புத்தளம், தில்லையடியில் பழைய இரும்பு சேகரிக்கும் இடத்தில் வெடிப்பு சம்பவம்
புத்தளம் செய்தியாளர்: புத்தளம், தில்லையடி பிரதேசத்தில் இன்று பிற்பகல் பழைய இரும்பு சேகரிக்கும் வீடொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினையடுத்து பொலிஸார் நூற்றுக்கும் மேற்பட்ட செயலிழந்த செல்லுகள் மற்றும் ஆர்.பி.ஜி. ரக குண்டுகளை உந்தித்தள்ளும் பழுதடைந்த கருவிகள் என்பனவற்றை கைப்பற்றியுள்ளனர்.
இன்று பிற்பகல் குறித்த வீட்டில் பழைய இரும்புகளை காஸ் பயன்படுத்தி வெட்டிக்கொண்டு இருந்தபோது தீடீரென ஏற்பட்ட வெடிப்புச் அருகிலுள்ள தென்னை மரத்தை சேதமாக்கியுள்ளது சம்பவத்தை அடுத்து அங்கு விசாரணைகளில் ஈடுபட்ட பொலிஸாருக்கு மேற்படி வெடிப்புச் சம்பவம் அருகிலுள்ள வீடொன்றிலிருந்து வந்துள்ளது என்று பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர் . போலீசார் அங்குள்ள பொருட்களை கைப்பற்றி சென்றுள்ளனர் மேலதிக விசாரணையும் இடம்பெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
இவை வடபகுதியில் இருந்து பழைய இரும்பு வியாபாரம் செய்யும் நபர்களினால் இரும்பு விற்பனைக்காக கொண்டுவரப்பட்டவையாக இருக்கலாம் என்று பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்










