Lankamuslim.org

One World One Ummah

காலத்தின் தேவை கருதி அரசியலில் ஒன்று படுவோம்! ஹகீம், அதாவுல்லாஹ் ரிஷாத் ஆகியோருக்கு ஓர் அழைப்பு!!

with 7 comments

கலாநிதி மஸிஹுதீன் இனாமுல்லாஹ்
ரஊப் ஹகீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ், அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ், ரிஷாத் பதி தலைமையிலான மக்கள் காங்கிரஸ் மூன்று அணியினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் மாபெரும் விருட்சத்தின் கிளைகளாகவே கருதப் பாடல் வேண்டும், கடந்த கால கசப்புணர்வுகளை தொடர்ந்தும் கௌரவப் பிரச்சினைகளாக முன்னெடுத்துச் செல்லாது காலத்தின் தேவை கருதி தேசிய அரசியலில் தனித்தும் சேர்ந்தும் காய் நகர்த்துகின்ற ஒரு ஒழுங்குக்கு வருவது அவசரத் தேவையாக உள்ளது.

வடக்கில் ரிஷாத் பதி அணியினரும், அம்பாறையில் குறிப்பாக அக்கரைப் பற்றில் அதாவுல்லாஹ் அணியினரும் செல்வாக்குச் செலுத்துவதில் விட்டுக் கொடுப்புகளை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை செய்ய முன்வர வேண்டும்.! வட கிழக்கிலங்கை உலமாக்கள் , பள்ளி வாசல் சம்மேளனங்கள் எதிர் வரும் மாகான சபைத் தேர்தல்களை கவனத்திற் கொண்டு இவர்கள் மீது ஒரு அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும்.!

கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் வரும் வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதால் இருபது வருசத்திற்கு முன்னரான இலட்சியக் காங்கிரஸாக இவர்கள் ஒன்றிணைந்து களமிறங்குவது குறித்து கூடிப் பேசுதல் சிறந்ததாகும். தேசிய அரசியலைப் பொறுத்த வரையும், பிராந்திய சர்வதேச விவகாரங்களைப் பொறுத்த வரைக்கும் தமிழ் மக்களது அபிலாஷைகளுக்கு மதிப்பு அளிக்கின்ற ஒரு வேலைத் திட்டத்துடன் இவர்கள் ஒரு கூட்டு முன்னணியாக களமிறங்கி தங்களது அரசியல் பேரம் பேசும் வலிமையை மீட்டு எடுத்துக் கொண்டு அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை நோக்கிய பயணத்தில் அடுத்த சமூகங்களுக்கு நிகராக நின்று நிரந்தர சமாதான சக வாழ்விற்கான அசைக்க முடியாத அடித்தள மொன்றை கிழக்கில் இட்டுக் கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் பலமான முதன்மை வேட்பாளராக ரவூப் ஹகீம் களமிறங்க வேண்டிய நிலை முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்த வரை ஏற்பட்டிருப்பதாகவே ஊகிக்க முடிகிறது, அவ்வாறு ரவூப் ஹகீம் களமிறங்கு வதாயின் முறையே ரிஷாத் தரப்பிற்கு ஒரு அமைச்சர் பதவியும் அதாவுல்லாஹ் தரப்பிற்கு ஒரு அமைச்சர் பதவியும் வழங்க முடியும்.!

சிங்கள தமிழ் சமூகங்களுடன் பேரம் பேசி விட்டுக் கொடுப்புகளை செய்யவும் அதேபோல் வேண்டி நிற்கவும் தயாராயுள்ள நாம் ஏன் தனிப்பட்ட முறையில் நண்பர்களாயிருந்தும் நமக்குள் கௌரவப் பிரச்சினைகளுடன் கூடிய பலப் பரீட்சிகளை முன்னெடுக்க வேண்டும், ரவூப் ஹகீமை பொறுத்தவரை மத்திய அரசின் அமைச்சுப் பதவியினை துறந்து முதலமைச்சர் வேட்பாளாராக நிற்பதற்குரிய தீர்மானத்தை எடுப்பதும் மிகவும் கடினமான ஒரு விடயமாகும்.

ரவூப் ஹகீம் முதன்மை வேட்பாளாராக களமிறங்கா விடின் அந்த கூட்டணியில் எவர் முதலமைச்சர் வேட்பாளராக வர வேண்டும் என்பது குறித்தும் பல விட்டுக் கொடுப்புகளுடன் நாம் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும்! அதேபோல் எதிர்கால பாராளு மன்றத் தேர்தல் களையும் கவனத்தில் எடுத்து நாம் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ளின் இயன்ற வரை சகல தரப்புக் களினதும் அபிலாஷைகளை உள்வாங்கிய சில தெளிவான உடன் பாடுகளுக்கும் ஒருங்கிணைந்த வேலைத் திட்ட மொன்றிற்கும் எம்மால் வர முடியும்.

பிரிந்து நின்று சில்லறை வியாபாரமாக எமது அரசியலை தொடர்ந்தும் கையாளாது ஒற்றுமைப்பட்டு ஒட்டு மொத்த சமூக நன்மைகளையும் நலன்களையும் முதன்மைப் படுத்திய ஒரு முஸ்லிம் தேசிய அரசியல் வேலைத்திட்டம் ஒன்றை நோக்கி நாம் நகர வேண்டும்! தேசிய பிராந்திய சர்வதேசிய இராஜதந்திர நகர்வுகளில் நாம் தொடர்ந்தும் பார்வையாளர்களாக இருக்க முடியாது!

முஸ்லிம் சமூகம் இன்று பல்வேறு பேரின சக்திகளால் இலக்கு வைக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது, இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் இலக்கு வைக்கின்ற சர்வதேச மற்றும் பிராந்திய உளவு ஸ்தாபனங்களின் கவனமும் இலங்கை முஸ்லிம்களை குறி வைத்துள்ளமை அண்மைக்காலமாக வெகுவாக உணரப்பட்டு வருகிறது, இந்த நிலைமையில் முஸ்லிம் உம்மத்திற்கான அமானிதமான அரசியல் குழுக்களுக்கிடையிலான குறுகிய அரசியல் போட்டா போட்டியாக சூதாட்டமாக மாறுவதனை சகலவிதமான முற்போக்கு சக்திகளும், வளர்ந்து வரும் புதிய தலைமுறையினரும் ஒரு போதும் அங்கீகரிக்க மாட்டார்கள்.

மேற்படி தரப்புக்கள் உடன் படுகின்ற பொழுது அவ்வாறான ஒரு பேச்சு வார்த்தைக்கான பூர்வாங்க ஏற்பாடுகளை என்னால் செய்ய முடியும் என்பதனையும் சகல தரப்புக்களுக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்!

அஷ் ஷேய்க் கலாநிதி மஸிஹுதீன் இனாமுல்லாஹ் நளீமி

About these ads

Written by lankamuslim

May 14, 2012 at 10:58 pm

7 Responses

Subscribe to comments with RSS.

  1. அகில இலங்கை மக்கள் காங்கிரசும் முஸ்லிம் காங்கிரசும் ஒற்றுமைப்பட்டு, அரசுடன் சேர்ந்து முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடாமல் இருந்தால், முஸ்லிம் முதலமைச்சர் என்ற நிலைப்பாட்டை முஸ்லிம்கள் கைவிட வேண்டியதுதான்.

    சென்ற முறைபோல் ஒற்றுமைப்படாமல் இருந்தது போல, இம்முறையும் ஒற்றுமைப்படாமல் இருந்து, முதலமைச்சர் பதவியை வேறு இனத்திற்குத் தாரை வார்ப்போம்.

    ஒற்றுமைக்கும் நமக்கும் எட்டாக் கனிதானே!

    muslim

    May 14, 2012 at 11:10 pm

  2. better to joint together mr rishard mr athaula mr hakeem mr hisbulla , mrs ashraff all under one tree should contest to defeat the enemies

    aa

    May 15, 2012 at 12:04 am

  3. Good movement if they come under one umrella, But even they are personally close friends, in the political they are severe enemies no.

    First think community of islam and then think political advantages…

    May Allah guide you all in a good manner for doing something better to Muslims…..

    Mohamed Imthiyas

    May 15, 2012 at 10:17 am

  4. If all agreed; ACJU will charge comming election polls to whom vote and to whom not to vote. Muslim community required leader ship now.

    Mohammed

    May 15, 2012 at 2:20 pm

    • yes very good , but acji should not be politicized ,……………..

      aa

      May 16, 2012 at 12:52 am

  5. உங்களால் ஒற்றுமைப்பட முடியாத காரணம் யார் தலைவராவது என்ற பிரச்சினை தானே ? சரி அதற்கு சரியான ஒரு தீர்வு யாதெனில் உங்கள் கட்சிகளுடன் சம்பந்தப்படாத ஒருவரைத் தலைவராக ஆக்கிக் கொள்ளுவது தான் அவர் ஒரு படித்த பேராசிரியராக இருக்கலாம் அல்லது ஒரு முப்தியாகக் கூட இருக்கலாம். ஏன் அவரையே நீங்கள் முதலமைச்சராகவும் ஆக்கிக் கொள்ளலாம். ஆனால் ஒன்று மாத்திரம் உண்மை. நீங்கள் ஒற்றுமைப் படாத வரை இந்த முதலமைச்சர் பதவி வெறும் கனவு தான். நீங்கள் அனைவரும் வெறும் முதலை அமைச்சர்களாக இருக்க வேண்டியது தான் !
    அதுவும் உங்கள் ஒற்றுமை குறித்து சொல்ல விரும்புவது யாதெனில் ஒரு சிரட்டைக்குள் தவளைகளை சேகரித்து வைக்க முயற்சிப்பது போன்றதற்கு சமனாகும். உங்களால் ஒற்றுமையைப் பேண முடியாது போனால் வெகு விரைவில் நம் நாட்டில் மதரீதியாகவும் கல்வியறிவிலும் சிறந்து விளங்கும் துடிப்புள்ள இளம் சமுதாயத்தினர் ஒன்று சேர்ந்து இஸ்லாமிய அடிப்படையிலான ஒரு அமைப்பை அரசியல் அரங்கத்தில் ஏற்படுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை நமது முட்டாள் அரசியல் தலைமைகள் புரிந்து கொள்வது நல்லது. இஸ்லாமிய வரம்புக்குள்ளிருந்து கொண்டு அதனை முன்னிலைப்படுத்தும் காரியங்களுக்காக உங்களால் ஒற்றுமைப்பட முடியாவிட்டால் வேறொரு தலைமுறையை அதற்காக தயார்படுத்துவதாக அல்லாஹ் எச்சரிப்பதையும் இந்த வேலை பாழ் கட்சிகளும் தலைமைகளும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    Ossan Salam - Doha

    May 15, 2012 at 3:51 pm

  6. மார்க்கத்தில் தெளிவுள்ளவர்களே? ஒன்றுபட காணோம் இவர்களா ஒன்று பட போகிறார்கள் கிழக்கில் உதிக்கும் சூரியன் மேற்கில் உதித்தாலும் ஒன்று பட மாட்டார்கள் உலகில் எங்காவது காட்டுங்கள் பார்ப்போம் அரசியல் வாதிகள் ஒன்று பட்டதை ஈமானும் கிடையாது இஸ்லாமும் கிடையாது இதை விட்டு வேலஏய் பார்த்துவிட்டு பாமர மக்களுக்கு மார்க்கத்தை அதன் தூய வடிவில் சொன்னாலும் மறுமையில் லாவது நன்மை கிடைக்கும்…

    saleem mohideen

    October 16, 2012 at 1:15 pm


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,802 other followers

%d bloggers like this: