பலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்
இணைப்பு -2: உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ள பலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் கலாநிதி முயாத் மல்கி வெளிவிவகார அமைச்ர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்தசந்திப்பின் போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப் படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சுதெரிவித்துள்ளது.
இரண்டு நாடுகளுக்கு இடை யிலான விசேட ஒப்பந்தங்கள் சிலவற்றிலும் இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் இன்றைய தினம் கைச்சாத்தி டவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இவர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸின் அழைப்பை யேற்று பலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயத்தை மேற்கொள்கின்றார்.
இணைப்பு -2: இலங்கைக்கு நேற்று வரவிருந்த பலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் கலாநிதி முயாத் மல்கியின் விஜயம் இறுதி நேரத்தில் பிட்போடப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது எனினும் அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை







