ஓட்டமாவடி: பிரதேச சபைக்கு புதிய உறுப்பினர்
எம்.ரீ.எம்.பாரிஸ்: ஓட்டமாவடி கோறளை பற்று மேற்கு பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியில் பேட்டி இட்டு 1016 வாக்கு களை பெற்று 8வது இடத்தில் இருத்த எஸ்.ஐ.அன்வர் ஆசிரியர் புதிய பிரதேச சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு முன்னிலையில் இருந்த எம். சகாப்தீன் என்பவர் பதவி நீக்கம் செய்யப் பட்டதனை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி கட்சி தீர்மானத்திற்கமைய புதிய பிரதேச சபை உறுப்பினராக இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவரின் சத்திய பிரமானம் முன்னால் அமைச்சரும் தற்போதைய தேசிய கைத் தொழில் அதிகார சபை பணிப்பாளர்.எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் கிழக்குமாகான சுகாதார அமைச்சர் எம்.எஸ் சுபைர் ஓட்டமாவடி கேறளை பற்று பிரதேச சபை தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் பிரதி தவிசாளர் ஏ.எம். நௌபர் ஆகியோரின் முன்னிலையில் சனிக்கிழமை 03.03.2012 அன்று மட்-மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியால பிரதான மன்டபத்தில் இடம் பெற்றது.








