அச்சபைக்கு முஸ்லிம்களின் பிரச்சினையில் தலையிடுவதற்கு மேலாக, தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் பாரிய பொறுப்பை நிறைவு செய்யும் வழிவகைகளில் நியாயங்களைத் தேட வேண்டிய நிலையில் இருந்தது. அத்துடன் அது பேச்சுவார்த்தை நடத்தும் சக்தியை இழந்திருந்தது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எப்படி ஒரு இனத்துக்காகப் பேச முடியும்? அதனால், இறுதியில் யாருடைய வேண்டுகோளுக்காகவோ ஆரம்பிக்கப் பட்டது என்ற உண்மையை மொட்டையாகப் போட்டுடைத்து, மிகுதியை நம்மீது பாரத்தைப் போட்டு, நமக்கு சில ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் தன்னைக் காத்துக் கொண்டது.
    3. அடுத்து, மேற்கண்ட அஇஜஉ வுக்கெதிரான குற்றச்சாட்டு, இஸ்லாத்துக் கெதிரான, முஸ்லிம்களுக் கெதிரான குற்றச்சாட்டாக திரிபுபடுத்தப்பட்டு விட்டதால், முஸ்லிம்கள் கூட பேசும் சக்தியை இழந்து, தம்மை இந்த அபாயத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் வழியில் அங்கலாய்த்துக் கொண்டிருந்தனர்.
    4. அடுத்து முஸ்லிம்கள், தமது முஸ்லிம் அரசியல்வாதிகளை நம்பினர். அவர்கள் பாவம், அவர்களால் தமது பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ளும் வேலைகளைச் செய்ய வேண்டிய நிலையில் இரண்டாவது இடத் தையே முஸ்லிம்களின் பிரச்சினைக்கு வழங்கினர். அல்லது தமது பதவி களைத் தக்க வைத்துக் கொள்வதற்காக நம்மைப் பலிக்கடாவாக்கினர். சிலர் நடைபெற்ற அக்கிரமங்களை மறைத்தும் வேறு வகைகளிலும் வெளிப்படையாகவே வக்காலத்து வாங்கி நியாயப்படுத்த முனைந்தனர். சிலர் தடிக்கும் நோகாமல் பாம்பும் சாகாமல் தமது சாணக்கியத்தை வெளிப்படுத்தினர்.
    5. இறுதியாக கட்சி பேதமின்றி மேதகு ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சு வார்த்தையில், இனிமேல் முஸ்லிம்களுக்கு எதிராக எதுவும் நடைபெறுமானால், அது சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படும் என்ற உறுதி மொழியைப் பெற்றனர். இதன் மூலம் நடந்தவைகள் அனைத்தும் தண்டனைகளில் இருந்து விலக்கப்பட்டன. நடந்தவைகட்கு சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்காமல் முஸ்லிம் தலைவர்கள் வாளாவிருந்ததை மிக நுட்பமாக ஜனாதிபதி வெளிப்படுத்தினாரா?
    6. எல்லாவற்றுக்கும் மேலாக, முஸ்லிம்களும், அஇஜஉவும், அரசியல் வாதிகளும், ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக சில முஸ்லிம் நாடுகள் வாக்களித்ததையும், தாம் இது சம்பந்தமாக எடுத்த நடவடிக்கைகளையும் கூறி, எம்மைக் காப்பாற்றிக் கொள் ளும் முயற்சியில் ஈடுபட்ட னர். இதுதான் புரியாத புதிர். இந்நாட்டுக்கு ஜெனிவா பிரச்சினை ஏற்படா திருந்தால் என்ன காரணத்தைக் கூறி இருப்பர். நமக்கிழைக்கப்பட்ட அநியா யத்தை வெளிப்படுத்த, நீதி கேட்க,முஸ்லிம் நாடுகள் இந்நாட்டை ஆதரித்திருக்க வேண்டுமா? அடுத்து, ஜெனிவாவில் அரபு நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித் திருந்தால் என்ன செய்திருப்பர்?
    7. மேற்கண்ட நடவடிக்கை மூலம், முஸ்லிம்களின் பிறப்புரிமை கேள்விக் கிடமாக்கப் பட்டு, உரிமைகளைக் கைநழுவவிட்டு, பிச்சைக்காக ஏங்கும் நிலையை ஏற்படுத்திய புதிய பாரம் பரியம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. இன்னும், நாளை அரபு நாடு இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுமாயின், அவர்களை நாம் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதை, இந்நாட்டு அரசின் மூலமாகவே நிறைவேற்ற வேண்டியிருக்கும் என்பதை மறந்து விடலாகாது. இது களநிலவரம்.

    நாம், நமக்கும், நமது மார்க்கத்துக்கும் பிரச்சினை வரும்போது, முதலில் நம்மை, நமது செயற்பாடுகளை நிதர்சனமாக அணுகி, ஆக்கபூர்வ விமர்சனத்தைச் செய்து, உண்மை நிலையைக் கண்டறிந்து, நம்மிடமுள்ள குறைகளை அகற்ற முனைய வேண்டும். இதில் வெட்கப்படவோ, இழிவாக நினைக்கவோ, தோல்வியாக எண்ணவோ இடமில்லை. இது நமது நிலையை அந்நியர் மத்தியில் உயர்த்தவே செய்யும். இதுவே பெரிய எத்திவைத்த லாகும். வீரம் என்பதே விவேகம்தான்.

    நமது பக்கத்தில் குறைகள் இல்லாத போது, நமக்கேற்பட்ட பிரச்சினைகள் ஏன் தற்போது ஏற்பட்டுள்ளன என்பதை குர்ஆனிய அடிப்படையில் அணுகி அறிய வேண்டும். நாம் குர்ஆனின் அடிப்படையில வாழாத போது அல்லாஹ்வின் சோதனை இவ்வாறெல்லாம் வர இடமுண்டு.

    நம்மீது அந்நியருக்கு ஏதாவது காரணங்களால் அச்சமோ, அசௌகரியமோ, பாதிப்புக் களோ ஏற்பட்டிருந்தால் அவைகளைக் களையும் வழிவகையில் செயற்பட வேண்டும்.

    புத்திஜீவிகள் கூடி, பிரச்சினைகளை எப்படி தடுக்கலாம் என்ற வழிவகைகளைக் கண்டறிந்து. நீதியின் மூலமாகவோ, அன்றி பேச்சுவார்த்தையின் மூலமாகவோ தீர்ப்பதற்கான பொறிமுறைகளைப் பாவித்து, பிரச்சினையை ஒழிக்க வேண்டும்.

    நாம், நமது பிறப்புரிமைகளையும், நமக்கு ,நம் முன்னோர்கள் பெற்றுத் தந்த உரிமைகளையும், விட்டுச் சென்ற நிலவுரிமையையும், நற்பெயரையும், கௌரவத்தையும் நமது சந்ததியினருக்கு விட்டுச் செல்ல வேண்டும்.

    நாம் சரியான வழியில், நின்று கொண்டு. அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும்.

    nizamhm1944

    April 11, 2013 at 2:43 pm


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,805 other followers

%d bloggers like this: