Lankamuslim.org

One World One Ummah

7000 உயிரிழப்புடன் தொடரும் சிரியா மக்கள் போராட்டம்

leave a comment »

சிரியா சர்வாதிகாரி ஆஸாதிக்கும் அவரின் கட்சியான பாஸ் கட்சிக்கும் எதிரான மக்கள் ஆர்பாட்டங்கள் கடந்த இரு வாரங்களாக அதிகரித்துள்ளது. கடந்த வருடன் மார்ச் மாதம் தொடங்கிய மக்கள் ஆர்ப்பாட்டம் கடந்த ஒரு வருடமாக இடம்பெற்று வருகின்றது. இதுவை 7000 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மக்கள் ஆர்பாட்டங்களை பஷர் அல் ஆஸாத் நிர்வாகம் மிகவும் மோசமான முறையில் அடக்க முயன்ற போதும் மக்கள் எழுச்சியை அடக்க முடியாது பஷர் அல் ஆஸாத் திணறி வருகிறார் .

1963ஆம் ஆண்டு கிளர்ச்சி மூலம் ஆட்சியை கைப்பற்றிய பாஸ் கட்சிதான் சிரியாவை தொடந்தும் அதிகாரம் செலுத்தி வருகிறது.  துணூசிய, எகிப்து, ஆகிய நாடுகை தொடந்து சிரியாவிலும் மக்கள் எழுச்சி அதன் சர்வாதிகாரிக்கும் எதிராக ஏற்பட்டுள்ளது. மக்கள் எழுச்சிகள் இடம்பெற்ற துணூசிய, எகிப்து ஆகிய நாட்டின் நிர்வாகத்தை பெரும்பான்மை மக்கள் ஆதரவுடன் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் கைப்பற்றி உள்ளது , லிபியாவிலும் , யெனிலும் மக்கள் விரும்பும் ஆட்சியை நோக்கி நகர்வுகள் இடம்பெற்று வருகின்றது , சிரியாவில் மிக விரைவில் பஷர் அல் ஆஸாத் பதிவி நீக்கப்பட்டு பாஸ் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது .

சிரியாவில் எவ்வகையான போராட்டத்தையும் பொறுத்துக் கொள்ளமாட்டோம் என பஷர் அல் ஆஸாத் தெரிவித்துள்மைக்கு அமைவாக அவரின் இராணுவம் மக்கள் மீது மிகவும் மோசமான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது .

சிரியா பிரச்சினைக்கு அரசியல் பேச்சின் ஊடாக தீர்வு காண எடுக்கப் பட்டு வரும் முயற்சிகள் தொடர்ந்தும் தோல்வி கண்டுவருகிறது.  துனிஸில் நடக்கும் மாநாடு ஒன்றில் கலந்துகொள்ளும் அரபு மற்றும் மேற்கத்தைய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் சிரியாவில் உடனடியாக தாக்குதல் நிறுத்தம் அமலுக்கு வரவேண்டும் என்று கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனால் இடம்பெறும் மாநாட்டில் இரண்டு பலமான தரப்புகள் உள்ளதாகவும் ஒரு தரப்பு சிரியாவில் இராணுவ தலையீடு அவசியம் என்று தெரிவித்துள்ளது. அதேவேளை  துணூசிய போன்ற நாடுகள் அஸாத்துடன் பேசி அரசியல் தீர்வு ஒன்றை எட்டவேண்டும் என்றும் தெரிவித்துள்ளன .

சிரியாவின் நண்பர்கள் என்ற தொனிப்பொருளில் நடக்கும் இந்த மாநாடு, இறுதி முடிவும் பயனற்றதாக அமையலாம் என்று தெரிவிக்கபடுகிறது.

Written by lankamuslim

February 25, 2012 at 3:46 pm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers