Lankamuslim.org

One World One Ummah

முஸ்லிம் அமைச்சர்களின் முயற்சிகளையும் மீறி அஷ்ரப் நகர் காணிகள் சூவீகரிக்கப் படுகிறதா ?

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: அம்பாறை மாவட்டத்திலுள்ள அஷரப் நகருக்கு உட்பட்ட 87 ஏக்கர் நிலப் பரப்பைச் சூவீகரித்து தீகவாவி யுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளதாக முறைபாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட காணிக்கு வேலியிட்டு இராணுவ முகம் ஒன்று அமைக்கபட்டுள்ளதுடன் அவ்விடத்தில் தீகவாவி எனும் பெயர் பலகையும் பொறுத்த பட்டுள்ளதாகவும் அங்கிருந்த குடும்பங்கள் படிப்படியாக இராணுவத்தினால் வெளியேற்றப் பட்டு வருவதாகவும் அஷ்ரப் நகர் ஜும்மாஹ் மஸ்ஜித் நிர்வாக செயலாளர் எஸ்.எம்.ஐனூதீன் தெரிவித்துள்ளார்.

இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக போலீசில் முறைப்பாடு செய்ய முற்பட்ட போதிலும் இராணுவத்திற்கு எதிராக போலீசில் முறையிட முடியாது எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிடும்படி தெரிவிக்கப்பட்டதை அடுத்து நீதியமைச்சர் ஹக்கீமிடம் முறைப்பாடு செய்யபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

சில மாதங்களுக்கு முன்னர் அஷரப் நகர் வீடுக்குக்குள் இரவில் நுழைந்த சீருடையணிந்த நபர்கள் பெண்களை பலவந்தம் செய்ய முற்பட்டமை தொடர்பாக அந்த பிரதேச மக்கள் முறையிட்டதாக தகவல்கள் வெளியானமை குறிப்பிடதக்கது .

அம்பாறை மாவட்டத்தில் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் அஷ்ரப் நகரின் காணிப் பிரச்சினையை பொறுத் தவரை அங்கு சட்ட பூர்வமாக வசிப்பவர்களும், சட்ட ரீதியான உறுதிப் பத்திரங்களையும், உரிய ஆவணங்களையும் தம் வசம் வைத்திருப்போரும் அங்கிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அம்மாவட்டத்திற்கு பொறுப்பான வனப் பாதுகாப்பு அதிகாரி லலித் கமகே. நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங் கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்ததாக முன்னர் செய்திகள் வெளியானமை குறிப்பிடதக்கது .

சர்ச்சைக்குரியதென கூறப்படும் பிரதேசம் எழுபத்தாறு ஏக்கர் விஸ்தீரணத்தை கொண்டது என்றும், அந்த காணிகளுக்கு சொந்தமான பதினாழு குடும்பத்தினரில் ஏழு குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட வழக்கில் அவர்களுக்கு சாதகமான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய ஏழு குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட வழக்குகள் விசாரணையில் இருப்பதாகவும் நீதியமைச்சர் ஹக்கீம் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஊடகங்களுக்கு தெரிவித்தார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

அதேவேளை கடந்த வருடம் நவம்பர் மாதம் கைத்தொழில் வணிக அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாதிபதியை சந்தித்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம் , தமிழ் மக்கள் எதிர்நோக்கும் காணி தொடர்பான விளக்கியதை அடுத்து

வடக்கு கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் காணி தொடர்பான பிரச்சினைகளைத் தீர்பதற்கு காணி அமைச்சர் , சுற்றாடல் அமைச்சர் மற்றும் வடக்கு கிழக்கு மக்களை பிரதிநிதித்துவப் படுத்தும் அமைச்சர்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளார். என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்திருந்தமையும் குறிபிடத்தக்கது .

Written by lankamuslim

February 21, 2012 at 11:53 am

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers