ஒபாமாவின் மன்னிப்பு கோரல் போதுமானதா ?
ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படை முகாமில் அல் குர்ஆன் பிரதிகளை எரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் காபூல் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத் தளத்தில் அல் குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டமைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார்.
அந்த எரிப்புச் சம்பவம் தவறுதலாக நடந்து விட்டது என்றும் அதற்காக தான் மிகவும் வருந்துவதாகவும் ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாயுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இன்றும் ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் மூன்றாவது நாளாக அமெரிக்க எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது இன்று இரண்டு அமெரிக்கப் சிப்பாய்கள் கொல்லப்பட்டுள்ளனர். நங்காஹர் மாகாணத்தில் உள்ள அமெரிக்க-ஆப்கானிய இராணுவத் தளத்துக்கு எதிராக இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் ஆப்கானிய இராணுவ வீரன் ஒருவனால் குறித்த இரு அமெரிக்க சிப்பாய்களும் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் .









