பாணின் விலை அதிகரிப்பு
பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது 450 கிராம் எடை கொண்ட பாணின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஐந்து ரூபாவினால் அதிகரிப்புச் செய்யப்படுவதாக அகில இலங்கை பேக்கரிகள் சங்கத்தின் செயலாளர் நிமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை ஏற்றத்தைத் தொடர்ந்து பாணின் விலையை அதிகரிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என ஏற்கனவே அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடதக்கது. பல பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் என்ற அச்சம் மக்களை ஆட்கொண்டு வருகின்றது .”பாண் விலை கூடினால் என்ன கேக் சாப்பிடலாம் தானே !!!”.









