Lankamuslim.org

ரங்கிரி FM வானொலி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: காத்தான்குடி சம்மேளனம்

with one comment

நமது செய்தியாளர் : கலவரங்களையும் இன வாதத்தினையும் தூண்டும் தம்புள்ள ரங்கிரி FM வானொலி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என கேட்டு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இலங்கை பல்லின மக்கள் வாழ்கின்ற ஒரு நாடு இந்த நாட்டின் உயர்வுக்கு எல்லா இன மக்களை போன்றும் முஸ்லிம்கள் கணிசமான பங்களிப்பை வழங்கி வந்துள்ளனர். இந்த நாட்டின் இறைமையை போனுவதிலும், ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதிலும் மிக அக்கறையுடன் முஸ்லிம்கள் பாடுபட்டு வருகிறார்கள்.

இலங்கையின் பல பாகங்களிலும் பரந்து வாழ்கின்ற முஸ்லிம் சமூகம் தங்களது மதக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக வேண்டி பள்ளிவாயல்களின் ஊடாக சமய நடவடிக்கைகளின் ஈடுபடுவார்கள். இம்மார்க்க செயற்பாடுகள் எந்தவொரு இனத்தையும் பாதிப்பதாக அமைவதில்லை.

காத்தான்குடி பிரசேத்தை சேர்ந்த உஸ்மான் சாகிப், கச்சி முகம்மட் ஆகிய சகோதரர்களால் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் தம்புள்ளை பிரசேத்தில் தனது வியாபார ஸ்தலத்தோடு சேர்த்து தொழுகைக்கான ஒர் அறை ஒன்றையும் அமைத்ததாக வரலாற்று ஆவனங்கள் குறிப்பிடுகின்றன. தற்போதுள்ள மஸ்ஜிதுல் ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாயல் 1960ஆம் ஆண்டு பள்ளிவாயலாக நிறுவப்பட்டதற்கான சான்றுகள் காண்பிக்கின்றன.

வரலாறு இவ்வாறிருக்கின்ற போது புனித பிரதேசம் என்ற பெயரில் சில பௌத்த மத தீவிர வாதிகளால் இவ்வாறு உருவாக்கப்பட்ட பள்ளிவாயல் சேதப்படுத்தப்பட்டதன் காரணமாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் மிக வேதனையடைகின்றார்கள். இவ்வாறான செயற்பாடுகள் இனிவரும் காலங்களிலும் இடம் பெறக்கூடாது என்பதுடன் மேற்படி ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாயல் சேதமாக்கப்பட்டது சம்பந்தமாக கீழ் வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கூறிக் கொள்ள விரும்புகிறது.

மஸ்ஜிதுல் ஹைரியா ஜும்ஆப் பள்ளிவாயல் தற்போது இருக்கும் அதே இடத்திலேயே இருக்க வேண்டும். இது தொடர்பிலான மேலதிக முடிவுகள், நடவடிக்கைகள் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாவின் அனுசரனையுடன் மேற் கொள்ளப்பட வேண்டும். சட்ட விரோதமாக இச் செயற்பாட்டில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். கலவரங்களையும் இன வாதத்தினையும் தூண்டும் தம்புள்ள ரங்கிரி எப்.எம்.உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

எனவே இந் நாட்டில் இன முரண்பாடுகளை தோற்றுவிக்கக்கூடிய மேற்படி விடயங்களை சம்பந்தப்பட்ட அரசாங்க அமைச்சுக்கள் உயர் அதிகாரிகள் அரசியல் தலைவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும் என முஸ்லிம் சமூகத்தின் சார்பில் வினயமாக கேட்டுக் கொள்கிறோம் என அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கடிதத்தின் பிரதிகள் பிரதமர் தி.மு.ஜயரட்ன, மற்றும் காணி அமைச்சர் ஜானபக பண்டார தெண்ணக்கோன் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

இம் மகஜர் கடிதம் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் காத்தான்குடி பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டு பிரதேச செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைசக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளளத்தின் செயலாளர் அஸ்ஸெய்க் டி.எம்.எம்.அன்சார் நழீமி தெரிவித்தார். – தகவல் காத்தான்குடி இன்போ

Written by lankamuslim

April 29, 2012 at 4:02 pm

One Response

Subscribe to comments with RSS.

  1. காத்தான்குடி சம்மேளனத்திற்கு முதற்கண் எனது நன்றிகள்.இனவாத கும்பல்களுக்கு இது ஒரு நல்ல பாடமாக அமையவேண்டும்.இப்படிப்பட்ட வானொலி அலைவரிசைகளை உடனடியாஹ நிறுத்துவதற்கு மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    nesan

    April 30, 2012 at 7:50 am


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 11,192 other followers

%d bloggers like this: