ஏன் இந்த படுகொலை ??????
எம்.எச்.முஹம்மத் புத்தளம்
‘எல்லாம் முடிந்சு போச்சுறு எங்க போய் அழுதும் அவங்க வரப்போரதில்ல திரும்பி’”……..இத்தா அனுஸ்டித்த வண்ணம் இப்படி அழுகிறாள் ஒரு புத்தளத்தின் பெண். பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர் மூன்று பிள்ளைகளை தன்னந்தனியே வளத்தெடுக்க வேண்டிய தலையாய பொறுப்பை சுமந்த வண்ணம் வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். தனது கணவரின் படுகொலையின் பின்னனி இன்று வரை எது என்று சரிவர அறிய முடியாமல். ஹட் நிஸ்தார்(HUT) என புத்தளம் நகரில் எல்லோராலும் பரவலாக அறியபட்டவர்.
போதை வியாபார புத்தள மாபியாக்களாள் புத்தளம் நகரம் இருண்டு கிடந்த காலப்பகுதியில் குடுவின் தாக்கத்திற்க்கு உட்பட்வர்களை திருத்தி எடுக்கும் சமூக பணியில் துணிச்சலாக முன்நின்று உழைத்த மனிதன் முஹம்மத் நிஸ்தார். இன்று புத்தளத்தில் உயிறுடன் இல்லை. இவர் உயிர் மீது யாருக்கு அதிகம் தேவையிருந்நது என்பது ஆராயப்பட வேண்டிய விடயம் ஆகும்.
துணிச்சல் ஒட்டிப்பிறந்தது பயம் தெரியாது இப்படி இவரை நன்கு அறிந்தவர்கள் இலகுவாக அடையாளப்படுத்தலாம். புத்தளத்தின் கடைசி நோன்பின் இறுதி பத்து தினங்களை ஆட்கொண்டு இருந்த கீரிஸ் மனிதர்கள் பீதி அதனால் ஏற்பட்ட விபரீதமும் பொலிஸ் கான்ஸ்டபில் நவரட்ண பண்டாரவின் உயிரை அநியாயமாக பறித்து கொண்டது. புத்தளத்தின் நோன்பு பெருநாட்கள் வரலாற்றில் ஒரு போதும் இல்லாத பயமும் எந்த அநியாயமும் செய்யாமல் ஊரே சுமந்து நின்ற குற்றவுனர்வும் யாராலும் இன்றுவரை இலகுவில் மறக்க முடியாதது.
பீரங்கிகலால் சுழப்பட்ட புத்தளத்து முஸ்லிம்களை பற்றி மூச்சுக்கூட விடதா நிலையில் ஒட்டு மொத்த முஸ்லிம் அரசியல் தலைமைகளும் பதுங்கியிருந்த வரலாறும் மறக்க முடியாத ஒன்றெனலாம். கிரீஸ் மனிதனர்கள் பீதியினால் புத்தளத்தில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னனியோடு தொடர்புபடுத்தி நிஸ்தார் என்ற மனிதரின் உயிருக்கு விபரீதம் ஏற்படுத்தபட்டதா?? என்பது ஊரில் நிலவும் பலத்த சந்தேகம் எனலாம். இது தவிர பல விடயங்கள் இவரின் கொலை தொடர்பாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. 02-01-2012 அன்று இரவு 8.10 மணியளவில் வீட்டில் இருந்து நரக்கள்ளியை சேர்ந்த சுதா மற்றும் இருவருடன் ஆட்டோவில் புறப்பட்டவர் புத்தளம் மன்னார் வீதியில் மோயா குடிநீர் விற்பனை நிலையத்திற்க்கு அருகில் வெள்ளை வானில் வந்தோரால் கடத்தபட்டுள்ளார் என தெரிவிக்கபடுகிறது. பின்னர் முஹம்மத் நிஸ்தார் ஆனமடுவ – சிலாபம் வீதியில் அமைந்துள்ள ரம்பாவேவ எனும் இடத்திற்க்கு அருகில் சடலாமாகவே மீற்கபட்டார்.
பலத்த திட்டமிடலுடன் சகல பலமும் பொருந்திய ஆயுத குழுவினராலேயே இது போன்ற அநியாய மனித படுகொலை செய்யமுடியும். அது யார்? எதற்க்காக? என்னபது தான் கண்டரிய வேண்டிய நீதி. அதிகாரம் மிக்க முஸ்லிம் அரசியல் தலைவரின் பின்னனியில் கொலை செய்யபட்டதாக நம்படும் பட்டானி ராசிக் படுகொலையில் அசுர வேகத்தில் போராடி அல்லது இன்று வரை போராடிக்கொண்டிருக்கும் புத்தளம் பெரியபள்ளி தலைமைத்துவம் இதர ஊரின் நலன் விரும்பிகளும் இதே மண்ணில் பிறந்த நிஸ்தார்; தொடர்பாக என்ன நிலைப்பாட்டினை கொண்டிக்கிறது என்பதை வெளிபடுத்த வேண்டும். புத்தளத்தின் பாமர மக்களை பொறுத்தவரையில் பட்டானி ராசிக் விடயத்தில் அசுர வேகம் காட்டிய பள்ளி தலைமைத்துவம் படுகொலை செய்யபட்ட நிஸ்தார் விடயத்தில் ஆமை வேகத்தில் போராடியாவது அவரின் படுகொலையின் சூத்திரதாரர்களை நீதியின் கூண்டில் ஏற்ற முன்வர வேண்டும்.
பட்டானி ராசிக் விடயத்தை (LLRC)அறிக்கை ஊடாக உலகம் அறிய செய்யத பெருமைக்குரிய வெற்றிக்கு உரித்துடையவர்களாக இருக்கும் புத்தளம் பெரிய பள்ளிளியும் ஊராரும் கண்ணீருடன் இருக்கும் ஒரு புத்தளத்து முஸ்லிம் தாய்க்கும் அவரின் பிள்ளைகளுக்கும் நியாயத்தை பெற்று தர முன்வர வேண்டும் என்பது எதிர்பார்ப்பாகும் . இதன் ஊடாக அடி மட்டம் முதல் உயர் மட்டம் வரை யாவரையும் இணைக்கும் சமூக பாலமாகவே புத்தளம் பெரியபள்ளி இயங்கும் ஒரு சமூக ஸ்தாபனம் என்பதை நிறுவிக்காட்ட வேண்டும்.
வாய்மையே வெல்லும் என்ற நீதியின் கோட்பாடு படுகொலை செய்ய பட்ட நிஸ்தாரின் விடயத்தில் எவ்வாறு அமையும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்;.








Sorry to say If some poor and innocent our community never ever caring………
Mohammed Rizvi Uvais
May 20, 2012 at 12:24 am
முகம்மத் நானானா வாழ்த்துக்கள்….
திறமையாக எழுதுறிங்க…..
ஊர்ல பள்ளிய பேசுரீங்க என்று சொல்றாங்க??உண்மையா
இது எல்லாம் நடக்கிறத அப்ப யாரு எழுதுவா??
பாணு மிகி இர்பான்
புத்தளம்
Aysha Baanu
May 21, 2012 at 3:22 pm
However Mr. Nisthar is a Muslim and one of our Puttalam people…..So, Not only grand mosque but also Puttalam political leaders like UC Chairman should take action against to the killers…If not, we all Puttalam people are in the response to answer for this murder and other crimes at the day of judgement..
on that day, criminals can never escape
farraj
May 21, 2012 at 2:31 pm