இலங்கையில் முதலாவது சிறைச்சாலை பாடசாலை
F.M.பர்ஹான்: கொழும்பு மாவட்டத்தில் வடரெக்க சிறைச்சாலையில் உலகிலே முதலாவது சிறைச்சாலை பாடசாலைக்காண அடிக்கல் நடும் நிகழ்வு கடந்த 16-03-2012ம் திகதி சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிரி கஜதீரவின் அழைப்பின் பேரில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அமைச்சர் சந்திரசிரி கஜதீர ஆகியோர் அடிக்கல் நாட்டிவைத்ததோடு நினைவுக்கல்லையும் திறந்து வைத்தனர்.
35மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள சிறைச்சாலை பாடசாலையில் கனணி உட்பட சகல நவீன தொழில்நுட்ப வசதிகளையும் கொண்ட மூன்று மாடி கட்டடத்தில் ஒரே தடைவையில்400 பேர் கல்வி கற்க கூடிய வசதிகளை கொண்ட இந்தப் பாடசாலையில் கல்வியை கற்கக் கூடிய கல்வியை இடை நடுவில் விட்ட மாணவர்களுக்கு தொடர்ந்;து பாடசாலை கல்வியை கற்க முடியும்.
இந்நிகழ்வில் அமைச்சர் பந்துல குணவர்த்தன அமைச்சர் சந்திரசிரி கஜதீர அமைச்சின் செயலாளர் ஏ.திஸாநாயக்க புனர்வாழ்வு ஆணையாளர் டி.டப்ளியு.கொடிபிலி , மாணவர்கள் ,அமைச்சுக்களின் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.










