நாளை கிழக்கு மாகாண சபைக்கு ஆங்கீகாரம் கோரி வரும் ‘நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்ட மூலம்’
M.ரிஸ்னி முஹம்மட்
மாகாண பைகளுக்குக் கீழ்வரும் காணிகளை பௌத்த சாசன அமைச்சு சுவீகக்கும் வகையில் நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்ட மூலத்திற்கு மாகாண பைகளில் அங்கீகாரத்தைப் பெற்று அதனை பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இவ்விவகாரம் கடந்த 31.01.2012 செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண சபை மறறும் மேல் மாகாண சபைகளின் கட்சித் தலவர்களின் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
இந்த நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்ட மூலம் நாளை 2012 பெப்ரவரி 13 ஆம் திகதி கிழக்கு மாகாண சபையில் அங்கீகாரத்திற்காக முன் வைக்கப்படவுள்ளது. இச்சட்ட மூலம் நிறைவேற்றப்படுமாயின் பௌத்த சாசன அமைச்சர் மாநகர எல்லையினுள், நகர அபிவிருத்தி இடப்பரப்பினுள் அல்லது தெரு வழி வீதி அபிவிருத்தி இடப்பரப்பினுள் அரச வர்த்தமானயில் வெளியிடப்படும் கட்டளை ஒன்றின் மூலம் அவற்றை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ சுவீகக்க முடியும்.
இச்சட்ட மூலம் நிறைவேற்றப்படாமலே சிறுபான்மையினரின் காணிகள் பல்வேறு பெயர்களில் சுவீகக்கப்பட்டுள்ள நிலையில் இச்சட்ட மூலம் நிறைவேற்றப்படுமாயின் பெரிய பாதிப்புக்களை சிறு பான்மையினருக்கு ஏற்படும் என்ற நியாயனான அச்சம் கருதிகொள்ளப்படவேண்டும் .
தேசிய பௌதிக திட்டமிடல் கொள்கையின் பிரகாரம் நோக்கங்களை வென்றெடுக்க காணியை சுவீகரிக்கப்பதற்கு இந்தத் திருத்தங்கள் அனுசரணையாக அமையும்.8 மாகாணங்களின் நிர்வாகமும் ஆளும் ஐ.ம.சு.மு. வசமிருக்கும் நிலையில் உத்தேச திருத்தங்களுக்கு அவற்றின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமென அரசு எதிர்பார்க்கின்ற போதிலும் அதனை கிழக்கு மாகாண சபை எதிர்க்கும் என்று அறிய முடிகிறது . கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.
இச்சட்ட மூலம் பற்றி மூஸ்லிம் காங்கிரஸ் கருத்துகள் எதனையும் வெளியிடா விட்டாலும் கிழக்கில் சட்ட மூலத்தை எதிர்க்கும் என்று தெரிய வருகின்றது. ஆனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அடுத்த நிலையில் உள்ள கட்சிகளான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் என்பன இது தொடர்பில் எந்த கருத்துக்களையும் வெளியிடாது உள்ளது . இவ்விரு கட்சிகளின் தலைவர்கள் மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் தேவையில்லை என்று ஏற்கெனவே கூறியுள்ளார்கள். இந்நிலையில் நாடு, நகர திட்ட திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் கருத்துகளை கூறாது இருப்பது இச்சட்ட மூலத்தினையும் ஆதரிப்பதாகவே பார்க்கபடுகின்றது.
இதற்கு முன்னர் உள்ளூராட்சி அதிகார சபைகளின் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டு வருவதற்காக முயற்சிகளை அரசாங்கம் எடுத்தது. இதற்கும் மகாண சபைகளின் அங்கீகாரம் தேவைப்பட்டது. குறிப்பிட்ட திருத்தச் சட்ட மூலம் சிறுபான்மையினருக்கும் சிறுபான்மையினரின் கட்சிகளுக்கும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது.
இதனைக் கருத்திற் கொண்டு கிழக்கு மாகாண சபை இதனை கடுமயாக எதிர்த்தது . அது மட்டுமல்லாது, இச்சட்ட மூலம் பற்றிய விவாதம் கிழக்கு மாகாண சபையில் இரு முறை விவாதிக்கப்பட்டது. இறுதியாக எடுத்துக் கொள்ளப்பட்டபோது அச்சட்ட மூலம் வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாளை கிழக்கு மாகாணத்தில் இந்த நகர, நாடு திட்டமிடல் சட்ட மூலத் திருத்த அங்கீகாரம் கோரப்படவுள்ளது. மேல்மாகாண சபையில் இதற்கு ஆதரவு கிடைத்துள்ளது , மத்திய மாகாணம் சட்ட மூலம் தொடர்பாக ஆலோசனை செய்ய அவகாசம் கோரியுள்ளது. இந்த சட்ட திருத்தத்தை ஒரு மாகாணம் எதிர்த்தாலும் மேற்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நகர, நாடு திட்டமிடல் சட்ட மூலத் திருத்தத்துக்கு மாகாண சபைகளின் இணக்கப்பாடு தேவையென்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதையடுத்து மாகாண சபைகளின் இணக்கப்பாட்டைப் பெற்றுக்கொள்வதற்காக உத்தேச நகர, நாடு திட்டமிடல் சட்ட மூலத்திருத்தங்கள் தொடர்பாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார். நிலத்தின் பொருளாதார, சமூக, வரலாற்று, சுற்றாடல், பௌதிக, மத விடயங்கள் தொடர்பாக திட்டமிடுதலை மேம்படுத்தும், பாதுகாக்கும், ஒழுங்கமைக்கும் முறைமையை ஒழுங்காக்குவதை அடிப்படையாகக் கொண்டே தேசிய பௌதிக திட்டமிடல் கொள்கையை வடிவமைத்து அமுல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதே இந்த உத்தேச சட்ட மூலத்திருத்தங்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பான எமது முந்திய செய்தி:









