Lankamuslim.org

One World One Ummah

தனிப்பட்ட விஜயமா உத்தியோகபூர்வ விஜயமா உறுதிப்படுத்தப்படவில்லை

with 10 comments

M.ரிஸ்னி முஹம்மட்: இலங்கையின் பிரபல அரபு மொழியில் தேர்ச்சி பெற்ற உலமாக்களான அஷ்ஷெய் றிஸ்வி முப்தி மற்றும்  அஷ்ஷெய் ஏ.சீ.அகார் முஹம்மத் ஆகியோர் நேற்று ஜெனிவா புறப்பட்டு சென்றுள்ளனர் ஆனால் அவர்கள்  அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பிரதிநிதிகளாக சென்றுள்ளார்களா அல்லது அரபு தெரிந்த பிரபல உலமாக்கள் என்ற வகையில் சென்றுள்ளார்களா என்பதை ஜம்இய்யதுல் உலமாவால்  உறுதிப்படுத்த முடியவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையில் இலங்கைக்கு சார்பாக முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை திரட்டுவதற்காக பிரபல்யம் வாய்ந்த இரண்டு முஸ்லிம் உலமாக்களை அரசாங்கம் ஜெனீவா அனுப்பவுள்ளது என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார் என்று செய்திகள் வெளியாகியிருந்தது இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் உயர் பீட முக்கியஸ்தர்களை lankamuslim.org தொடர்பு கொண்டபோது அஷ்ஷெய் றிஸ்வி முப்தி மற்றும்  அஷ்ஷெய் ஏ.சீ.அகார் முஹம்மத் ஆகியோர் நேற்று ஜெனிவா புறப்பட்டு சென்றுள்ளதை அவர்கள் உறுதிபடுத்தினர். ஆனால் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பிரதிநிதிகளாக சென்றுள்ளார்களா அல்லது அரபு தெரிந்த பிரபல உலமாக்கள் என்ற வகையில் சென்றுள்ளார்களா என்பதை அவர்களினால் உறுதிப்படுத்த முடியவில்லை.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அரசியல் நடவடிக்கைகளில் , ஈடுபடாத அமைப்பாக இன்றுவரை செயல்பட்டு வந்துள்ளது என்பது அதன் வரலாறாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

About these ads

Written by lankamuslim

March 17, 2012 at 1:28 pm

10 Responses

Subscribe to comments with RSS.

  1. //அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அரசியல் நடவடிக்கைகளில் , ஈடுபடாத அமைப்பாக இன்றுவரை செயல்பட்டு வந்துள்ளது என்பது அதன் வரலாறாகும் என்பது குறிப்பிடத்தக்கது.// I hope it continue its standard free from political affiliation !!!!

    Emg.Mufahir

    March 17, 2012 at 9:58 pm

  2. இது ACJU வின் உத்தியோக பூர்வ பயணம் !! என்றால் நிறைய எதிர்கால சவால்களை சந்திக்க வேண்டும், அரசியல் ராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபடுவது தவறல்ல ஆனால் நியாயம் என்றும் தவறு என்றும் கண்டுகொள்ளும் அணைத்து மட்டத்திலும் ACJUயின் நடவடிக்கைகள் சமமாக இருமும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் . சமநிலை தவறும் போது , அரசியல்வாதிகளின் கைப்பாவைகளாக மாறுகிறார்கள் என்று மக்கள் காணும்போது இஸ்லாமிய நடுநிலை தத்துவத்தில் ACJU தோற்று விடும் .

    அரசியல் நடவடிக்கை , அல்லது அரசியல் ராஜதந்திர நடவடிக்கை என்று இறங்கிவிட்டால் எல்லா தரப்பின் மீதும் நியாயங்கள் , நீதிகளை ஊக்குவிக்க சமமான அழுத்தங்களும் , அநியாயமான , நீதியற்ற விடயங்களை எதிர்ப்பதிலும் சமமான அழுத்தங்களும் இருக்கும்படி பார்த்து கொள்ளவேண்டும்.

    M.shamil mohamed

    March 17, 2012 at 10:11 pm

    • The trip to Gevena by the prominent Mr. Rizvi Mufthi and Aghar Muhamed from Muslim community is not wise. All knew that the LTTE was a terrorist organization. All knew that there has been long terrible war between Sri Lankan government and Tami Tigers. All knew that all Sri Lankans directly or indirectly suffered a lot. All knew the people of Sri Lanka has a breathing space now. However the question in Geneva is whether there was any war crime committed in the name of fight aginst terrorism? Whether innocent Tamils’ human rights were breached? Whether there were any crime against humanity occured? Are these two prominent Muslims eye-witness for anything? Have they conducted any investigation in this regard? Then what are they going to tell the delegates in Geneva?

      Ohh, they go to Geneva with Minister Rishad Badurutheen to interpret in Arabic whatever he says in Tamil to Arab leaders. Do not the Arab have their own men who can do English-Arabic simultaneous interpretation? Does not Minister Rishad speak English? What happend to Dr. Peris? Why cannot he do the job with full of authority? How these two think that they can make any difference? I totally agree with Mr. Shamil Mohamed. Regardless of the nature of these two men’s visit to Gevneva,it will be regarded as Rananathan’s visit to London in 1915. Think twice before you do anything dear brothers-in- Islam.

