Archive for June 2012
முர்ஸி ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்
முஹமத் அம்ஹர்: இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சித் தலைவர் கலாநிதி முஹமத் முர்ஸி இன்று சனிக்கிழமை நாட்டின் முதல் சுதந்திரமாக மக்களினால் தெரிவான ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். முஹமத் முர்ஸி ஜனாதிபதியாக இன்று உச்ச நிதிமன்ற Read the rest of this entry »
ACJU:இரண்டாயிரம் உலமாக்கள் கூடிய சபையில் முக்கிய 15 தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டது
ஜிப்ரிஅலி : கண்டி அல் மஸ்ஜிதுல் கபீர் லைன் மஸ்ஜிதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாட்டின் அனைத்து பிரதேசங்களில் இருந்தும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான உலமாக்கள் கலந்து கொண்டனர் (வரவு பதிவு புத்தகத்தின் தகவலில் பிரகாரம்) . இதன்போது முக்கிய தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டது . Read the rest of this entry »
வாகன விபத்தில் தந்தையும் இளம் பெண்ணும் வபாத்
மூதூர் செய்தியாளர் : திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி, பாலைத்தோப்பு, கையில்வாடி பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் தந்தை, மகள் என இருவர் ஸ்தலத்திலேயே வபாத்தாகியுள்ளனர் . Read the rest of this entry »
இலங்கையில் சவூதி அரேபியாவின் 2000 கோடி பெறுமதியான பாரிய முதலீடு
எஸ் .எம் சர்ஜூன்: இலங்கையில் கப்பல் கட்டும், மற்றும் திருத்தும் டொக்யாட் ஒன்றை அமைப்பதற்கு சவூதி அரேபிய முன்னனி நிறுவனமான ஹாதி ஹமாம் குறூப் நிறுவனம் முன்வந்துள்ளது. 100க்கு மேற்பட்ட கப்பல்கள் உள்ள இந் நிறுவனம் இலங்கையில் சீ கல்ப் சிப்யாட் எனும் தனியார் நிறுவனம் ஊடாக முதலீடு செய்துள்ளது. Read the rest of this entry »
உங்களின் வெற்றி முழு முஸ்லிம் நாடுகளுக்கும் பலம் சேர்க்கும்
இர்ஷாத் றஹ்மத்துல்லா: தற்போது எகிப்து நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள நீதிக்கும் சுதந்திரத்திற்குமான கட்சியின் தலைவர் கலாநிதி முர்ஸியின் தெரிவானது முழு முஸ்லிம் நாடுகளுக்கும் பலம் சேர்க்கும் ஒன்றாக அமையுமென அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் Read the rest of this entry »
இஸ்லாஹிய்யா மாணவியரின் உமர் கத்தாப்(ரழி) அவர்களின் சாம்ராஜிய முகவரிகள் : நூல்
இர்ஷாத் றஹ்மத்துல்லா: புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லுாரியின் 17 ஆவது விடுகை வருட மாணவிகளால் தயார் செய்யப்பட்ட உமர் கத்தாப்(ரழி) அவர்களின் சாம்ராஜிய முகவரிகள் என்ற ஆய்வு நுால் வெளியீட்டு விழா நாளை சனிக்கிழமை Read the rest of this entry »
மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த 1380 பட்டதாரிகளுக்கு நியமனங்கள்
ஷஹீட் அஹமட் : 2004ஆம் ஆண்டுமுதல் 2009ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் பல்கலைகழகங்களிலிருந்து வெளியேறிய மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த 1380 பட்டதாரிகளுக்கு இன்று அரசாங்க நியமனங்கள் வழங்கப்பட்டன. Read the rest of this entry »
எகிப்திய ஜனாதிபதிக்கு நஸீர் அஹமட் வாழ்த்து
எஸ் .எம் சர்ஜூன்: எகிப்திய ஜனாதிபதி தேர்தலில், ஜனநாயக ரீதியாக முதன் முறையாக தெரிவு செய்யப்பட்டு முழு முஸ்லிம் உலகையும் எகிப்தை நோக்கி திரும்ப வைத்துள்ள எகிப்திய ஜனாதிபதி முஹம்மட் முர்சிக்கு ஸ்ரீலங்கா வாழ் முஸ்லிம்கள் சார்பாக வாழ்த்து தெரிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன் Read the rest of this entry »
மருதானையில் இஜ்திமா
