சல்மான் ருஷ்டிக்கு தடை இல்லை: இந்திய மத்திய அரசு
சர்ச்சைக்குரிய வியாபர எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் இந்திய வருகையை தடைச்செய்ய இயலாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.வியாபர எழுத்தாளர் என்று பெயர் பெற்ற சல்மான் ருஷ்டியிடம் வம்சாவழியை சார்ந்தவர்களுக்கு அளிக்கும் பெர்ஸன் ஒப் இந்தியன் அனுமதி இருப்பதால் இத்தகைய அனுமதி அட்டையை வைத்திருப்பவர்களுக்கு இந்தியாவுக்கு வர விசா தேவையில்லை என இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதை பயன்படுத்தி ருஷ்டி முன்னரும் பல தடவை இந்தியாவுக்கு வந்துள்ளார். ஆகவே இனி வரும் நாட்களிலும் அவருடைய சுற்றுப் பயணங்களை தடுக்க மத்திய அரசு தயாராகாது என அதிகாரிகள் கூறியுள்ளனர் என்று இந்திய செய்திகள தெரிவித்துள்ளன. சர்ச்சைக்குரிய வியாபர எழுத்தாளர் ருஷ்டியின் வருகையை எதிர்த்து அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்வதற்கான விசாவை ரத்துச் செய்யவேண்டும் என தாருல் உலூம் தேவ்பந்த் துணைவேந்தர் நுமானி மற்றும் முஸ்லிம் அரசியல் வாதிகள் சிலரும் கோரிக்கை விடுத்திருந்தனர் . அதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள ருஷ்டி தனது சுற்றுப்பயணத்தை அனுமதிக்க கூடாது என தாருல் உலூம் தேவ்பந்த் துணைவேந்தரின் கோரிக்கை நிலைக்காது என கூறியுள்ளார்.







