Lankamuslim.org

One World One Ummah

Archive for January 2012

ஊடகங்களில் மீண்டும் மீண்டும் ஜிஹாத் காச்சல் !!

with 5 comments

இலங்கையில் ஜிஹாத் அமைப்புகள் இருக்கிறது, உருவாகிவருகின்றது, பயிற்சி பெறுகின்றார்கள், பாகிஸ்தானில் 2000 பேர் சென்று பயங்கர ஆயுத பயிற்சி பெற்று வந்துள்ளார்கள், ஆயுதங்களை வைத்துள்ளார்கள் என்று அடிக்கடி இலங்கை, இந்திய ஊடகத் துறை ஜிஹாத்துடன் தொடர்பு படுத்தி செய்திகை பதிவு செய்து வந்ததை நாம் அறிவோம் இந்த போலி ஜிஹாத் செய்திகளை முதலில் அறிமுகப் படுத்தியவர்கள் புலிகளும் புலிசார்பு ஊடகங்களும்தான். Read the rest of this entry »

Written by lankamuslim

January 31, 2012 at 8:24 pm

ஈரான் மீதான பொருளாதார தடை சிறியநாடுகளை பாதிக்கிறது – ஜனாதிபதி

leave a comment »

அமெரிக்காவின் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளால் இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கே தாக்கம் ஏற்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கையிலுள்ள ஊடகவியலாளர்களை அலரிமாளிகையில் இன்று சந்தித்து கலந்துரையாடியபோதே Read the rest of this entry »

Written by lankamuslim

January 31, 2012 at 8:06 pm

யாழ் ஐதுறூஸ் மகாம் மஸ்ஜித் திருத்தப்படுமா?

with 8 comments

எம்.எஸ்.அப்துல்லாஹ்: யாழ்ப்பாணத்தின் பள்ளிவாசல்கள் படிப்படியாக மீளமைக்கப்பட்டு வருவது யாவரும் அறிந்த விடயமே. தற்போது சின்னப்பள்ளிவாசல் மீளமைக்கப்பட்டு வருகின்றது. பல மைல்களுக்கு அப்பால் இருந்தும் பள்ளிவாசலை மீளக்கட்ட அப்பள்ளிவாசலின் மஹல்லாவாசிகளைக் கொண்ட மீளமைப்புக் குழுவின் செயற்பாடுகள் பாராட்டுதலுக்குறியது. Read the rest of this entry »

Written by lankamuslim

January 31, 2012 at 7:50 pm

பாராளுமன்றத்தெரிவுக்குழு இயக்கம் பெறுமா ?

leave a comment »

அரசியல் கருத்தாடல் தொகுப்பு: தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் பாராளுமன்றத்தெரிவுக்குழுவில் பங்குகொள்ளுமாறு அரசு அறிவித்து வருகிறது இதற்கு முஸ்லிம் தரப்பில் உள்ள கட்சிகள் தமது ஆதரவை ஏற்கனவே தெரிவித்துள்ளது. ஆனால் அரசினால் தொடராக விடுக்கப்படும் அழைப்பைபிரதான எதிர்கட்சியான  ஐ.தே.க  நிபந்தனைகளுக்கு உட்படுத்தி நிராகரித்துள்ளது. 13+ என்ற ஜனாதிபதியின் யோசனை என்னவென்பதை பகிரங்கப்படுத்த வேண்டுமெனவும். Read the rest of this entry »

Written by lankamuslim

January 31, 2012 at 9:17 am

LTTE அங்கத்தவர்கள் பலர் இன்று கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள்: ஜனாதிபதி

leave a comment »

பிரிவினை வாதத்திற்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது :எல்.ரி.ரி.ஈ.யில் அங்கத்தவர்களாக இருந்த பலர் இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். வேறு சிலர் எல்.ரி.ரி.ஈ.யை பிரதிநிதித்துவப் படுத்தியவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் இறுதி இலக்கு பிரிவினைவாதமும், தனி இராச்சியம் அமைப்பதுமேயாகும். Read the rest of this entry »

Written by lankamuslim

January 31, 2012 at 8:36 am

கல்குடா: ஷபாபின் இலவச சத்திர சிகிச்சை முகாம்

leave a comment »

எம்.ரீ.எம்பாரிஸ்: ஜம்இய்யதுஷ் ஷபாபின் அனுசரணையுடன் கல்குடா தவ்ஹீத் ஜமாஅத்தின் சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் மீராவோடை தாருஸ் ஸலாம் ஜும்ஆப் பள்ளி வாயலில் இன்று 31.01.2012 செவ்வாய்க்கிழமை கண்களில் வெள்ளை படர்தல் நோயுள்ளவர்களை இனங்கண்டு இலவசமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

January 31, 2012 at 8:24 am

காத்தான்குடி வாலிபர் கடத்தி அச்சுறுத்தல்

leave a comment »

காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முக்கியஸ்தர் ஏ.சி.எம்.அசாம் என்பவர் கடத்தப்பட்டு ஆயுத முனையில் அச்சுறுதபட்டுள்ளார் என்று நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மத்தியகுழு உறுப்பினர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

January 30, 2012 at 11:20 pm

சில நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதி விரைவில் நிறுத்தப்படும்: ஈரான்

leave a comment »

“சில நாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதி விரைவில் நிறுத்தப்படும்’ என, ஈரான் எண்ணெய் வள அமைச்சர் தெரிவித்துள்ளார். ஈரான் எண்ணெய் வள அமைச்சர் ருஸ்தும் கசொமி அளித்த பேட்டியில்,”சில நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் எண்ணெய் நிறுத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளார். ஆனால், அவை எந்த நாடுகள் என அவர் குறிப்பிடவில்லை. கடந்த 23 ஆம் திகதி ஐரோப்பிய யூனியன், ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்தது Read the rest of this entry »

Written by lankamuslim

January 30, 2012 at 11:15 pm

சர்வதேச நடுத்தீர்ப்பு மையம் நோக்கி இந்திய தொழில் அதிபர்களுக்கு அழைப்பு

leave a comment »

பர்ஹான், அஸ்லம் அலி: இலங்கையில் நிறுவப்படும் சர்வதேச நடுத்தீர்ப்பு மையத்தினூடாக வர்த்தக, கைத்தொழில் பிணக்குகளுக்கு உரிய தீர்வுகளை காண்பதற்கு ஏனைய பல நாடுகளைப் போன்றே இந்திய தொழில் அதிபர்களும் முன்வர முடியுமென நீதியமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.கடந்த வாரம் இந்திய கைத்தொழில் Read the rest of this entry »

Written by lankamuslim

January 30, 2012 at 8:45 pm

விஸா சிபாரிசுகளை ஜம்இயதுல் உலமா மூலம் வழங்கினால் சிறப்பாக இருக்கும்

leave a comment »

M.M.ரஹீம்: வெளிநாடுகளில் இருந்து வரும் இஸ்லாமிய பிரச்சரர்களுக்கு விஸா ஒழுங்குகளுக்கான சிபாரிசுகளை அகில இலங்கை ஜம்இயதுல் உலமா ஊடாக மேற்கொண்டாள் சிறப்பாக இருக்கும் என அதன் செயலாளர் முபாரக் மௌலவி தெரிவித்துள்ளார் .அண்மையில் ஏற்பட்ட விஸா ஒழுங்கு பிரச்சினை அனைத்து இஸ்லாமிய பிரச்சரர்களுக்குமான பொதுவான பிரச்சினையாகும். Read the rest of this entry »

Written by lankamuslim

January 30, 2012 at 3:48 pm

பயங்கரவாதிகளாக சித்தரித்த ஊடங்கள் மீது நடவடிக்கை

leave a comment »

M.M.ரஹீம்: தப்லீக் ஜமாஅத் தொடர்பாக ஆதாரம் அற்ற போலியான தகவல்களை செய்திகளாகவும், கட்டுரைகளாகவும் , பதிவு செய்த ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது . ஆதாரமற்ற பொய்யான தகவல்களை வழங்கிய பத்திரிகைகளுக்கு எதிராக இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவுக்கும் , பத்திரிகை பேரவைக்கும் முறைபாடுகளை செய்ய முஸ்லிம் கவுன்சில் தீர்மானித்துள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

January 30, 2012 at 2:54 pm

அரச உயர் அதிகாரிகள் இனரீதியான பாகுபாட்டினை காண்பிக்க வேண்டாம்

leave a comment »

கடந்த கால அசாதாரண சூழ்நிலையில் இப் பிரதேசத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் வந்து குடியேறுமாறு முதலில் தமிழ் மக்களே அழைப்பு விடுத்தனர். அந்த அடிப்படையில் இன்று இங்கு மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளோ வாழ்வாதார மேம்பாட்டு வசதிகளோ இதுவரை காலம் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்படவில்லை. Read the rest of this entry »

Written by lankamuslim

January 30, 2012 at 10:03 am

எதிர்பார்க்கப்படும் ஐ.நா.மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடர் !

leave a comment »

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 27ஆம் திகதி தொடக்கம் மார்ச் 23 ஆம் திகதிவரை ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத் தொடர் இலங்கை அரசுக்கு பெரிய பொறியாக அமையும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் புலம்பெயர் அமைப்புகளால் தெரிவிக்கப்பட்டு வருகிறது . Read the rest of this entry »

Written by lankamuslim

January 30, 2012 at 9:38 am

ஒரே நாளில் அதிகூடிய பதிவு:24 மணித்தியாலத்தில் 15 வீதி விபத்துகள்17 பேர் உயிரிழப்பு

leave a comment »

நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் ஒரே நாளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 17 பேர் உயிரிழந்த சம்பவங்கள் நேற்று முதல் தடவையாக பதிவாகியுள்ளன.அண்மைக் கால வரலாற்றில் பொலிஸ் தலைமையகத்தில் பதிவு செய்யப்பட்ட நாளாந்தம் இடம்பெற்று வரும் வாகன விபத்துச் சம்பவங்களில் ஒரே நாளில் பதிவாகிய அதிகூடிய விபத்துக்களும், Read the rest of this entry »

Written by lankamuslim

January 30, 2012 at 9:12 am

அமீர்கான்: சிறையில் சீரழிக்கப்பட்ட 14 ஆண்டுகால வாழ்க்கை

leave a comment »

இந்திய முஸ்லிம் வாலிபன் அமீர்கான்: எந்த குற்றமும் செய்யாமல் பள்ளிப் பருவத்தில்(19-வயதில்) கைது. 14 ஆண்டுகள் தனிமைச் சிறை வாழ்வு. 20 ஜோடிக்கப்பட்ட குண்டுவெடிப்பு வழக்குகள். தளர்வாதத்தால் சோர்ந்து போன தாய். மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை நினைத்து மனம் உடைந்து மாரடைப்பால் மரணமடைந்த தந்தை.-இந்தியாவில் ஓர் அப்பாவி Read the rest of this entry »

Written by lankamuslim

January 30, 2012 at 8:00 am

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் நியாயமானது

leave a comment »

கிழக்கு வளாக துணைவேந்தர் பதவியில் சிங்கள அதிகாரி: கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தர் ஒருவரை நியமிப்பதற்காக தமிழர்கள் மூவரின் பெயர்கள் சிபார்சு செய்யப்பட்டு, அவர்களில் ஒருவரை ஜனாதிபதி நியமிப்பதற்கு முன்னதாக குறுகிய கால நிர்வாகத்துக்காக தகுதிவாய்ந்த அதிகாரியாக பணியில் இருந்து வரும் ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டமை தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக Read the rest of this entry »

Written by lankamuslim

January 29, 2012 at 4:30 pm

கிழக்கு சர்வமத குழு தெண்மாகாணத்திற்கு விஜயம்

leave a comment »

அமீர், பர்ஹான்: சமயங்களின் ஊடாக சமாதானத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்திலுள்ள சர்வமத குழு தெண்மாகாணத்திற்கு விஜயம் செய்து சர்வமதக் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன் பல் வேறு சமயத்தலைவர்கள் மற்றும் முக்கியஸ்த்தர்களையும் சந்தித்தது கலந்துரையாடியுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

January 29, 2012 at 4:09 pm

உரிய நேரத்தில் தொழில் பட்டதால் அனர்த்தம் தவிர்க்கப்பட்டது

leave a comment »

எம்.ரீ.ம் பாரிஸ், பர்ஹான்: ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பதுரியாநகர் – மீராவோடை கிராமத்தினை இணைக்கும் ஓடை கரை பகுதியில் 28.01.2011 சனி இரவு 6.45 மணியளவில் தென்னை மர ஓலை மிண்சார கம்பியில் விழுந்ததால் கம்பிகள் ஒன்றின்மேல் ஒன்று மோதுண்டு ஒன்றினைந்தமையினால் சுமார் 20 நிமிடங்கள் தீப்பற்றியது. Read the rest of this entry »

Written by lankamuslim

January 29, 2012 at 3:57 pm

காத்தான்குடி கடற்கரையில் பாரிய திமிங்கிலம்

leave a comment »

இணைப்பு -2: மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கடற்கரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாரிய திமிங்கிலமொன்று கரையொதுங்கியுள்ளது. அதிகாலை வேளை 2 மணியளவில் இத்திமிங்கிலம் கரையொதுங்கியதை அவதானித்த மீனவர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்யுள்ளனர் 16 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்டது படங்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

January 29, 2012 at 3:41 pm

உஸாமாவை காட்டி கொடுத்தவர் மீது தேசதுரோக குற்றமும் அமெரிக்காவின் கவலையும்

leave a comment »

OurUmmah: அஷ்-ஷஹீத் உஸாமா பின்லாதின் இரகசிய இருப்பிடம் குறித்து அமெரிக்க உளவு அமைப்பான CIA க்கு தகவல் வழங்கியதற்காக பாகிஸ்தான் நிர்வாகம் கைது செய்துள்ள மருத்துவரான ஷகீல் அப்ரிடி கைது செய்யப்பட்டமை குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லியோன் பனேட்டா கவலை தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மே மாதம் 2 ஆம் திகதி பாகிஸ்தானின் அபோதாபாத் நகர் மீது அத்துமீறி நுழைந்த அமெரிக்க சிப்பாயிகள்  விரிவாக….

Written by lankamuslim

January 28, 2012 at 10:30 pm

ஈரானுக்கு ஏனைய நாடுகள் ஆதரவு வழங்கவேண்டும் :சம்பிக

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: மேற்கு நாடுகளுக்கு ஈரானின் அணுசக்தி ஆய்வில் தலையிட எந்த உரிமையும் இல்லை என்றும் மற்ற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார். ஈரான் மீதான பொருளாதர தடை அதன் பொருளாதரத்தை முடக்கும் இராணுவ நோக்கம் கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.படங்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

January 28, 2012 at 9:41 am

ஈரான் மீது தடை விதித்தால் மேற்குலக நாடுகளுக்குத்தான் பாதிப்பு: ஐ.எம்.எப்

leave a comment »

ஈரான் மீது தடை விதித்தால் மேற்குலக நாடுகளுக்குதான் பாதிக்கப்படும் என்று சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எப். எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் அணு சக்தி திட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வரும் மேற்குலக நாடுகள், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க திட்டமிடுகின்றன. அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் ஹோர்முஸ் நீரிணையை மூடிவிடுவோம் Read the rest of this entry »

Written by lankamuslim

January 28, 2012 at 9:18 am

ஆசிய ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பு நிறைய சாதித்துள்ளது

leave a comment »

தகவல்:F.M.பர்ஹான்: பயங்கரவாதம், கடற்கொள்ளை, கணனி தொடர்பிலான குற்றங்கள், காலநிலை மாற்றத்தின் விளைவுகள், புலமைச் சொத்துடைமை உரிமைகள், உலக வர்த்தக அமைப்பு சார் பிரச்சினைகள் போன்றவற்றில் எதிர்நோக்கும் சவால்களுக்கு ஆசிய, ஆபிரிக்க நாடுகள் முகங்கொடுக்க வேண்டிய காலகட்டம் தோன்றியுள்ளதாக இலங்கையின் நீதியமைச்சரும், Read the rest of this entry »

Written by lankamuslim

January 27, 2012 at 8:23 pm

கிளிநொச்சியில் சிசுக்கள் கொடூர படுகொலை

leave a comment »

பெற்ற குழந்தையை கல்லுடன் கட்டி கிணற்றுள் போட்டு படுகொலை செய்தமைக்காக தாய் கைது செப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட் டு எதிர்வரும் 6 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவில் உள்ள பிரமந்தனாற்றில் ஐந்து பிள்ளைகளின் தாய் ஒருவர் தவறான வழியில் குழந்தை ஒன்றை பிரசுவித்து குறித்த குழந்தையை கல்லுடன் கட்டி கிணற்றில் Read the rest of this entry »

Written by lankamuslim

January 27, 2012 at 5:53 pm

ரவூப் ஹக்கீம் சல்மான் குர்ஷித் சந்திப்பு

leave a comment »

இர்பான்,பர்ஹான்: ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் கருத்தரங்கொன்று இன்று 2012-01-27 புது டில்லியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. ஆசிய, ஆபிரிக்க சட்ட ஆலோசனை அமைப்பின் கருத்தரங்கில் கலந்து கொண்டுள்ள அதன் தலைவர் , நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் புது டில்லி சென்றுள்ளார். குறித்த கருத்தரங்கில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்திய சட்ட அமைச்சர் சல்மான் Read the rest of this entry »

Written by lankamuslim

January 27, 2012 at 4:30 pm

நாட்டு மக்களுக்காக யாப்பை திருத்துவதில் தவறில்லை

with one comment

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதுடன், அதற்கும் அப்பால் சென்று அதிகாரங்களை பகிர்வது என்ற நிலைப்பாட்டில் அரசு உள்ளது. இந்தியாவுக்கு ஜனாதிபதி சென்றிருந்த போதும், இந்திய பிரதமர் மன்மோகன்சிங்குடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதும் ஜனாதிபதி இதனை வலியுறுத்தியுள்ளார் என்றும் அமைச்சர் கெஹெலிய குறிப்பிட்டுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

January 27, 2012 at 9:54 am

அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு

with 2 comments

கற்பிட்டி பிரதேச சபையின் சுயேட்சை அணி உறுப்பினரான எம்.ஆர் .எம்.பவுசான்,அகில இலங்கை மக்கள்(அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ) காங்கிரஸில் இணைந்து கொண் டுள்ளார். கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீனிடமிருந்து அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

January 27, 2012 at 9:37 am

மின்னஞ்சல்களை உளவு பார்ப்பதில் அமெரிக்க,இந்தியா முன்னிலை. இலங்கை ?

