Lankamuslim.org

One World One Ummah

கிளிநொச்சியில் சிசுக்கள் கொடூர படுகொலை

leave a comment »

பெற்ற குழந்தையை கல்லுடன் கட்டி கிணற்றுள் போட்டு படுகொலை செய்தமைக்காக தாய் கைது செப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட் டு எதிர்வரும் 6 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் உள்ள பிரமந்தனாற்றில் ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் தவறான வழியில் குழந்தை ஒன்றை பிரசுவித்து குறித்த குழந்தையை கல்லுடன் கட்டி கிணற்றில் போட்டு கொலை செய்ததாக குற்றம்சாட்டி தொடரப்பட்ட வழக்கிலேயே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தான் பெற்றெடுத்த குழந்தையை வீட்டின் பின்புறம் புதைத்ததார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சி புண்ணகை புரத்தில் பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதவான் மற்றும் சட்டவைத்திய அதிகா ஆகியோர் சம்பவ இடம் சென்று விசாரணைகளை மேற் கொண்துள்ளதுடன் சிசுவின் சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை மே ற்கொள்ளுமாறு நீதவான் உத்தரவு பிறப் பித்துள்ளார். தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடபகுதியில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து செல்வதாக சுட்டிக் காட்டப்படுகிறது .

Advertisement

Written by lankamuslim

January 27, 2012 at 5:53 pm

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 67 other followers