கேரளா உலமா குழு ஏறாவூருக்கு விஜயம்
பாஸி பஹ்ஜான்: இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள உலமாக்கள் குழுவொன்று நேற்று -5.3.2012- ஏறாவூருக்கு விஜயம் செய்தது. பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூதின் அழைப்பின் பேரில் ஏறாவூருக்கு விஜயம் செய்த இவர்கள் ஏறாவூர் முகைதின் ஜும்ஆ பள்ளிவாயலில் நடைபெற்ற வைபவமொன்றிலும் கலந்து கொண்டனர்.
இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள மர்கஷுல் ஸஹ்வத்துஸ் ஸுன்னியா எனும் அரபுப்பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் அபூபக்கர் அஹமட் தலைமையில் இவ் உலமாக்கள் குழு விஜயம் செய்தனர்.
இதன் போது ஏறவூரில் மர்கஷுல் ஸஹ்வத்துஸ் ஸுன்னியா அரபுப்பல்கலைக்கழகத்தின் கிளையொன்றையும் நிர்மானிப்பதற்கான இடமொன்றையும் இக்குழுவினர் பார்வையிட்டனர்.
இந்த வைபவத்தில் பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.