ஜெம்ஸித் அஸீஸ்: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கொழும்பு பிராந்தியத்தின் ஏற்பாட்டில் மருதானை டவர் மண்டபத்தில் எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி காலை 8.30 முதல் நண்பகல் 12.00 மணி வரை “கண்குளிர்ச்சி தரும் குடும்பம்; மனிதம் வாழும் தேசம்!” எனும் கருப்பொருளின் இஜ்திமா நடைபெறவிருக்கிறது. Read the rest of this entry »
புத்தளம் மன்னார் வீதி தாய் சேய் நிலையம் மீள்நிர்மானம்
எம்-எச் முஹம்மத்-புத்தளம்: புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள தாய் சேய் சிகிச்சை நிலையம் தற்போது புத்தளம் நகர பிதாவின் முயற்சியின் பலனாக மவ்ன்டின் ஒப் மேர்சி( Mountain of Mercy) நிறுவனத்தின் உதவி தொகை சுமார் 10 மில்லியன் ரூபா மற்றும் புத்தளம் நகர சபையின் Read the rest of this entry »
பிரித்தானிய உயர் ஸ்தானிகருடன் அமைச்சர் றிசாத் சந்திப்பு
இர்ஷாத் றஹ்மத்துல்லா: இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரண்கின்,அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீனை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். தற்போது வடக்கு,கிழக்கு சமாதான சூழல் குறித்து Read the rest of this entry »
ரிஷாத் , பஷீர் முஸ்லிம் அரசியல் ஒன்றுமைக்கான பேச்சில்
ஷஹீட் அஹமட் : முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமைப்பட்ட செயலாற்றலை ஏற்படுத்தும் முகமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகப் பிரதி அமைச்சருமான பசீர் சேகுதாவுத் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் . இதன் ஒரு கட்டநகர்வாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாத் பதியுத்தீனுடன் விரிவான பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. Read the rest of this entry »
ஆளும்தரப்பு கிழக்குமாகாண முதலமைச்சர் வேட்பாளர் சந்திரகாந்தன் ?
மாகாணசபைகள் கலைக்கப்பட்டபோது முதலமைச்சர்களாக இருந்தவர்களையே கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைகளுக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாக மீண்டும் நிறுத்தவுள்ளதாக ஆளும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு இன்று வியாழக்கிழமை கூறியது. Read the rest of this entry »
சிவசங்கர் மேனன் கோதாபயவுடன் இன்று பேச்சு
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் சிவசங்கர் மேனன் இன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக இலங்கை வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது . Read the rest of this entry »
தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகள் ஆயிரம் பேருக்கு இன்று நியமனம்
1000 இரண்டாம் நிலை பாடசாலைகளுக்கு தகவல் தொழில்நுட்ப பட்டதாரி ஆசிரியர் நியமனங்களும், டிப்ளோமா பட்டதாரிகளுக்கும் ஆசிரியர் நியமனங்களும் வழங்கும் வைபவம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறு கிறது. Read the rest of this entry »
யூசுப் அல் கர்ழ்தாவி எழுதிய ‘இஸ்லாமிய அரசியல்’ நூல் தமிழில் வெளிவருகிறது
நஜா: அல்லாமா யூசுப் அல் கர்ழ்தாவி எழுதிய இஸ்லாமிய அரசியல் நூல் தமிழில் மொழிமாற்றப்பட்டு வெளியிடப்படவுள்ளது. இஸ்லாமிய அரசியல் என்னும் தலைப்பில் தமிழுக்கு மொழிமாற்றப்பட்டுள்ள இந்த நூலின் வெளியீடு எதிர்வரும் வியாழகிழமை இல. 77, தெமடகொட வீதி, கொழும்பு 09இல் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் மாலை 6.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. Read the rest of this entry »
சவூதிப் பணியாளருக்கு மதச் சுதந்திரம் மறுக்கப்படுகிறதாம்!
