Lankamuslim.org

One World One Ummah

மனித உரிமை திட்டங்களை முழுமையான அமுல்படுத்தலுக்கு யாப்பை திருத்தத் தயார்

leave a comment »

அரசாங்கம் தயாரித்துள்ள மனித உரிமை தொடர்பான செயற்பாட்டுத் திட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்காக தேவைப்பட்டால் அரசியலமைப்பு ரீதியான திருத்தம் மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவை கூட்டத்தில் மனித உரிமை தொடர்பான செயற் திட்டமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அது குறித்து சபைக்கு தெளிவுபடுத்துமாறும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கவனயீ ர்ப்புப் பிரேரணையொன்றை சமர்ப்பித்து அரசாங்கத்தை கோரியிருந்தார். இதற்கு அரசாங்கம் சார்பாக அமைச்சர் திணேஷ் குணவர்தன நேற்று பாராளு மன்றத்தில் பதில் வழங்கினார்.

மனித உரிமை தொடர்பான செயற்பாட்டுத் திட்டம் பாராளுமன்றத்திலு ள்ள விடயங்கள் குறித்து விசேட பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் ஆராய முடியும் என்று கூறிய அவர் ஆனால் ஐ. தே. க. இது வரை தமது பிரதிநிதியை நியமிக்கவில்லை எனவும் கூறினார்.

இது குறித்து அமைச்சர் மேலும் கூறியதாவது, மக்களின் மனித உரிமைகளையும் பாதுகாக்கவும் மேம்படுத்தவுமென தேசிய செயற்பாட்டுத் திட்டமொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுத்தது. மனித உரிமை தொடர்பான பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ள நாடுகள் தேசிய திட்டமொன்றை தயாரிக்க இனங்கியுள்ளன.

இதன் படி சகல விடயங்களும், பகுதிகளும் உள்ளடங்கும் வகையில் மனித உரிமை தொடர்பான தேசிய திட்டம் தயாரிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த தேசிய செயற் திட்டத்தை முன் னெடுக்க அமைச்சரவை உபகுழுவொன்றும் நியமிக்கப்பட்டது.

பேச்சுக்கள், விவாதிப்பு, கலந்துரையாடல் என்பவற்றின் பின் இந்தத் திட்டம் 2011 செப்டம்பர் மாதம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டது.

இந்த திட்டத்தை விமர்சிக்காது எதிர்க்கட்சித் தலைவர் இதனை பாராட்டியிருக்க வேண்டும். இலங்கைக்கு சர்வதேச மட்டத்தில் பாதிப்பு ஏற்படுத்தாது அண்டை நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் களைப் போன்று நம்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் முன்மாதிரியாக நடக்கவேண்டும். அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டை பாதுகாக்க முன்வர வேண்டும்.

ஜெனீவாவில் நாம் வாக்குறுதியளித்த வற்றை மீள ஜெனீவாவுக்கு கொண்டு செல்ல வேண்டும். நாட்டு மக்களுக்காகவே இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன் பிரதிபலன்களும் மக்களையே சென்றடைய வேண்டும்.

மனித உரிமை தொடர்பான செயற் பாட்டுத் திட்டம் குறித்து சபையில் பல தடவை பேசப்பட்டது. சர்வதேச உடன்பாடுகளின் அடிப்படையிலே இது தயாரிக்கப்பட்டுள்ளது என்றார். எதிர்க்கட்சித் தலைவர் வெளிநாடுகளின் பிரதிநிதி போன்று செயற்படுகிறார். சர்வதேச விவகாரங்களின்போது அரசாங்கத்துடன் இணைந்து நாட்டின் இறைமையை பாதுகாக்கும் வகையில் செயற்படுகின்றனர் என்றார்.

இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்தார் ஐ. தே. க தலைவர் ரணில் விக்ரமசிங்க, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு வின் அறிக்கை தொடர்பிலான எமது திருத்தங் களை இனப்பிரச்சினை தொடர்பான விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழு ஏற்குமானால் எமது பங்களிப்பை அந்த குழுவுக்கு வழங்கத் தயார் என்றார். இலங்கையில் யுத்தக் குற்றம் எதுவும் நடைபெறவில்லை என்றும் அவர் கூறினார்.-தினகரன் :லோரன்ஸ் செல்வநாயகம், எம். எஸ். பாஹிம்

Written by lankamuslim

February 24, 2012 at 10:24 am

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers