உரிய நேரத்தில் தொழில் பட்டதால் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது
எம்.ரீ.ம் பாரிஸ், பர்ஹான்: ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பதுரியாநகர் – மீராவோடை கிராமத்தினை இணைக்கும் ஓடை கரை பகுதியில் 28.01.2011 சனி இரவு 6.45 மணியளவில் தென்னை மர ஓலை மிண்சார கம்பியில் விழுந்ததால் கம்பிகள் ஒன்றின்மேல் ஒன்று மோதுண்டு ஒன்றினைந்தமையினால் சுமார் 20 நிமிடங்கள் தீப்பற்றியது.
இதனை அறிந்த ஓட்டமாவடி பிரதி தவிசாளர் ஏ.எம். நௌவர் சம்பவ இடத்திற்கு உடனே விஜயம் செய்து நிலமையினை வாழைச்சேனை மின்சார சபையினருக்கு அறிவித்ததனைத் அடுத்து மின்சார சபை ஊழியர்களின் துரித செயற்பாட்டின் காரணமாக அனர்த்தம் தவிர்க்கபட்டது இதனை அடுத்து பொதுமக்கள் பிரதேச இளைஞர்கள் ஆகியோர்ஓட்டமாவடி கோ.ப.மே பிரதி தவிசாளர் ஏ.எம். நௌபர் அவர்களுக்கும், மின்சார சபைக்கும் நன்றியினைத் தெரிவித்தனர்.













