பிரித்தானிய பாராளுமன்ற குழுவுடன் புத்தளத்தில் சந்திப்பு
எம்.ஆசிக்,பாஸி பஹ்ஜான்: இலங்கையின் வடக்கில் இனச்சுத்திகரிப்புக்குள்ளான முஸ்லிம்களது பிரச்சினைகள்,மற்றும் இம்மக்களது வருகையினால் அடைக்கலம் கொடுத்த புத்தளம் மக்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து பிரித்தானிய பாராளுமன்றத்தின் கன்சர்வர்டிவ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வார்ட்டன் தலைமையிலான புலம் பெயர் அமைப்பின் பிரதி நிதிகள் நேற்று கேட்டறிந்து கொண்டுள்ளனர்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய இணைப்பாளருமான ஹூனைஸ் பாருக்,புத்தளம் மாவட்ட ஜக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா ஆகியோரின் அழைப்பின் பேரில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான 8 பேரடங்கிய குழுவினர் இலங்கைக்கு வருகைத் தந்தனர். அவர்கள் இன்று இடம் பெயர்ந்த மற்றும் உள்ளுர் பிரதி நிதிகளை சந்தித்து கலந்துரையாடல்களை செய்துள்ளனர்.
இந்த கலந்துரையாடல் நேற்று மாலை இடம் பெற்றது. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான இக்குழுவில் சர்வதேச கற்கைக்கான மாணவ அமைப்பின் பிரதி நிதி ஜயன் பெரேரா –குயின்ஸ்பேரி பல்கலைக்க கழகத்தின் பழைய மாணவி-நில்மினி ஹேரத்,கேம்பிரிஜ் பல்கலைக் கழகத்தில் கற்கையினை முடித்துக் கொண்ட வைத்தியர் வேசன்தி நாயகம்,ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தனமு ஆங்கில பட்டப்படிப்பை முடித்துக் கொண்ட,சிலாஜா சுந்தரலிங்கம்,வைத்தியர அசங்க பெர்ணான்டோ,பிரித்தானிய நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆயிஷா ஆப்தீன்,வைத்தியர் வித்ய கான்தி,ஆகியோர; இக்குழவில் அங்கத்துவம் பெற்றுள்ளனர்.
கரிக்கட்டியில் அமைந்துள்ள முஸ்லிம் ஹேன்ஸ் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம் பெற்றது.கலாநிதி எஸ்.எச்.ஹஸ்புள்ளா இனச் சுத்திகரிப்பு அதன் பின்னரான நிலவரங்கள்,மீள்குடியேற்றம்,தற்போதைய பின்னடைவுகள் குறித்து விளக்கமளித்தார்.
தற்போது ஏற்பட்டுள்ள முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்ற தடைகள் குறித்து இங்கு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதுடன்,முஸ்லிம் சமூகத்தின பிரச்சினைகளை சர்வதேச மயப்படுத்தி,தேவையான வசதிகளை செய்து தர புலம் பெயர் அமைப்புக்கள் உதவ வேண்டும் என்ற பலமான கோறிக்கையும் இங்கு முன் வைக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான புலம் பெயர் அமைப்பின் பிரதி நிதிகள்,இலங்கையில் இடம் பெயர்ந்துள்ள முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து தாங்கள் அறிந்திருக்கவில்லை என்றும் இது குறித்து எதிர்காலத்தில் அதி கூடிய கவனம் செலுத்தப்படும் என்று பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் வோர்டன் தலைமையிலன பிரதி நிதிகள் இங்கு பிரஸ்தாபித்தனர்.
வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களின் அரசியல் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள், புத்தளம் சமூக செயல்பாட்டாளர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டு தமது கருத்துகளை முன்வைத்துள்ளனர் .மன்னார் அரசியல் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள், யாழ்பாணம் , கிளிநொச்சி அரசியல் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் முல்லைதீவு சமூக செயல்பாட்டாளர்கள், புத்தளம் ஜம்இயதுல் உலமாவின் தலைவர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
வடக்கில் இனச்சுத்திகரிப்புக்குள்ளான முஸ்லிம்களது வருகையினால் அடைக்கலம் கொடுத்த புத்தளம் மக்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக முன்னர் கருத்து தெரிவித்திருந்த புத்தளம் ஜம்இயதுல் உலமாவின் தலைவர் அப்துல்லாஹ் மௌலவி வடமாகாணம் திரும்பாது புத்தளத்தில் வசிக்கும் வடமாகாண முஸ்லிம்கள் தம்மை புத்தள மாவட்டத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும் அதன் மூலம் வள ஒதுக்கீடுகளை அதற்குரிய வீதத்தில் பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்று தெரிவித்திருந்தார்.














