சனல் 4 புதிய ஆவணப்படம் மனித உரிமைகள் பேரவையில்
சனல் 4 தொலைக்காட்சி நிலையம் வெளியிட்டிருக்கும் புதிய தொலைக்காட்சி விவரண நிகழ்ச்சியொன்றை இன்று ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டம் நடை பெறும் மண்டபத்தில் உள்ள இன்னுமொரு அறையில் நடத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை சனல் 4 வீடியோ தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளரின் மனைவி இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ்ப் பெண் என்றும் இந்த சிராணி சுப்பிரமணியம் சனல் 4 தொலைக்காட்சியில் முன்னர் வர்த்தகப் பணிப்பாளராக பணிபுரிந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது







