Lankamuslim.org

One World One Ummah

சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தி:ஹிஸ்புழ்ழாஹ்

leave a comment »

F.M.பர்ஹான், எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்: சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் கௌரவ- எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் அவர்களின் சர்வதேச மகளிர் தின வாழ்த்துச் செய்தி – 2012:சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் என்ற வகையில் சர்வதேச மகளிர் தினத்திற்கு எனது வாழ்த்துச் செய்தியினை வழங்குவதையிட்டு புழகாங்கிதம் அடைகின்றேன்.

உலக மகளிர்களை சிறப்பிக்கும் வகையில் இம்முறை அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ அவர்களின் தலைமையில், இம்முறை ‘பெண் பிள்ளைகளைப் பாதுகாப்போம்” எனும் தொணிப்பொருளில் அலரி மாளிகையில் மகளிர்களினை கௌரவிக்கும் மகளிர் தின நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. இச்சந்தர்ப்பத்தில் இலங்கைப் பெண்களின் நலன்புரி மற்றும் அவர்களின் உரிமைப் பாதுகாப்பு என்பனவற்றில் எமது ஈடுபாட்டை மிகவும் சுருக்கமாக விபரிக்க விரும்புகின்றேன்.

எமது அமைச்சின் பிரதான நோக்கங்களாவன:

· இலங்கைப் பெண்களின் சமவுரிமை, பொருளாதார, சமூக, அரசியல், மற்றும் கலாச்சார ரீதியாக அவர்களுக்கான சந்தர்ப்பத்தினை வழங்குதல்.
· மகளிர்கள் எதிர்நோக்கும் பிரதான இடையூறுகளினை எதிர் கௌவதற்கு பெண்களை வலுவூட்டல்.
· பெண்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசியல் ரீதியாக சட்டங்களை வலுப்படுத்துவதுடன் கற்பழிப்பு, வேறுபாடுகள் மற்றும் சமூகரீதியான அநீதிகளை ஒழித்துக்கட்டுதல்.

சச்சரவுகளுக்கு மாத்திரம் பெண்கள் முகம் கொடுப்பவர்கள் அல்லர். ஆனால் அவர்கள் சமாதானத்தின் முன்னோடிகள்! சமாதானம் நிரந்தரமாக நிலைப்பட வேண்டுமானால் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்பதே எனது அவாவாகும்.

மீண்டும் உலகப் பெண்களின் பாதுகாப்புக்காகவும் நலன்புரிக்காகவும், ‘கற்பழிப்பை உடனே நிறுத்து” என்ற வேண்டுகோலும் பலமாக ஒலிக்கும் என்று கூறி சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர்.என்ற வகையில் எனது ஆசிச் செய்தியினை வழங்குவதனையிட்டும் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.

எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ்
சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர்.

About these ads

Written by lankamuslim

March 6, 2012 at 8:17 pm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 8,363 other followers

%d bloggers like this: