வட்டியொழிப்பு மாநாடு
எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்: வியாபார முறைகளில் அதிகளவு வட்டி தொடர்புபட்டு காணப்படுவதால் நாளுக்கு நாள் பலர் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் நிலை அல்லது தலைமறைவாகும் நிலை அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகின்றது. இஸ்லாம் வட்டியை “அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் போராடும் செயலாகவும்”, இந்த சுட்டிக்காட்டுவதிலிருந்தே இக்கொடிய வட்டியின் பாரதூரம் எப்படிப்பட்டது என்பதனை உணர்ந்துகொள்ளமுடியும்.
வட்டியிலிருந்து எமது சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவும் இணைந்து ஒரு மாநாட்டினை எதிர்வரும் 20.02.2012 திங்கட்கிழமை காலை 9:00 மணிமுதல் லுஹர் தொழுகை வரை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றன.







