Lankamuslim.org

One World One Ummah

அரசாங்கம் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை காலதாமதமின்றி நடைமுறைப்படுத்தி..

leave a comment »

அரசாங்கம் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை காலதாமதமின்றி நடைமுறைப்படுத்தி சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும்.நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நிதி செலவிட வேண்டியதில்லை. அதே போன்று அந்த பரிந்துரைகள் அந்நிய நாடுகளினதும் அல்ல. எனவே தொடர்ந்தும் இரட்டை வேடம் போட்டு அரசாங்கம் முயற்சிக்கக்கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது .

நேற்று திங்கட்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போது கருத்துத்தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க ஜெனீவாவில் நடைப்பெறுகின்ற ஐ.நா.மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறி அரசு நாட்டு பிரச்சினைகளையும் பொது மக்களையும் திசைத் திருப்பி உள்ளது.

இராஜதந்திர ரீதியில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை பொது மக்கள் மீது சுமத்தி பெரும் துரோகத்தை அரசு நாட்டு மக்களுக்கு இழைத்து வருகின்றது.

பொது மக்களை ஏமாற்றி ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்கு எதிராகவும் வீதிகளில் போராட்டங்களை அரசாங்கம் நடத்தி வருகின்றது. இதில் அமைச்சர்களும் கலந்துகொள்-வ-தால் பெரும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசு ஒழுங்குசெய்து கொடுக்கிறது. ஆனால் நாட்டின் விலைவாசி உயர்விற்காக பொதுமக்கள் வீதிகளில் இறங்கிப் போராடும் போது கண்ணீர்ப்புகை, துப்பாக்கிச்சூடு என பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.

எதிர்வரும் நாட்களில் எரிவாயு மற்றும் பால்மா உட்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களினதும் விலைகளும் அதிகரிக்கப் போகின்றது. மின் கட்டணத்தை அதிகரித்தும் மின்சார சபை நஷ்டத்தில் இயங்குகின்றது. அத்தோடு எப்பொருட்களின் விலையை அதிகரித்தும் மேலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நஷ்டத்தில் இயங்குகின்றது. இவ்வாறானதொரு நிலையில் தமது உமைகளுக்காக மக்கள் வீதிகளில் இறங்கி போராடினால் அவர்களை தாக்கிவிட்டு மனித உரிமைகளைப் பற்றி அரசு பேசுகின்றது.

நாட்டின் இறையாண்மை கேள்விக்குறியாகும் வகையில் அந்நிய நாடுகளின் தலையீட்டை ஐக்கிய தேசியக் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. அத்துடன் தலையீட்டுக்கு தேவையான சூழலை அமைத்துக் கொடுக்கும் அரசாங்கத்தையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

அரசாங்கம் அமைத்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை காலதாமதமின்றி நடைமுறைப்படுத்தி சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும்.நல்லிணக்க ஆணைக்குழு வலியுறுத்தியுள்ள 17வது திருத்தச் சட்டத்திலான சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்து வெளிப்படைத் தன்மையை பாதுகாக்க வேண்டும்.அப்போதுதான் சர்வதேசத்திற்கும் உள்நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் நம்பகத்தன்மை வெளிப்படும் என்று தெரிவித்துள்ளார் .

About these ads

Written by lankamuslim

March 6, 2012 at 11:15 am

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 8,339 other followers

%d bloggers like this: