சிங்கள தப்ஹீமுல் குர்ஆன் அதை வாசிக்கக் கூடிய அனைத்து தலைவர்களுக்கும் வழக்கும் திட்டம்
முஹம்மத் அம்ஹர்: சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்ட தப்ஹீமுல் குர்ஆன் விளக்கவுரை இலங்கையில் அதை வாசிக்கக் கூடிய அனைத்து சிங்கள தலைவர்களுக்கும் கையளிக்கப்படவுள்ளது. இதன் முதற்கட்டமாக சப்ரகவ மாகாணத்தில் கேகாலை மாவனெல்லை பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட அல்குர்ஆன் விளக்கவுரை சப்ரகவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்திற்கு கையளிக்கும் நிகழ்வு கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாவனெல்லையில் இடம்பெற்றது .
1989ஆம் ஆண்டு ஜமாஅத்தே இஸ்லாமியினால் வெளியிடப்பட்ட தப்ஹீமுல் குர்ஆனின் ஸூரதுல் பாதிஹா, அல்பகரா ஆகிய இரண்டு ஸூராக்களும் சிங்கள மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன .அதன் பின்னர் 2000ஆம் ஆண்டு முதல், ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் அமீர் மௌலவி ஏ.எல்.எம். இப்றாஹீம் அவர்களின் தலைமையில் ஒரு குழு தப்ஹீமுல் குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டது.
இந்தக் குழு 11 வருடங்கள் தொடராக மேற்கொண்ட முயற்சியால் இப்பணி கடந்த 18.08.2011 (1432 ரமழான் மாதம் 17ஆம் நாள்) நிறைவுற்றது மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களால் உருதுமொழியில் எழுதப்பட்ட தப்ஹீமுல் குர்ஆன் விளக்கவுரை தமிழ்மொழிக்கு மாற்றம் செய்யப்படுவதற்கு முன்னர் சிங்கள மொழிக்கு மாற்றப்பட்டது.
கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற தப்ஹீமுல் குர்ஆன் வெளியீட்டு விழாவில் பிரதமர் டி.எம்.ஜயரத்ன பிரதம அதிதியாக கலந்துகொண்ட நிகழ்வில் பிரதம பேச்சாளராக களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ஜயந்த செனவிரத்னவும் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது .
மேற்படி அல்குர்ஆன் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு சிங்கள தலைவர்களுக்கு வெளியிடும் நிகழ்வை முதலாவதாக சப்ரகவ மாகாணத்தில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி மாவனெல்லையில் நடத்துவதற்கு தீர்மானித்தது. இதன்போதே குர்ஆனின் பிரதியை என்.டி.எம். யூசுப் முதலமைச்சர் மஹிபால ஹேரத்திடம் கையளித்தார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் அத்தாவுட செனனிவ ரத்ன, பிரதி அமைச்சர் லலித் திசாநாயக்க, முன்னாள் அமைச்சர் சந்ராரணதுங்க முன்னாள் இராணுவத் தளபதி சிறில் ரணதுங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இது தொடர்பான முந்திய செய்தி:
இன்று முதலாவது சிங்கள மொழிமூல அல் குர்ஆன் விளக்கவுரை வெளியீடு







