வடகிழக்குத் தமிழரும் முஸ்லிம்களும் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும்
எம் .ஐ.எம். முஹிதீன்
*கிழக்கு மாகாணம் விரைவில் சிங்கள மயமாகுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண் டுமானால் இலங்கை-இந்திய உடன்படிக்கையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடம் எனக்கூறப்பட்டிருக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு தனியான ஒரு மாகாண சபை ஏற்படுத்தப்பட வேண்டும்.
*அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தில் கூறபட்டிருக்கும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் உடனடியாக அனைத்து மாகாண சபைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
சிறுபான்மை மக்களின் உமைகளையும், பிரச்சினைகளையும் பெரும்பான்மையினர் தொடர்ந்து திட்டமிட்டுப் புறக்கணித்து வருவதே இலங்கையில் ஏற்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் நாட்டுப் பிவினைப் போராட்டத்திற்கும் முக்கிய காரணங்களாகும்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்செயல்களுக்கும் தீர்வுகாணும் அவசியத்தையும், இலங்கையில் வாழும் சகல இன மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு ஆகியவற்றையும் கருத்தில் கொண்டு 29-07-1987 இல் இலங்கை-இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
இலங்கையின் ஐக்கியம், இறைமை, பிரதேச ஒருமைப்பாடு என்பனவற்றைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் ஆகிய பல இன மக்கள் வாழும் பல மொழி பேசும் ஒரு நாடாக இலங்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒவ்வொரு இனமக்களும் அக்கறையோடு பேணிப் பாதுகாக்க வேண்டிய தனித்துவமான கலாசாரத்தையும், மொழியையும் கொண்டுள்ளவர்கள் என்பதும் அங்கீகக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வசிப்பிடம் என்றும் இவர்கள் எக்காலத்திலும் மற்ற இன மக்களோடு இங்கு சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
மாகாணசபைகளை ஏற்படுத்தல், மாகாணங்களை ஒன்றிணைத்தல், மாகாண சபைகளுக்கான தேர்தல்கள், கிழக்கு மாகாணத்தில் நடத்த வேண்டிய உத்தேச சர்வசன வாக்கெடுப்பு, அரசகரும மொழிச்சட்ட அலாக்கம் ஆகியவை சம்பந்தமான பிரேரணைகளை நடைமுறைப்படுத்த இலங்கைப் பாராளுமன்றத்தில் சட்டம் ஏற்படுத்த வேண்டும் என்றும் இலங்கை-இந்திய உடன்படிக்கையில் முக்கியமாகக் கூறப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பிரகடனத்தைத் தொடர்ந்து வடக்கு கிழக்கு மாகாணங்களின் தற்காலிக இணைப்பு 1988 செப்டெம்பர் 7ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. செப்டெம்பர் 19ஆம் திகதி ஒன்றிணைந்த வடகிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஒக்டோபர் 10ஆம் திகதி தேர்தல் ஆணையாளரால் நியமனப்பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. தேர்தல் 1988 நவம்பர் 19ஆம் திகதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
போட்டியிட எவரும் முன்வராததால் வடமாகாணத்தில் தேர்தல் நடைபெறவில்லை. இங்கு அங்கத்தவர்கள் அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈ.என்.டி.எல்.எப்., டெலோ ஆகிய இயக்க உறுப்பினர்களும் வேறு சிலரும் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டனர்.1988 நவம்பர் 19ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் நடந்த தேர்தலின்படி வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு அங்கத்தவர்கள் தெவு செய்யப்பட்டனர்.
வடகிழக்கு மாகாண சபை எதிர் கொண்ட முக்கிய பிரச்சினைகள்
வடகிழக்கு மாகாண சபை 1988 டிசம்பர் தொடக்கம் 1990 மார்ச் மாத காலத்தில் அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தத்தினால் மாகாணசபைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை நடைறைப்படுத்துவதில் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்தது. ஒன்றிணைந்த வடகிழக்கு மாகாணசபை அதன் 14 மாத நிருவாகத்தில் பலதரப்பட்ட பிரச்சினைகளால் ஆட்சி நடத்த முடியாமல் தத்தளித்தது.
வடகிழக்கு மாகாண சபையின் அன்றைய தலமைச்சராகவிருந்த வரதராஜப் பெருமாள் 1990ம் ஆண்டு மார்ச் மாதம் தலாம் திகதி நடந்த மாகாண சபையின் விஷேட கூட்டத்தில் ஜனாதிபதி பிரேமதாசவின் அரசாங்கத்திற்கு உடனடியாக நிறைவேற்றுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட 19 அம்சக் கோக்கைகள் நிறைவேற்றப்படாமை காரணமாக தன்னிச்சையாக தமிழ் ஈழத் தனி நாட்டினைப் பிரகடனம் செய்தார். அதனைத் தொடர்ந்து வடகிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டது.
பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் ஜனாதிபதிகளாகப் பதவி வகித்துவந்த ரணசிங்க பிரேமதாச, டி.பீ. விஜேதுங்க மற்றும் சந்திரிகா பண்டாரநாயகா குமாரதுங்க ஆகி யோர் பேச்சுவார்த்தை மூலம் ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்ததன் பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் எதிர்காலம் பற்றி இறுதி முடிவு எடுக்கடியும் என்ற நல்லெண்ணத்தின் பேரில் தற்காலிக ஒன்றிணைப்பை தொடர்ந்து நீடித்து வந்தனர்.
பின்பு 2006 ஒக்டோபர் 16, திங்கட்கிழமை உச்ச நீதிமன்றத்தால் அரசாங்க வர்த்தமானியில் ஜனாதிபதியினால் அவசரகால நிலைமையில் வெளியிடப்பட்ட பிரகடனத்தால் வடமாகாணம் கிழக்குமாகாணம் ஒன்றிணைக்கப்பட்டமை செல்லுபடியாகாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
ஒன்றிணைந்த வடகிழக்குப் பிக்கப்பட்டதன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள்
ஒன்றிணைந்த வடகிழக்கு பிக்கப்பட்டதன் பின் கிழக்கு மாகாணத்தை சிங்கள மயமாக்கும் திட்டம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் குறிக்கோள் அதிவிரைவில் சிங்கள மக்களைக் கிழக்கு மாகாணத்தில் ஆகக்கூடிய இனத்தவராக்குவதுதான். இந்த மறைகமான திட்டம் திருகோணமலை மாவட்டத்தில் அரச உதவியோடுகூடிய திட்டமிட்ட சிங்களவர் குடியேற்றம், உல்லாசப் பிரயாணம், பௌத்தமத மறுமலர்ச்சி ஆகியவற்றினை நோக்கமாகக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்கள், அம்பாரை மாவட்டத்தில் அட்டாளைச்சேனைப் பிரதேச சபைப் பகுதியில் உள்ள ஒலுவில் துறைகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உட்பட தீகவாபி பிரதேசத்தையும் உள்ளடக்கிய ஒரு பிரதேச சபையையும் செயலகத்தையும் புதிதாக ஏற்படுத்தி இப்பிரதேசத்தில் சிங்களவரைக் குடியேற்றல், தொப்பிகல (குடும்பிமலை) பிரதேசத்தில் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தித் திட்டங்களை மட்டக்களப்பு மாவட்டத்தில் உடனடியாக ஆரம்பித்து சிங்களமக்கள் அதிகப்படியாக வரக்கூடிய குடிசன மாற்றத்துக்கான ஏற்பாடுகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கிழக்கு மாகாண சிங்களமயமாக்கல் திட்டப்படி வடகிழக்குப் பிக்கப்பட்டதன் பின் கிழக்கு மாகாண நிருவாகம் இனரீதியாகப் பெரும் மாற்றமடைந்து வருகிறது. முன்னாள் திருகோணமலை அரசாங்க அதிபர்கள் கிழக்கு மாகாண செயலாளராகவும், பொது நிர்வாகச் செயலாளராகவும் பதவியேற்றுள்ளனர். முன்னாள் மாத்தளை அரசாங்க அதிபர் மாகாண பொது நிர்வாகசேவை ஆணைக்குழுவின் செயலாளர், மேலும் கிழக்கு மாகாண ஆளுனர் போன்ற உயர் பதவிகளுக்கு பல முன்னாள் இராணுவ அதிகாகள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். ஆனால் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவுள்ள அம்பாரை, திருகோணமலை மாவட்டங்களுக்கு இற்றைவரை முஸ்லிம் மாவட்ட செயலாளர் எவரும் நியமிக்கப்படவில்லை. ஊவா மாகாணத்தில் ஒரு பகுதியாகவிருந்த பிந்தனைப்பத்து சிங்களவர் ஒரு இலட்சம் பேர் கிழக்கு மாகாண அம்பாரை மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேற்படி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த கிழக்கு மாகாண சபையிலுள்ள தமிழ் பேசும் அங்கத்தவர்களாலோ அல்லது கிழக்கு மாகாண அமைச்சர்களாலோ இயலாமலிருக்கிறது. ஒன்றிணைந்த வடகிழக்குப் பிரிக்கப்பட்டபின் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலின் போது ஆகக் கூடுதலான பிரதிநிதிகளைத் தெவு செய்யும் இனத்தவர்களில் ஒருவர் கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டது. 2008 மே மாதம் 10ஆம் திகதி நடந்த கிழக்கு மாகாண- சபைக்கான தேர்தலில் முஸ்லிம்கள் 17 அங்கத்தவர்களும், தமிழர் 11 அங்த்தவர்களும் சிங்களவர் 7 அங்கத்தவர்களும் தெவு செய்யப்பட்டனர். ஆனால் கிழக்கு மாகாண சபைக்கு ஆகக்கூடுதலான அங்கத்தவர்களைத் தெரிவு செய்த முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதலமைச்சர் பதவி கொடுக்கப்படாமல் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டனர்.