சவூதி அரேபியாவில் தொழில்புரிந்து வரும் இலங்கை தொழிலாளர்கள் தமது மத வழிப்பாடுகளில் ஈடுபடும் சுதந்திரம் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கையை சேர்ந்த தொழிலாளரி ஒருவர் புத்தர் சிலை ஒன்றை வழிப்பட்டு கொண்டிருந்த போது, Read the rest of this entry »
கிழக்கில் “முஸ்லிம் முதலமைச்சர்” ஒருவரை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அரசாங்கம்.
அப்துல் ரசாக் (ஏறாவூர்)-லண்டன்.
கடந்த மார்ச் 22 யில் இலங்கைக்கு எதிராக ஐ நா.மனித உரிமைப் பேரவையினால் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க தேசிய ஆலோசனைக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானங்களை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா வும் ஏனைய மேற்குலக நாடுகளும் ஒருபுறம் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், Read the rest of this entry »
மூதூரில் நெற் செய்கை நீர் இன்மையால் பெரும்பாதிப்பு
எஸ்.எச்.அமீர்: மூதூர் பிரதேச செயலகப் பரிவிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் சிறு போக நெற் செய்கை நீர் இன்றி பெரும்பாதிப்புக்குள்ளாகி வருகின்றது. மகாவலி கங்கையிலிருந்து கிடைக்கப்பெறும் நீரை நம்பியே இப்பரதேசத்தில் சிறுபோக நெற்செய்கை இடம்பெற்று வருகின்றது. Read the rest of this entry »
ரிவிர முஸ்லிம் சமூகத்தினை புன்படுத்தியுள்ளது
இர்ஷாத் றஹ்மத்துல்லா: மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அஸ்ஸஹீத் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் குறித்து சிங்களப் பத்திரிகையான ரிவிர வெளியிட்டுள்ள கருத்துக்கள் முஸ்லிம் சமூகத்தினை புன்படுத்துவனவாக அமைந்துள்ளதுடன்,ஒருவர் மரணித்த பின்னர் அவர் மீது அவதுாறு செலுத்துவதை சகோதரத்துவத்தை Read the rest of this entry »
ஜனாதிபதி முர்ஸிக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் வாழ்த்து
F.M.பர்ஹான்: எகிப்து நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள முஹமட் முர்சி அவர்களிற்கு சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான Read the rest of this entry »
புறக்கோட்டை வர்த்தகரிடம் 21 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற பொலிஸார் இருவர் கைது
சலீம் பைரூஸ்: புறக்கோட்டை பகுதியிலுள்ள முஸ்லிம் வர்த்தகரொருவரிடம் 21 இலட்சம் ரூபா கப்பம் பெற்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் மோசடி தவிர்ப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகரையும் பொலிஸ் கான்ஸ்டபிளையும் ௭திர்வரும் 06ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read the rest of this entry »
‘ஊடகங்கள் மீதான கெடுபிடிகள் ஓய்ந்தபாடில்லை’
BBC Tamil: இலங்கையில் ஊடகவியலாளர்களை அரச புலனாய்வுப் படையினர் பின்தொடர்ந்து செல்லும் அச்சுறுத்தல்கள் தொடர்வதாக ஊடக அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.இதேவேளை, சில தமிழ் செய்தி இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். Read the rest of this entry »
அஷ்ரப் பௌத்த சொத்துக்களை நாசமாக்கியதால் ஆகாயத்தில் தீயினால் சுட்டுப் பொசுங்கினாராம் :ரிவிர
F.M.பர்ஹான், அஸ்லம் அலி: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் உடைய மர்ம மரணம் தொடர்பான துப்பு இன்னும் துலக்கப்படாத நிலையில், அது தொடர்பான புதிய கண்டுபிடிப்பொன்றை இம் மாதம் 24 ஆம் திகதி பிரசுரமான ‘ரிவிர’ என்ற சிங்களப் பத்திரிகையின் ஞாயிறு வெளியீடு அதன் 27 ஆம் பக்கத்தில் கட்டுரையாக பிரசுரித்துள்ளது. Read the rest of this entry »
சிசல்ஸ் நாட்டின் உயர் ஸ்தானிகருடன் அமைச்சர் ரிஷாத் சந்திப்பு
இர்ஷாத் றஹ்மத்துல்லா: இந்தியாவுக்கும்.இலங்கைக்குமான சிசல்ஸ் நாட்டின் உயர் ஸ்தானிகர் வேவன் வில்லியன் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீனை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது இலங்கையின் வங்கித் துறையில் Read the rest of this entry »
