கிழக்கு சர்வமத குழு தெண்மாகாணத்திற்கு விஜயம்
அமீர், பர்ஹான்: சமயங்களின் ஊடாக சமாதானத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்திலுள்ள சர்வமத குழு தெண்மாகாணத்திற்கு விஜயம் செய்து சர்வமதக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன் பல் வேறு சமயத்தலைவர்கள் மற்றும் முக்கியஸ்த்தர்களையும் சந்தித்தது கலந்துரையாடியுள்ளது.
தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் கிழக்கிலுள்ள சவமத சமாதானக்குழு கடந்த 16ம் திகதி தொடக்கம் 19ம் திகதி வரை இச் சுற்றுலா விஜயத்தை மேற்கொண்டது.
கிழக்கிலிருந்து சென்ற இக் குழு குருநாகல் மற்றும் தென் மாகாணத்திலுள்ள மாத்தறை காலி ஹிக்கடுவை, வலப்பிட்டி ஆகிய இடங்களுக்கு சென்று மதத்தலைவர்கள் அரசாங்க அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன் அங்கு பல்சமய ஒன்றிய தலைவர்களையும் இக்குழு சந்தித்தது.













