மக்கள் எழுச்சியின் பின்னர் முதல் முறையாக எகிப்தின் புதிய பாராளுமன்றம் பதவியேற்பு
இணைப்பு-2 எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபை நேற்று பதவி ஏற்றுள்ளது. இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் செல்வாக்கு பெற்றுள்ள எகிப்து பாராளுமன்றத்தின் கீழ்சபையான உத்தியோகபூர்வமாக நேற்று பதவியேற்றுள்ளது. இது எகிப்திலும் ஏணைய நாடுகளிலும் மிகப் பெரிய கவனத்தை பெற்றுள்ளது. பாராளுமன்றத்தின் கீழ் சபை மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட 498 உறுப்பினர்களையும் இராணுவ நிர்வாகத்தால் தெரிவு செய்யப்பட்ட 10 உறுப்பினர்களையும் கொண்ட 508 மொத்த உறுப்பினர்களுடன் Videoநேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக தமது பொறுப்புகளை செயல்படுத்த தொடங்கியுள்ளது.
கீழ் சபையில் மூத்த உறுப்பினர் வப்த் கட்சியின் 81 வயது உறுப்பினர் மஹ்மூத் அல் ஸகா தற்காலிக சபாநாயகராக வீற்றிருந்து பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்தார். அதன் பின்னர் புதிய சபாநாயகராக இஹ்வானுல் முஸ்லிமீனின் அரசியல் கட்சியான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சியின் உறுப்பினர் ஸஅத் அல் கதாத்னி தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
பாராளுமன்றத்தில் மிகப்பெரிய கட்சியான இஹ்வானுல் முஸ்லிமீனின் 235 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது அதேவேளை ஸலபிகள் அமைப்பின் அரசியல் கட்சியான அன் நூர் கட்சி 125 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. மொத்தமாக இஸ்லாமிய அரசியல் சிந்தனையை கொண்ட 400 வரையான உறுப்பினர்கள் கீழ் சபையில் இருப்பதாக எகிப்திய செய்திகள் தெரிவிக்கிறது .
எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் , அந்நூர் ஆகிய இரண்டு இஸ்லாமிய அரசியல் கட்சிகளும் புதிய அரசியல் யாப்பு வரையும் போது அதிகூடிய செல்வாக்கை செலுத்தும் என்று லிபரல் , மற்றும் மதசார்பற்ற சிறிய அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளது . ஆனால் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பு புதிய யாப்பு உருவாக்கத்தின் போது எகிப்தின் அனைத்து தரப்புகளின் கோரிக்கைகளும் கவனத்தில் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளதுடன் லிபரல் , மற்றும் மதசார்பற்ற சிறிய அமைப்புகளுடன் கூட்டணியாக செயல்பட்டு வருகின்றது.
ஹுஸ்னி முபாரக்கின் பல சகாப்த ஒரு கட்சி ஆட்சியின் கீழ் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் சுதந்திரமாக பாராளுமன்றத்தில் நேற்று ஒலிக்க தொடங்கியுள்ளது.
இணைப்பு-2 பிரதான கட்சிகள் மற்றும் கூட்டணிகள் பெற்ற ஆசன விபரம்
|
கட்சி |
விகிதாசார முறையில் கட்சிப் பட்டியல் அடிப்படையில் பெற்ற ஆசனங்கள் |
பெரும்பான்மை வாக்குகளால் தனிநபர் தொகுதிகள் மூலம் பெற்ற ஆசனங்கள் |
மொத்த ஆசனங்கள் |
|
சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி (ஜனநாயக கூட்டமைப்பு) |
127 |
108 |
235 (சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி 213, ஏனைய கட்சிகள் 22) |
|
அந்நூர் கட்சி (மூன்று கட்சிகள் கொண்ட கூட்டணி) |
96 |
25 |
121 (அந்நூர் 108, ஜமாஆ இஸ்லாமியாவின் கட்சி 10, அல்-அஸாலா 3) |
|
புதிய வப்த் கட்சி |
36 |
2 |
38 |
|
எகிப்திய கூட்டமைப்பு |
33 |
1 |
34 |
|
அல்-வஸத் கட்சி |
10 |
0 |
10 |
|
புரட்சி தொடர்கிறது கூட்டமைப்பு |
7 |
0 |
7 |