ஒற்றுமைப்பட்டால் முஸ்லிம் முதலமைச்சரையும் 22 உறுப்பினர்களையும் இலகுவாகப் பெற முடியும்
அஸ்லம் அலி: எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் ஸ்ரீலங்கா முஸ்லிம்களின் வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் களமாகும். முஸ்லிம்களின் வாழ்வியல் இருப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட சமூக, அரசியல் உரிமைகளுக்கு உத்தரவாதம் வழங்கப்போகும் தேர்தல் களமாக இது இருக்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
பிராந்திய அரசியலிலேனும் முஸ்லிம்கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படவேண்டும்
அஸ்லம் அலி: பிராந்திய அரசியலிலேனும் முஸ்லிம்கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என முஸ்லிம் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகப் பிரதி அமைச்சருமான பசீர் சேகுதாவூத் தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் இலங்கை முஸ்லிம்கள் ஒரு முக்கியமான அரசியல் சக்தியாக மிளிரவேண்டுமாக இருந்தால் கிழக்குத் தேர்தலிலும் Read the rest of this entry »
மாதம்பையில் இரத்ததான நிகழ்வு
பஷீர் அலி: இலங்கை ஜமாத்தே இஸ்லாமி மாதம்பைக் கிளையின் ஏற்பாட்டில் கடந்த 2012.06.23ஆம் திகதி மாதம்பை அல்மிஸ்பாஹ் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில்இரத்த தான நிகழ்வு இடம் பெற்றது.காலை 9.00 மணி முதல் பி.ப 3.00 மணி வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் Read the rest of this entry »
பெளத்த மத குழுக்களுக்கும் மோதல் ,அரசுக்கு இரண்டு வார கால அவகாசம்
காலி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சமஸ்த லங்கா சிறி சுமேத சங்கமய என்ற புதிய பௌத்த வழிபாட்டு நிலையத்தை அகற்றுவதற்கு பௌத்த பிக்குகளின் அமைப்பு அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசத்தைக் கொடுத்துள்ளது.கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அரசுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »
பாகிஸ்தான் புதிய பிரதமருக்கு ரவூப் ஹக்கீம் வாழ்த்துச் செய்தி
அஸ்லம் அலி ,F.M.பர்ஹான்: வரலாற்றில் மிகவும் இக்கட்டான ஒரு காலகட்டத்தின் பாகிஸ்தானில் சமாதானத்தையும், சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதற்கு புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ராஜா பர்வேஸ் அஷ்ரப் உரிய பங்களிப்பை நல்குவாரென தாம் நம்புவதாக நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் Read the rest of this entry »
முர்ஸியின் வெற்றி, அரபுலகில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்த வல்லதாக அமையும்
அஸ்லம் அலி: எகிப்தின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தை சேர்ந்த முஹம்மத் முர்ஸியின் வெற்றி, அரபுலகில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்த வல்லதாக அமையும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். Read the rest of this entry »
முர்ஸியின் வெற்றி நீதிக்கும் நியாயத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்
எஸ்.அஷ்ரப்கான் :எகிப்து நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள முஹம்மத் முர்சி அவர்களுக்கு அகில இலங்கை உலமா கட்சி வாழ்த்துச்செய்தி அனுப்பி வைத்துள்ளது. உலமா கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் அவர்களால் அனுப்பி வைக்க்ப்பட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, Read the rest of this entry »
இஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தில் நூலகங்கள்
பர்ஹான் மன்ஸுர்
உலகில் தோன்றிய நாகரிக எழுச்சிகளுக்கும் பண்பாட்டுப் புரட்சிகளுக்கும் பின்னால் குறைந்தபட்சம் ஒரு புத்தகமாவது இருந்திருக்கும் என்றால் அது மிகையாகாது. மத்திய கால முஸ்லிம் தேசம் அறிவியற் துறையில் தலைநிமிர்ந்து நின்றமைக்கும் மத்திய கால ஐரோப்பியர் இருளில் மூழ்கிக் கிடந்தமைக்கும் இடையில் பிரிகோடாக அமைந்தது வாசிப்புப் பழக்கமே. ஐரோப்பிய அரண்மனைகள் ஏமாற்று வித்தைகளினதும் மூட நம்பிக்கைகளினதும் Read the rest of this entry »
பெண்ணியம் -அறிய வேண்டிய சில விடயங்கள்
முஹம்மத் ஜான்ஸின்
இஸ்லாம் பெண்களுக்கு பொருளாதார ரீதியான உரிமைகளை வழங்கியது போலவே அவளுக்க பொருளாதார ரீதியிலான பொறுப்புக்களையும் கடமைகளையும் விதித்துள்ளதைக் காண்கிறோம். இந்த பொறுப்புக்களையும் கடமைகளையும் உரிய முறையில் நிறைவேற்றும்போது தான் இஸ்லாமிய சமூகம் அதன் மூலம் மகத்தான பயன்களை பெறுகிறது என்பதில் சந்தேகமில்லை. Read the rest of this entry »
இஸ்லாஹிய்யா பழைய மாணவர் ஒன்று கூடல்
பஷீர் அலி:மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியில் கற்று வெளியாகிய கல்லூரியின் அனைத்து மாணவர்களுக்குமான OBA ஒன்று கூடல் நிகழ்வு எதிர்வரும் ஜூலை 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, இல. 77, தெமடகொட வீதி, கொழும்பு 09இல் அமைந்துள்ள இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைமையகமான தாருல் ஈமானில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர். Read the rest of this entry »
மன்னார் ஆயரும் முஸ்லிம் சமூக பிரதிநிதிகளும் சந்திப்பு
எம் .ஷியாம்: கடந்த சனிக்கிழமை மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகைக்கும், மன்னார் முஸ்லிம் சமய. சமூகத் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பிற்கான ஏற்பாடுகளை சர்வமத அமைப்பு செய்துள்ளது. Read the rest of this entry »
அரசின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் ?
M.ரிஸ்னி முஹம்மட்: அரசின் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது இன்னும் தீர்மானிக்கப் படவில்லை. ஒரு தனிநபரை சொல்லி பிரசாரம் செய்து வாக்குகளை பெரும் முயற்சியில் அரசாங்கம் இறங்கும் என்று நான் கருதவில்லை என பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் lankamuslim.org க்கு தெரிவித்தார். Read the rest of this entry »
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் இல்லை
M.ரிஸ்னி முஹம்மட்: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் எந்த பேச்சும் இடம்பெறவில்லை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் lankamuslim.org க்கு தெரிவித்தார். உதயன் பத்திரிகை 23.06.2012. அன்று :’நில மீட்புப் போரில் மு.காவும் கூட்டமைப்புடன் குதிக்கிறது: Read the rest of this entry »
முர்ஸிக்கு பராக் ஒபாமா வாழ்த்து
எகிப்திய ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற முர்ஸிக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன்போது எகிப்துக்கான அமெரிக்காவின் ஆதரவு தொடரும் எனவும் ஒபாமா உறுதியளித்துள்ளார் .’ஜனநாயகத்தை நோக்கிய எகிப்தின் மாற்றத்திற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவியளிக்கும் எனவும் எகிப்திய Read the rest of this entry »
தீர்வில் பங்கு கோரும் முஸ்லிம் தலைவர்கள், போராட்டத்திலும் பங்கு பெற வேண்டுமாம்
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு வரும்போது அதில் தமக்கும் பங்கு வேண்டும் என்றும், தாமும் பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பினர் என்றும் உரிமை கோரிக்கை விடுக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், தீர்வை தேடி தமிழ் கட்சிகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடத்தும் போராட்டங்களிலும் பங்கு பெற வேண்டும். Read the rest of this entry »
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் இலவச பயிற்சி
எஸ்.அஷ்ரப்கான்: கல்முனை கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் இலவச பயிற்சிக் கருத்தரங்கு அண்மையில் சாய்ந்தமருது கொம்டெக் உயர் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றபோது பிரதம அதிதி பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், Read the rest of this entry »
வெள்ளை மணல் கிராம முஸ்லிம் மீனவர்களுக்கு பாரபட்சம் ?