வடகிழக்கு முஸ்லிம்களுடன் சில வார்த்தைகள்
இந்திய அரசாங்கத்தின் உறுதியான தலையீட்டினால் இலங்கை – இந்திய உடன்படிக்கையும் அரசியல் சாசன 13வது திருத்தச் சட்டம் ஏற்பட்டன. தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக தற்காலிகமாக ஒன்றிணைக்கப்பட்ட வடகிழக்கு மாகாண சபை ஏற்படுத்தப்பட்டது. மேலும் கிழக்கில் சர்வசன வாக்கெடுப்பு இல்லாமலே வடக்கும் கிழக்கும் நிரந்தரமாக ஒன்றிணைந்தே இருக்க வேண்டும் என்பதும் அரசியல் சாசனத்தின் 13வது திருத்தத்தில் குறிப்பிட்டிருக்கும் காணி உமையும் பொலிஸ் அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பான்மையான தமிழர்களின் கோக்கையாகும். இந்த நிலையில் வடகிழக்கு முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்வது? இதுதான் முஸ்லிம்கள் இன்று எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை. இச் சூழலில் இது பற்றிய எமது நிலைப்பாட்டை நாம் இன்றைய அரசியல் அரங்குக்குள் உறுதியாக முன்வைக்க வேண்டியவர்களாகவுள்ளோம்.
நல்லிணக்க நடவடிக்கைகள்
1964இல் திருகோணமலையில் தமிழரக் கட்சியின் 9 ஆவது மாநாட்டில் தலைவர் தந்தை செல்வநாயகம் வடகிழக்கு அரசியல் அதிகாரம் தமிழ், முஸ்லிம் இனங்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அதிகாரங்களை நியாயமான அடிப்படையில் தமிழர்களும் முஸ்லிம்களும் பகிர்ந்து கொள்வதற்கான நல்லிணக்க ஏற்பாட்டைச் செய்து கொள்வதற்கான முயற்சிகள் எம்மால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் பயனாக தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் இலங்கை முஸ்லிம் கவுன்சிலுக்கும் 1987ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-17ம் திகதிகளில் சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் பெரும்பான்மையான விடயங்களில் இணக்கம் காணப்பட்டன.
முஸ்லிம்களின் நலன்குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு அழைப்பு விடுத்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களுடன் 1988 ஏப்ரல் 15ம், 16ம், 19ம் திகதிகளில் சென்னையில் மிகச் சினேகபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு 1988 ஏப்ரல் 21ம் திகதி ஒரு கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டது.
இதே சந்தர்ப்பத்தில் ஏனைய தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் எங்களைச் சந்தித்து முஸ்லிம்களுடன் தாங்கள் கொண்டுள்ள நட்புறவையும், இரு இனங்களும் இணக்கமாக நடந்து கொள்ளத் தாங்கள் கொண்டுள்ள விருப்பத்தையும் எங்களிடம் வெளிப்படையாகத் தெவித்தனர். இந்தப் பேச்சுவார்த்தைகள் யாவும் இலங்கை, இந்திய அரசாங்கங்களின் அனுசரணையுடனேயே நடைபெற்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியுடனும், தமிழீழ விடுதலைப் புலிகளுடனும், நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின் வெளியிடப்பட்ட கூட்டறிக்கைகள் தமிழ், முஸ்லிம் இன ஒற்றுமையினதும் நல்லிணக்கத்தினதும் சாசனங்களாக வரலாற்றில் உள்ளன.
முஸ்லிம்களின் தனித்துவத்தையும், நலன்களையும் பேணிப் பாதுகாப்பதற்கென வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்படுத்தக் கூடிய ஏற்பாடுகள் குறித்து முஸ்லிம் அமைப்புகளும் தமிழ் அமைப்புகளும் பின்வரும் விடயங்களில் கருத்தொருமைப்பாடு கண்டுள்ளன.
