குருநாகல் பெரிய ஜும்மா பள்ளி முன் அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஆப்கானிதானில் அல் குர்ஆன் பிரதிகளை அமெரிக்க இராணுவம் எரித்ததை கண்டித்தும் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் பேரவை அமர்வில் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளைக் கண்டித்தும். சிரியாவில் கிளர்ச்சியை தூண்டுவதை கண்டித்தும் இன்று குருநாகல் மாவட்ட முஸ்லிம் அமைப்புக்களின் ஏற்பாட்டில் குருநாகல் பெரிய ஜும்மா பள்ளி தொழுகை முடிந்ததுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுஇதில் ஆளும் தரப்பு அரசியல்வாதிகளும் கலந்து கொண்டுள்ளனர் .
இந்நகிழ்வில் குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் தலைமையில் நடைபெற்றது. இதில் அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கொடும்பாவிப் பதாதை தீயிட்டு எரிக்கப்பட்டது.













