புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு
உலக நாடுகள் சர்வதேச புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு: இலங்கை இம்மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் ஜீன் மாதம் 16 ஆம்திகதி வரையான தினங்களை புகைத்தல் மற்றும் மது ஒழிப்பு தினங்களாக அனுஸ்ட்டிக்கவுள்ளது. மேற்படி நிகழ்வினை அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகளை இலங்கை சமூர்த்தி அதிகாரசபையின் சமூக அபிவிருத்தி பிரிவு மேற்கொண்டுள்ளது.
இக்காலப்பகுதியில் புகைத்தல் மற்றும்மது விற்பனையை தடுக்கும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள், விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் சமூர்த்தி அதிகார சபையின் சமூக அபிவிருத்தி பிரிவு மேற்கொள்ளவுள்ளது.