* முஸ்லிம்களின் தனியானதும் வேறுபட்டதுமான இன, மத, சலாசாரத் தனித்துவம் பேணிப் பாதுகாக்கப்படுதல்.
* தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வசிப்பிடமென அங்கீகக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மாநிலத்தில் முஸ்லிம்களது வரலாற்று வசிப்பிடங்கள் முஸ்லிம் இனத்தவன் சனத்தொகைக்கேற்ப காணி நிலங்கள், இயற்கை வளங்கள் உள்ளடக்கப்பட்டு தனித்தனியான அரசியல் நிருவாகப் பிவுகளாக அடையாளம் காணப்படுதல்.
* முஸ்லிம் வரலாற்று வாழ்விடங்களில் சட்டம், ஒழுங்கு ஆகியவை சம்பந்தமான நிறைவேற்று அதிகாரம் முஸ்லிம்கள் கைவசம் இருத்தல்.
* வேலைவாய்ப்பு, காணிப்பகிர்வு, பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள், முதலீடு சம்பந்தமானவற்றில் முஸ்லிம்கள் வரலாற்று வாழ்விடங்களுக்கு நியாயமான பங்கு கொடுத்தல்.
* காணிப் பங்கீட்டில் முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தில் 35 வீதத்துக்கு குறைவில்லாமலும், மன்னார் மாவட்டத்தில் 30 வீதத்துக்கும் எஞ்சிய வடமாகாணத்தில் 10 வீதத்துக்கும் உத்துடையவர்களாவார்கள் .
* ஒன்றிணைந்த வடகிழக்கு மாகாண சபைக்கு 30 வீதத்துக்குக் குறைவில்லாத முஸ்லிம் பிரதிநிதிகளை தெவு செய்வதற்கு அவசியமான திருத்தங்களை அரசியல் சாசனத்தில் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுதல.
ஒன்றிணைந்த வடகிழக்கு மாகாண சபை ஏற்படுத்துவதற்கான முஸ்லிம்களின் இணக்கப்பாட்டிற்கு இன்று தேவயான முக்கிய நடவடிக்கைகள்
* தமிழ் போராளிகளினால் வடகிழக்கிலிருந்து சட்டவிரோதமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள், அவர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணி, வீடுவாசல்கள், சொத்துடமைகள் ஆகியவற்றின் பூரண விபரம் முஸ்லிம் உமைகள் மன்றத்தினால் சேகரிக்கப்பட்டிருக்கிறது. இப்பிரச்சினைகள் சுகமாகத் தீர்க்கப்படுமானால் வடகிழக்கில் வாழும் தமிழருக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் நிலவும் விரோதம் நீங்கி நல்லிணக்கத்கிற்கான சாந்தியும் சமாதானம் ஏற்பட வழிபிறக்கும்.
*ஏற்கனவே தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் ஏற்பட்ட உடன்பாடுகள் நடைறைப்படுத்தப்படுதல் வேண்டும்.
* ஒன்றிணைந்த வடகிழக்கு மாகாண சபைக்கான பிரதிநிதித்துவத்தில் சிறுபான்மையினருக்குச் சம பிரதிநிதித்துவம் – தமிழர் 50வீதம் – 37 அங்கத்தவர்கள், முஸ்லிம்கள் 35 வீதம் – 26 அங்கத்தவர்கள், சிங்களவர் 15 வீதம் – 11 அங்கத்தவர்கள். 10 அங்கத்தவர்களைக் கொண்ட வடகிழக்கு அமைச்சரவையில் தமிழர் 5 அமைச்சர்கள், முஸ்லிம்கள் 4 அமைச்சர்கள், சிங்களவர் 1 அமைச்சர் என்ற ரீதியில் ஆட்சி அதிகாரங்கள் பங்கிடப்பட வேண்டும்.
இவ்வாறான அதிகாரப் பகிர்வினைச் சாத்தியப்படுத்துவதற்கு மூன்று முக்கிய அம்சங்கள் பூர்த்தியாக்கப்பட வேண்டும்.
முதலாவது- முஸ்லிம்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு வடகிழக்கு தமிழர்களின் இணக்கம்.
இரண்டாவது- தமிழர் கோரும் ஒன்றிணைந்த வடகிழக்கு மாகாண சபை ஏற்படுத்துவதற்கு முஸ்லிம்களின் இணக்கம்.
மூன்றாவது- வடகிழக்கில் தமிழருக்கும் முஸ்லிம்களுமிடையில் ஏற்படும் இணக்கப்பாட்டினை சட்டபூர்வமாக்குவதற்கு இலங்கை அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு.
முஸ்லிம் இனத்தவன் உமைகளை பாதுகாக்க நியாயமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது அத்தகைய நடவடிக்கைகளினால் தமிழன் கோக்கைப்படி அரசியல், நிருவாக தேவைகளுக்காக ஒன்றிணைக்கப்படும் வடகிழக்கு மாகாணங்களின் தனித்துவம் குந்தகப்படுத்தப்படவோ அல்லது குலைக்கப்படவோ கூடாது.
வடகிழக்கு தமிழரும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்தால் உண்டு வாழ்வு. அஃதில்லை எனில் நம்அனைவருக்கும் தாழ்வு.










mr.mohedeen Noth East patti pesa Tamil kuddamaippu How much ….. oru pothum vadakkanudan sernthu vala mudiyathu ok
zarook
January 22, 2012 at 6:14 am
Exactly it needs to be discussed and implemented. Unfortunately I am of the view it won’t be implemented since our so called Politicos which represents Muslim community are being silent and not bothered at all for personal and influencing reasons. Therefore the Intellectuals, Youth and Civil Societies in the Muslim community should alarm and pressure the Politicians as well the stake holders those who are going to involve on the process including Indians. Respected MIM Mohideen has contributed a lot for this community which has never being encouraged or valued by our community.
Anver M. Mustapha
January 22, 2012 at 1:14 pm
எம் ஐ எம் முகைதீன் இது உங்கள் இளமைகாலம் கழிந்த காலம் அல்ல!!! கொலை செய்ய பட்ட மையத்தையும் இரண்டாயிரம் இராணுவத்தின் முன்பும் நீதி பதி உட்பட அரச மேல் அதிகாரிகளின் முன்னே பெற்றோல் ஊற்றி எரித்து வக்கிரங்களை காட்டிய காலங்கள் கடந்தோடிய காலம் இது நீங்கள் சொல்லுவதுபோல் தமிழர்கள் ஒரு நாளும் முஸ்லிம்களுடன் நீதமாக நடந்துகொள்ள போவதே இல்லை!!! அப்படி நல்ல முறையில் நீதமாக நடந்துகொண்டதாக வரலாறு நெடுகிலும் எந்த ஆதாரத்தையும் உங்களால் சுட்டி காட்டவும் முடியாது
முஸ்லிம் என்பது இஸ்லாத்தை கடைபிடித்து ஒழுகுவதால் வறுவது அது இனத்தாலோ குலத்தாலோ மொழியாலோ அல்லது வேறெந்த தன்மையாளோ அல்ல அப்படி பட்ட மனிதம் ஒரு நாளும் தன் இனத்தின் நலத்தில் மட்டும் குறியாக இருக்கும் யாரோடும் சமரசம் செய்து வாழ முடியாது உங்களிடம் தாள்மையான வேண்டுகோள் உங்களின் ஆசைக்காக ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை குழி தோன்டி புதைக்க எத்தனிக்காதீர்கள்!!!
Mohammed Hiraz
January 22, 2012 at 9:39 pm
I appreciate MIM mohideen’s suggestion, but we can never think or expect that tamil politicians and tamil authorities will agree or do, becasue upto this moment they against our rights. they are like ask the god to make 2 eyes bilnd for muslims even their 1 eye can be blind or 1 for 2. we see the past & present situation.
but, i oppose bro. Hiras’s comment on muslims as muslims never can compromise on normal life. actually according to Islam we cannot compromise on with the faith & religious activities, not with natural life or normal life. We have “Hutaibiya” agreement for best of compromise and agreement of the unde the guidence of the Prophat Muhammad Sallallahu Alaihwasallam. But, those Quraizies are better than present tamil politicians & authorities.
2nd thing is, as Mohideen brother fear, of cause sinhala racists are doing and working hard for seize all resources from muslims as much as possible. they may give hand to Tamils in this regard in future. we can udnerstand from the current stance of government on resolving current ethnic or power issue and discussion with tamil group.
but, do not expect the current politicians as they are for us, no, never, they are only muslims for them or name, they never thought or think of our community or will not do so. they all are RUBBISH!!! & SELFISH!!!!
mohammed
January 26, 2012 at 11:50 am
I extremely apologize bro. Hiras, i rushed to answer without read your comment twice, because it was quite confuse. yah, its clear now, you commented on other communities as they will not compromise since they are based on race, language or ethnic, i agree!!
mohammed
January 26, 2012 at 12:03 pm