மக்களை மேற்கிற்கு எதிராக வீதியில் இறங்குமாறு அரசு அழைப்பு
இலங்கைக்கு எதிரான மேற்கு உலக சக்திகளை தேசிய ரீதியில் எதிர்கொள்வதற்காக பொது மக்கள் ஒத்துழைப்பு இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவைக்கு ஆதரவு தெரிவித்தும் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நோக்கிலும் Videoஇந்த மக்கள் இயக்கம் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்.
இதன்போது மேற்கு உலககின் இலங்கைக்கு எதிரான சதிகளை எதிர்ந்து ஆர்பாட்டங்கள் இடம்பெறவுள்ளது, ஜனாதிபதி மஹிந்தவின் அரசை வீழ்த்தும் நோக்கத்துடன் அமெரிக்கா முன்னெடுக்கும் நடவடிக்கைகளை கண்டித்து கொழும்பை மையப்படுத்தியும் ஆர்பாட்டங்கள் இடம்பெறவுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன அடங்களான அமைச்சர்கள் குழு இதனை தெரிவித்துள்ளது.