எஸ்.எச்.அமீர் : திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வெள்ளைமணல் கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த முஸ்லிம் மீனவர்கள் தமக்கு மீன்பிடித்தலுக்கு நீண்ட காலமாக விதிக்கப்பட்டுவந்த கட்டுப்பாடு இற்றைவரை தளர்த்தப்படாதது குறித்து விசனம் தெரிவித்துள்ளனர். திருகோணமலை மாவட்டத்திலுள்ள மீனவர்களுக்கு நீண்டகாலமாக மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதில் கட்டுப்பாடுகள் Read the rest of this entry »
இஸ்லாமிய வறையறைகளுக்குள் நின்று முஸ்லிம் பெண்கள் இன்று அரசியலில் ஈடுபடுகின்றனர்
F.M.பர்ஹான்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்கு முஸ்லிம் பெண்களின் பங்கு முக்கியமானதாகும் என காத்தான்குடி நகர சபையின் உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா தெரிவித்தார் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலமர்வு பொத்துவிலில் கடந்த வாரம் நடைபெற்ற போது அங்கு உரையாற்றகையிலேயே சல்மா அமீர் ஹம்சா Read the rest of this entry »
கடந்த வருட இசெட் புள்ளி கணிபபீட்டு முறையை இரத்து செய்யுமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவு
கடந்த வருடம் நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கான இசெட் புள்ளிகளை புதிய மற்றும் பழைய திட்டத்தின் அடிப்படையில் வெவ்வேறாக கணிப்பிடுமாறு உயர் நீதிமன்றம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது. Read the rest of this entry »
பௌத்த மதப் பிரிவுகள் மத்தியில் மோதல்
காலியில் புதிதாக அமைக்கப்பட்ட பௌத்த மதப் பிரிவு ஒன்றின் மீது பௌத்த பிக்குகளும், சிங்களவர்களும் தாக்குதல் நடத்தியுள்ளனர். காலியில் உள்ள வந்துரம்ப என்ற இடத்தில் நேற்று (24) மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்கு புதிய பௌத்த மதப் பிரிவான சுமேத சங்கமயவின் சார்பில் ஏழு மாடிக் Read the rest of this entry »
முஜிபுர் ரஹ்மானுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அரசாங்கத் தரப்பால் “மரண அச்சுறுத்தல்’
முஸ்லிம் மக்களின் உரிமைக்காகவும், மதச் சுதந்திரத்திற்காகவும் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், அரசாங்கத் தரப்பால் “மரண அச்சுறுத்தல்’ ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன இது தொடர்பில் இலங்கையிலுள்ள இஸ்லாமிய தூதரகங்களிற்கும், Read the rest of this entry »
ஹூனைஸ் பாருக்,மனித உரிமை அமைப்பின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்
இர்ஷாத் றஹ்மத்துல்லா: வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான ஹூனைஸ் பாருக்,மனித உரிமை அமைப்பின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆலோசனைக் குழுவின் ஏனைய ஆலோஷகர்களாக பிரதமர் தி.மு.ஜயரத்ன. பாதுகாப்பு செயலாளரின் இணைப்பு செயலாளர் லெஸ்லி குணவர்தன ஆகியோர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். Read the rest of this entry »
‘அம்பாறையில் மக்களிடம் கையளிக்கப்படாத சுனாமி வீடுகள்’
BBC Tamil: இலங்கையில் 2004 ம் ஆண்டு சுனாமியின் போது இருப்பிடங்களை இழந்த முஸ்லிம்களுக்காக சவுதி அரேபியா அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் இதுவரை உரியவர்களிடம் வழங்கப்படாமல், கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. Read the rest of this entry »
கலாநிதி முஹமத் முர்ஸி ஜனதிபதியாக வெற்றிபெற்றுள்ளார்
ஏ.அப்துல்லாஹ்:இணைப்பு-2 கலாநிதி முஹமத் முர்ஸி வெற்றிபெற்றுள்ளார் என்று எகிப்து தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது . எகிப்திய ஜனாதிபதி தேர்தல் உத்தியோகபூர்வ முடிவு சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சித் தலைவர் கலாநிதி முஹமத் முர்ஸி வெற்றிபெற்றுள்ளார். Read the rest of this entry »