      Muhamadu Shereefu

      March 20, 2012 at 1:05 am

  3. இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை எதிர்க்க வேண்டும் என்பதில் இரண்டாம் கருது கிடையாது ஆனால் ………

    ஜெனிவாவுக்கு …………………
    அஸ்கிரிய மல்வத்த பெளத்த பீடாதிபதிகள் போகவில்லை , போப்பாண்டவரின் இலங்கைக்கான பிரதிநிதியே கிறிஸ்த மத பீட தலைமைகளோ , போகவில்லை, இலங்கை சைவ சமைய , இந்து தலைமைகள் செல்லவேயில்லை , ஏன் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா பிரதிநிதிகள் சென்றார்கள். இது முஸ்லிம் சமூகத்தின் இஸ்லாமிய தலைமையை முஸ்லிம் சமூகத்தின் அரசியல்வாதிகள் தாம் தமது கையில் எடுத்து விளையாட ஆரம்பித்துள்ளதை காட்டுகிறதா …..?

    Mazahim Mohamed

    March 20, 2012 at 10:20 am

    • We dont want to follow the above people to decide our community issues. From time immemorial we have been supporeted and committed to the national Issues. Muslim society must contribute to protect our country.

      Muise Wahabdeen

      March 20, 2012 at 8:06 pm

      • What is wrong with their comments, I 200% agreed with the above people’s comments.
        Supporting the country, contributing for the motherland are one matter all SL Muslims are doing that well now,
        But ACJU has been practicing non political affiliation on its standard, So its standard must be maintained for ever , Muslim politicians must not try to yank ACJU to their political sides .
        So my humble request to Muslim peoples political representatives not to drag to your own political agenda let it free .

        ACM.Saleem

        March 20, 2012 at 10:01 pm

  4. because the government need to get 2 gains from this. one is getting muslim world’s support. 2nd is publishing muslims as anti-americans and & anti-europes, in near future they may labeled as Muslim terrorists. this suggestion could have come from Sinhala uramaya party politicians to Mahinda toinsist muslims to act against white. but, this ACJU must have told them that they are out of politics and only for religious activities. i think this is the start for taking risk.

    niyas

    March 20, 2012 at 4:08 pm

  5. Muslim Society should give the total contribution to save our country. This is our nation we have to prove it. We know Last 30 Years what was happen to Muslim Society by this War special north and East.

    Ibnu

    March 20, 2012 at 5:04 pm

  6. Unless Sri lanka engages in a meaningful dialogue and negotiation with Tamils and Muslims for sustainable power sharing arrangenent it would become a ground for conflicts of intrests and struggles between regional an global powers at the cost of our national intrests. Successive governments deliberately ignored the aspirations an grievances of minorities which lead to legitimate external interferences and influences ! It would be the last resort for any oppressed minority ! India has come to terms with US against bialateral and multilateral interests in the region, Foreign Policy has to be reviwed.!

    Inamullah

    March 21, 2012 at 9:25 am

  7. தொடர் தேர்ச்சியாக ஆட்சிக்கு வந்த இலங்கை அரசுகள் சிறு பான்மை தமிழ் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை மதிக்காமை, சம உரிமைகளை வழங்க மறுத்தமை 30 வருட கோர யுத்தத்திற்கும் பொருளாதார பின்னடைவுகளுக்கும் சர்வதேச பிராந்திய சக்திகளின் கெடு பிடிகளுக்கும் அழுத்தங்களுக்கும் இந்த நாட்டை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது, சர்வதேச பயங்கரவாதி அமெரிக்க சர்வதேச அரங்கில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்துள்ள அக்கிரமங்கள், புலிகள் எம்மீது கட்டவிழ்த்து விட்ட காட்டு மிராண்டித் தனங்கள் எமது நடுநிலைமையான பார்வைகளில் கோளாறை ஏற்படுத்தி விடக் கூடாது, இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வு குறித்து தமிழ் முஸ்லிம் சமூகங்களுடன் இதய சுத்தியுடன் உடனடியாக பேச வேண்டும், அதிகார பரவலாக்கம் அல்லது பகிர்விற்கான ஏற்பாடுகள் மாத்திரமே இந்த நாட்டின் நிரந்தர சமாதானத்திற்கும், சக வாழ்விற்கும் வழி வகுக்கும், இன்றேல் சர்வதேச பிராந்திய சக்திகளின் எடு பிடிகளாய் மூன்று சமூகத்தவரும் அரசியற்கட்சிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் ஊடகங்களும் மாறி இந்த நாட்டை மிகவும் நூதனமான அழிவுகளை நோக்கி இட்டுச் செல்லும். அடக்கு முறைக்கு உட்படுகின்ற எந்த வொரு சமூகமும் சர்வதேச சமூகத்தின் தயவை நாடுவதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஜெனீவாவில் அமெரிக்க இந்திய நலன்கள் காக்கப் படுவதற்கு எமது தேசிய நலன்கள் விலை போயுள்ளன. சகல சமூகங்களும் விழித்துக் கொள்ள வேண்டும்.

    Inamullah

    March 21, 2012 at 9:25 am


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,510 other followers

%d bloggers like this: