Lankamuslim.org

வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு முற்றாக நிராகரிப்பு

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பை முற்றாக நிராகரிப்பதமாக தீர்மானம்   நிறைவேற்றப்பட் டுள்ளது கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களைத் தலைவராகக் கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு நேற்றும் இன்றும் 17,18 ம் மட்டக்களப்பில் இடம் பெற்றுகின்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்ற அக்கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பை முற்றாக நிராகரிப்பதமாக தீர்மானமொன்று நிறைவேற்றப்டப்டுள்ளது.வடக்கு கிழக்கு இணைப்பு என்பது கிழக்கு மக்களின் சுய விருப்பதிற்கும் அரசியல் அபிலாஷை மற்றும் இறைமைக்கும் எதிரானது என்றும் இந்த தீர்மாணத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த அதன் அறிக்கையில் 13 வது அரசியல் யாப்பு திருத்தத்தின்படி அதிகாரப் பகிர்வு முழுமையாக வழங்கப்பட வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மேலும் இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டிற்கு சவால் விடுகின்ற அனைத்து விதமான முயற்சிகளையும் எதிர்ப்பதாகவும் இம்மாநாட்டில் மேலுமோர் தீர்மாணம் நிறைவேற்றப்டப்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ மற்றும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் பிரதியமைச்சர் ஜகத் புஸ்பகுமார பாராளுமன்ற உறுப்பினாகளான பைசால் காசீம்  விஜேசேகர ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர் .

படங்கள் F.M.பர்ஹான்

About these ads

Written by lankamuslim

March 18, 2012 at 10:25 pm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 8,417 other followers

%d bloggers like this: