ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ளவர்கள் உடன் பதிவு செய்துகொள்ளவேண்டும்
2012 ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறை வேற்ற தயாராகவுள்ளவர்கள் இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் முஸ்லிம் கலாசார திணைக்களத்தில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் பதிவு செய்யாதவர்களுக்கு ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்வது கஷ்டமாகும் என்று நகர விவகார சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி தெரிவித்துள்ளார்.
ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்வதற்கு இவ் வருடம் தாயாராகவுள்ள அனைவரும் முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தில் 25000 ரூபா செலுத்தி தங்களை பதிவு செய்து கொள்ளவும் ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் போது செலுத்த வேண்டிய மொத்தத் தொகையில் இருந்து தாங்கள் செலுத்திய பதிவுக்கட்டணம் கழித்தே பெறப்படும் என்றும் .
முதன் முதலாக ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்வோருக்கே இம்முறை முன்னுரிமை வழங்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார் .
வாழைச்சேனை – கோறளைப்பற்று மத்தி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் நிருவாகக் காரியாலயத் திறப்பு விழா நிகழ்வு இயக்குனர் சபைத் தலைவர் எம். ஏ. சலாம் தலைமையில் திங்களன்று இடம்பெற்ற போதே சிரேஷ்ட அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.









