மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் இடம்பெற்ற மீலாத் நிகழ்ச்சி
F.M.பர்ஹான்: மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி ஏற்பாடு செய்த மீலாத் தின விழா நேற்று மிக்கேல் கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி சி.எஸ்.மாசிலாமணி தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் அல்ஹாஜ். எம்.எச்.எம்.புகாரி பலாஹி கலந்து கொண்ட விஷேட உரை நிகழ்த்தினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் அல்லாத பாடசாலை ஒன்றில் மிலாது நிகழ்ச்சி இடம்பெற்றது இது முதல் தடவை என்று எமது செய்தியாளர் தெரிவிக்கிறார் .
நிகழ்வில் கௌரவ மற்றும் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு. சத்தியநாதன்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் யு.எல்.எம்.என்.முபீன் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா தலைவர் அப்துல் காதர் பலாஹி மட்.போதனா வைத்திசாலை சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் (அப்துல்) ரஹ்மான் கல்முனை ஆதார வைத்திசாலை வைத்திய அதிகாரி டாக்டர் ஜாபிர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மட்டு மாவட்ட அமைப்பாளர் றஊப் ஏ மஜீட் சட்டத்தரணி றூபி மட்டு. இஸ்லாமிய வர்த்தக நலன்புரி அமைப்பின் தலைவர் கே.எம்.எம்.கலீல் ஹாஜியார் அருட்தந்தை எக்ஸ்.வி.றஜீவன் பாதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது மிக்கேல் கல்லூரி மாணவர்களால் கிராஅத், அஸ்மாஉல் ஹூஸ்னா, மனிதர்களுக்கான இறுதித் தூதர் தொடர்பான பாடல் , மனிதர்களுக்கான இறுதித் தூதர் மாண்பு பற்றிய கவிதை, சந்தர்ப்ப துஆக்கள், ஹதீஸ் மற்றும் ஹஸீதாவும் கோலாட்டமும், நாடகம் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கடந்த மாதம் சகல அரச பாடசாலைகளிலும் மிலாது நிகழ்சிகளை பாடசாலைகள் நடாத்தவேண்டும் என்று அரசு அறிவித்தது, முஸ்லிம் அல்லாத பாடசாலைகளிலும் அதன் அதிபர்கள் முஸ்லிம் மாணவர்களுக்கு பிரத்தியோகமான மிலாது நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்று கோரும் சுற்று நிரூபம் சகல பாடசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான எமது முந்திய செய்தி:













