ஹஜ் பதிவுகளுக்கான கால எல்லை நீடிப்பு
இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லுகின்றவர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளு வதற்கான காலம் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்கப் பட்டிருப்பதாக சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி தெரிவித்துள்ளார். இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லுகின்றவர்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளுவதற்காக இம்மாதம் 29 ஆம் திகதி வரையும் ஏற்கனவே காலம் வழங்கப்பட்டிருந்தது.









