மன்னார் மாவட்ட சிதைவடைந்த மதத் தலங்களுக்கு நிதி வழங்க பிரதமர் இணக்கம்
பாஸிபஹ்ஜான் :வடக்கில் மன்னார் மாவட்டடத்தில் உள்ள மதத் தலங்களை புனரமைப்பு செய்வதற்கான நிதியினை வழங்குவதற்கு பிரதமர் தி.மு.ஜயரத்ன இனகக்கம் தெரிவித்துள்ளதாக,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டதரணி ஹூனைஸ் பாருக் தெரிவித்தார்.பிரதமர் தலைமையிலான புத்தசாசன மற்றும் மத விவகாரங்களுக்கான ஆலோசனைக் குழு கூட்டத்தின் போது,இந்த உறுதி மொழியளித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் கூறினார்.
கடந்த யுத்த கால அசாதாரண சூழல் காரணமாக வடக்கில் மதத் தலங்கள் சேதமடைந்துள்ளது.தற்போது மீள்குடியேற்றம் இப்பிரதேசங்களில் இடம் பெற்றுவருகின்றது.மீள் குடியேறும் மக்களது மதக் கடமைகளுக்கு மதத்த தளங்கள் மிகவும் அவசியமாகவுள்ளதாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் பிரதமரிடம் எடுத்துரைத்தார்.
முஸ்லிம் பள்ளிவாசல்களின் விபரங்களை பெறுமாறு முஸ்லிம் சமய திணைக்கள பணிப்பாளரிடமும்,இந்த ஆலயங்கள் தொடர்பான தகவல்களை பெறுமாறு இந்து கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளரிடமும் பிரதமர் தி.மு ஜயரத்ன பணிப்புரை வழங்கியுள்ளார்.
அதே வேளை காத்தான்குடியியல் 2010 ஆம் பிரதமரினால் திறக்கப்பட்ட முஸ்லிம் சமய காலாசார திணைக்களத்தின் கிளை காரியாலயம்,எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுக்காத நிலையில் உள்ளது.குறிப்பாக அங்குநியமிக்கப்பட்டிருந்த 3 அதிகாரிகளில் இருவர் மீளப் பெறப்பட்டுள்ளனர்.அத்தோடு தேவையான அடிப்படை வசதிகளுமில்லாத நிலை காணப்படுவதாக பிரதமரிடம் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் சுட்டிக்காட்டியதும்,உடனடியாக அந்த அதிகாரிகளை நியமிக்குமாறும்,தேவையான அதிகாரிகளை மீள் நியமனம் செய்யுமாறும் பிரதமர் அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டதரணி ஹூனைஸ் பாருக் கூறினார்







