காத்தான்குடியில் மாபெரும் கருத்தரங்கு
F.M.பர்ஹான்: இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கற்குடா, ஏறாவூர் காத்தான்குடி ஆகிய பிரதேச உலமாக்கள் கதீப்மார்கள் அல் குர்ஆன் மத்ரஸா முஅல்லிம்கள் பள்ளிவாயல் நிர்வாகிகள் மற்றும் வர்த்தகர்களுக்கான ஹலால், மக்தப், குத்பா தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பிரச்சாரக்குழு நடாத்தும் மாபெரும் கருத்தரங்கு 17-03-2012 நேற்று காலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் 4தலைப்புக்களில் விளக்கவுரைகள் நடைபெற்றது. முதலாவது விளக்கவுரையை ஹலால்- எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.இர்பான் றஹ்மாணீ இரண்டாவது விளக்கவுரையை ; நம்பிக்கையாளர்களின் பணி எனும் தலைப்பில் ஜம்இய்யதுல் உலமாவின் பிரச்சாரக்குழு செயலாளர் அஷ்ஷெய்க் எச்.உமர்தீன் றஹ்மாணீ மூன்றாவது விளக்கவுரையை மக்தப் குர் ஆண் மத்ரஸாக்களின் நடைமுறை எனும் தலைப்பில் எஸ்.எம்.நிலாம்தீன் ஹூமைதீ நாளாவது விளக்கவுரையை குத்பா எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் ஏ.எம்.அப்துல்லாஹ் மக்கீ ஆகியோர் கருத்தரங்கின் விளக்கவுரையை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்வில் கற்குடா ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் ஏ.பி.எம்.முஸ்தபா, ஏறாவூர் ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் ஏ.சி.அப்துல் மஜீத் மிஸ்பாஹி காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவர் எஸ்.எம்.அலியார் பலாஹி காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர்களான மௌலவி கவிமணி எம்.எச்.எம். புகாரி (பலாஹி) மௌலவி றிள்வான் மதனி மௌலவி அலியார் றியாதி இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் அப்துல் கபூர் மதனி மற்றும் உலமாக்கள் கதீப்மார்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் காத்தான்குடி, ஏறாவூர், கற்குடா பிரதேச கிளைகளின் உறுப்பினர்கள் ஊடகவியலாளர்கள் பள்ளிவாயல் நிர்வாகிகள் வர்த்தகர்கள் ‘மத்ரஸா முஅல்லிம்கள் என பலரும் கலந்து கொண்டனர்.













