29 பேர் உயிரிழப்புடன் தொடரும் ஆப்கான் மக்களின் ஆர்பாட்டம்
ஆப்கானிஸ்தானி ஐந்தாவது நாளாக இடம்பெற்றுவரும் அமெரிக்க படைகளுக்கு எதிரான ஆர்பாட்டத்தில் இது வரை 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் போது நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர் 34 பேர் காயமடைந்துள்ளனர். நேற்று வெள்ளிகிழமை மட்டும் 11 பேர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி வபாத்தாகியுள்ளனர்.Video
ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படை முகாமில் அல்குர்ஆன் பிரதிகளை எரித்து பின்னர் அவற்றை குப்பை தொட்டியில் கொண்டு கொட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் காபூல் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்கள் ஐந்தாவது நாளாக இன்று இடம்பெற்று வருகிறது.
அமெரிக்க மற்றும் ஆப்கான் படைத்தளங்களுக்கு முன்னாள் குவிந்த மக்கள் அமெரிக்கா ஒழிக, ஒபாமா ஒழிக போன்ற கோஷங்களை எழுப்பி அவற்றை நோக்கி கற்களை எறிந்துள்ளனர். இதன் போது கர்சாய்யின் சிப்பாய்கள் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர் .
இரு தினங்களுக்கு முன்னர் அமெரிக்க எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் இடம்பெற்றபோது இரண்டு அமெரிக்கப் சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். நங்காஹர் மாகாணத்தில் உள்ள அமெரிக்க-ஆப்கானிய இராணுவத் தளத்துக்கு எதிராக இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் ஆப்கானிய இராணுவ வீரன் ஒருவனால் குறித்த இரு அமெரிக்க சிப்பாய்களும் சுட்டு கொல்லப்பட்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .
அல் குர்ஆன் எரிப்பு ,அவமதிப்பு சம்பவங்கள் அமெரிக்க வதை முகாம்களில் அதிகமாக இடம்பெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது . எரிப்புச் சம்பவம் தவறுதலாக நடந்து விட்டது என்றும் அதற்காக தான் மிகவும் வருந்துவதாகவும் ஆப்கானிய ஹமீத் கர்சாயுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஒபாமா தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆர்பாட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.










allahu akber , he knew everything. fired the kuran is wrong . but they did not fired 4 purpose . this looks accident .they did apologized. they said it want happen again . allah is forgiving . so why we do not forgive this , taking protest is not solution. negotiation is the solution . dying , killing , lose of wealth , its not write. kuran always says about peace .
rizaan abubakar
February 25, 2012 at 8:35 pm
what non-sense mr. rizaan!! how you know that they did not fire Al-Quran purposely?? were you there? you dont know what happen to muslims & islam by jews, Americans & Europians? we must feel shy to not voice against this crual & barbaric actions of non-muslims. at least those afganistanis doing that voicing and we must appreciate!!
niyas
February 28, 2012 at 11:39 am