தம்புள்ள ரஜமஹா பீடாதிபதிக்கு எதிராக கருத்துக்கள் பதியும் நடவடிக்கை
M.ரிஸ்னி முஹம்மட்: Not In our name என்ற தலைப்பில் ஒரு வலைத்தளம் உறுவாக்கப் பட்டு இலங்கையில் தலைதூக்கி வரும் மதத் தீவிரவாத வன்முறைகளுக்கு எதிராக மக்களின் கருத்துக்களை பெரும் ஒரு நடவடிக்கையை groundviews வலைத்தளம் மேற்கொண்டு வருகின்றது.Video
இது இலங்கையில் பெரும் ஆதரவை பெற்றுவருகிறது. அதில் உங்களின் கருத்துக்களையும் பதிவு செய்யமுடியும் அப்படி பதிவு செய்வதன் ஊடாக உங்களின் மதத் தீவிரவாதிற்கு எதிரான உங்களின் வெறுப்பை வெளிப்படுத்தி அரச அதிகாரிகளை சட்ட நடவடிக்கைகளை நோக்கி தூண்டமுடியும். இந்த வலைத்தளம் தெரிவித்துள்ள விபரங்களை இங்கு தருகிறோம் .
எங்களால் என்ன செய்ய முடியும்?
தம்புள்ள ரஜமஹா விகாரையின் பீடாதிபதியால் தலைமைதாங்கப்பட்ட பிக்குகள் குழு மற்றும் வன்முறைக் கும்பல் செயற்பட்ட விதம், தகாத வார்த்தைப் பிரயோகம் ஆகியன புத்தர் போதித்துள்ள தர்மங்களுக்கு மாறானதாகும். பௌத்த தர்மத்தின் படி பௌத்த துறவியொருவரின் நடத்தை தர்மங்களிலிருந்து இந்த பிக்குகளின் செயற்பாடு முற்றிலும் முரணாக காணப்பட்டது. சிறு குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட வெட்கப்படக்கூடிய இந்த நடவடிக்கைக்காக கவலை தெரிவித்து பலர் இணையதளம் ஊடாக கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர். இலங்கை ஊடகங்களும் இந்தச் செய்திக்கு மீண்டும் முக்கியத்துவம் அளித்துவருகின்றமையை காணக்கூடியதாக இருக்கிறது.
தற்போது எம்மிடம் வாய்ப்பொன்று உள்ளது. ஆனால், நேரம் விரைவாக கடந்து செல்கிறது. உங்களுடைய பெயர், நீங்கள் கொண்டிருக்கும் கருத்துக்களை ஆங்கிலத்தில், தமிழில், சிங்களத்தில் பதிவுசெய்யுங்கள். சிறு பிரிவினரின் அடாவடித்தனத்திற்கு, இனவாதத்திற்கு எதிர்ப்புத் தெரிவியுங்கள். கீழே உங்களது பெயரை குறிப்பிட்டு வன்முறைகளை கட்டவிழ்ப்போருக்கு அடிப்படைவாத, மேலாதிக்கவாத சிந்தனையுடன் செயற்படுவோருக்கு எதிர்ப்பை தெரியப்படுத்துங்கள்.
முற்றாக அழித்துவிடவேண்டும், பாதுகாக்கப்படவேண்டும் என நீங்கள் எண்ணும் விடயங்களுக்காகப் நாங்கள் இணைந்து போராடுவோம். அச்சுறுத்தல் விடுக்கும் அடிப்படைவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுக்க போராடுவோம்.
இங்கு உங்களது பெயரைக் குறிப்பிடுங்கள். ஏனையோருக்கும் இந்தத் தகவலைத் தெரிவியுங்கள்.
அந்த வலைத்தளம் : முழு விபரத்தையும் பார்க்க:







