தந்தையின் சித்திரவதையால் வபாத்தான சிறுவன்
இம்ரான் பாரூக் : தந்தையின் சித்திரவதையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுவன் ஆபத்தான நிலையில் பதுளை அரசினர் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டு, சில மணிநேரத்தில் வபாத்தானதாக அறிய முடிகிறது. பண்டாரவளையைச் சேர்ந்த மகில்வெல்ல பகுதியின் முஹம்மத் காசிம் என்ற ஐந்து வயது நிரம்பிய சிறுவனே வபாத்தானதாகியுள்ளான். இதை தொடர்ந்து தலைமறைவான சிறுவனின் அருமை தந்தையை பண்டாரவளைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கூறப்படுவதாவது, குறித்த சிறுவனை தமது கணவனின் சகோதரியின் வீட்டில் தங்கவைத்துவிட்டு தாய் மத்திய கிழக்கு நாடொன்றிற்கு வீட்டுப்பணிப்பெண்ணாக தொழிலுக்குச் சென்றுள்ளார்.
சிறுவன் தந்தையின் பல்வேறு வகையிலான கொடுமைகளுக்கும் சித்திர வதைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளான் இந்நிலையில் இச்சிறுவனுக்கு குளவிகள் கொட்டியதாகக் கூறி,பண்டாரவளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து தியத்தலாவை அரசினர் வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்றப்பட்டு மேலும் மேலதிக சிகிச்சைக்காக பதுளை அரசினர் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு தீவிரசிகிச்சைக்குற்படுத்தப்பட்டுள்ளான். எனினும் பலமணிநேரம் சிகிச்சையின் பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் சிறுவன் வபாத்தானன்
இதேவேளை டாக்டர்களின் கூற்றுப்படி குறித்த சிறுவன் கடுமையாக துஷ்பிரயோகத்திற்கும் உட்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர் . தொடர்ந்தும் பொலிசார் மேற்படி சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
முஸ்லிம் சமூகத்திலும் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது