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: தனிநபர்களின் மின்னஞ்சல்களை கண்காணித்து உளவு பார்ப்பதில் அமெரிக்கா, பிரேசில் இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களை கைப்பற்றியுள்ளதாக Google Transparency Report அறிக்கை கூறுகிறது. மின்னஞ்சல் உளவு பார்ப்பதில் தொடராக அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. google  பயனீட்டாளர்களின் விபரங்களை பெற்றுக்கொள்ள தங்களை அணுகுவதில் அமெரிக்கா, Read the rest of this entry »

Written by lankamuslim

January 27, 2012 at 9:10 am

வானில் திடீர் தீ நால்வர் பலி: பாதுகாப்பற்ற எரிபொருள் தாங்கி காரணம்

leave a comment »

பயணிகளை ஏற்றி வந்த வான் ஒன்று திடீரென தீ பற்றிக் கொண்டதால் இரண்டு சிறுவர்கள் உட்பட நால்வர் வானுக்குள்ளேயே கருகி மரண மான பரிதாபகரமான சம்பவ மொன்று நேற்று அதிகாலை களுத்துறை வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் சிக்கி எரிகாயங்களுக்குள்ளான ஏழு பயணிகள் களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

Written by lankamuslim

January 27, 2012 at 8:01 am

இஸ்லாமிய செயல்பாட்டாளர்கள் விஸா பிரச்சினைக்கு இன்னும் தீர்வு பெறப்படவில்லை

with 7 comments

M. ஷாமில் முஹம்மட்
இஸ்லாமிய போதனைகளை மேற்கொள்ள வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு இஸ்லாமிய போதகர்கள், இஸ்லாமிய ஆர்வலர்கள் வருவது என்பது பல நூற்றாண்டு பாரமம்பரியம். இந்த நிலையில் கடந்த கிழமை சுற்றுலா விஸாவில் இலங்கைக்கு வருகைதந்திருந்த 161 வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள் இஸ்லாமிய பிரச்சாரத்தில் ஈடுபட்டதையடுத்து அவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு அரசு தனது குடிவரவு குடியகல்வு திணைக்களம் மூலம் உத்தரவிட்டது. Read the rest of this entry »

Written by lankamuslim

January 26, 2012 at 5:42 pm

பாராளுமன்ற தெரிவுக்குழு ஏன்? – விளக்கும் இலங்கை ஜனாதிபதி செயலர்

leave a comment »

மொழியாக்கம்: நித்தியபாரதி, இலங்கை நெட்: 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் தற்போதைய நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை விளக்கும்படி சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்கவுடன் ‘லக்பிமநியூஸ்’ நேர்காணல் ஒன்றை மேற்கொண்டிருந்தது. அந்நேர்காணலில் அவர் தெரிவித்திருந்தாவது, Read the rest of this entry »

Written by lankamuslim

January 26, 2012 at 3:50 pm

சாய்ந்தமருது மீனவர்வர்களை இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை

leave a comment »

வாழைச்சேனை பிரதேசத்திலிருந்து இம்மாதம் 09ஆம் திகதி ஆழ்கடலில் மீன்பிடிக்க இயந்திரப் படகில் சென்ற சாய்ந்தமருதைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லையென இயந்திரப்படகு உரிமையாளர் ஏ.சி.பாறூக் கல்முனை பொலிஸ் Read the rest of this entry »

Written by lankamuslim

January 25, 2012 at 10:44 pm

சாய்ந்தமருது தைக்கா தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் கூட்டமைப்பு சந்திப்பு

leave a comment »

சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான காரைதீவு முச்சந்தி தைக்கா விவகாரத்திற்கு சுமூகமானதும் தீர்வு காண்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும்  தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பேச்சு வார்த்தையொன்றை செய்துள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

January 25, 2012 at 8:49 pm

ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டு பிடிக்க முன்னர் இலங்கையில் விமானம் பறந்தது !!

with 3 comments

சிங்களவர் ஆரியர்களின் வழித்தோன்றல் இல்லை என்றும் ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டு பிடிக்க முன்னர் இலங்கையில் விமானம் பறந்தது என்ற இரண்டு அதிரடிகளை விட்டுள்ளார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க . வரலாற்று ஆசிரியரான அரிசன் ஹாபோதுவின் ‘இர ஹந்த நெகி ரட்ட’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு Read the rest of this entry »

Written by lankamuslim

January 25, 2012 at 5:24 pm

ஒமானின் கனிய எண்ணெய் துறை அமைச்சர் இலங்கை வருகிறார்

leave a comment »

ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடையை தொடர்ந்து ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையிலான பணப்பரிமாற்றம் செய்வதில் சிக்கல்களை இலங்கை எதிர்கொள்ளும் என்பதால் ஈரானில் இருந்து இலங்கைக்கு எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாது போகலாம் என்று கருதும் இலங்கை மாற்று வளிகளை ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது . Read the rest of this entry »

Written by lankamuslim

January 24, 2012 at 7:12 pm

இந்த ஆண்டின் பெரிய ஜோக் Joke of 2012

with 4 comments

அமீர் இஸ்மத்: இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்ட அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த 161 தப்லீக் ஜமாஆத்தினர் வெளிநாட்டவர்கள் அல்-குவைதா அமைப்பினால் வழி நடத்தப்படுவர்கள் என சர்வதேச காவற்துறை மற்றும் அமெரிக்க ராஜாங்க திணைக்களம் என்பன தகவல்கள் வெளியிட்டுள்ளன. Read the rest of this entry »

Written by lankamuslim

January 24, 2012 at 6:24 pm

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அப்துல் கலாமை வழியனுப்பினார்

with one comment

இலங்கைக்கு நான்கு நாள் விஜயமொன்றை மேற் கொண்டிருந்த இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும்,அணு விஞ்ஞானியுமான பேராசிரியர் அப்துல் கலாம் இன்று புதுடில்லி நோக்கி புறப்பட்துள்ளார். இவரை வழியனுப்பி வைக்கவென சர்வதேச விமான நிலையத்திற்கு அமைச்சர்களான றிசாத் பதியுதீன், Read the rest of this entry »

Written by lankamuslim

January 24, 2012 at 5:43 pm

டெங்குக் காய்ச்சலினால் டாக்டர் உயிரிழப்பு

leave a comment »

களுத்துறை, நாகொடை வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த வைத்தியர் கடந்த சில நாட்களாக அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைபெற்று வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடம் இளம் பெண் வைத்தியர் ஒருவரும் தாதியொருவரும் உயிரிழந்தகாத தகவல்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது. Read the rest of this entry »

Written by lankamuslim

January 24, 2012 at 8:54 am

மக்கள் எழுச்சியின் பின்னர் முதல் முறையாக எகிப்தின் புதிய பாராளுமன்றம் பதவியேற்பு

leave a comment »

இணைப்பு-2 எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபை நேற்று பதவி ஏற்றுள்ளது. இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் செல்வாக்கு பெற்றுள்ள எகிப்து பாராளுமன்றத்தின் கீழ்சபையான உத்தியோகபூர்வமாக  நேற்று பதவியேற்றுள்ளது. இது எகிப்திலும் ஏணைய நாடுகளிலும்    மிகப் பெரிய கவனத்தை பெற்றுள்ளது. பாராளுமன்றத்தின் கீழ் சபை மக்களால் நேரடியாக தெரிவு செய்யப்பட்ட 498 உறுப்பினர்களையும் இராணுவ நிர்வாகத்தால் தெரிவு செய்யப்பட்ட 10 உறுப்பினர்களையும் கொண்ட 508 மொத்த உறுப்பினர்களுடன் Video Read the rest of this entry »

Written by lankamuslim

January 24, 2012 at 8:10 am

தடை தாண்டுமா ஈரான்

leave a comment »

மேற்கு நாடுகள் ஈரான் மீது ”அமெரிக்காவின் வழிகாட்டலிலும் இஸ்ரேலின் தூண்டளினாலும்” மற்றுமொரு பொருளாதார தடையை விதித்துள்ளது , அந்த பொருளாதர தடை அறிவிப்பில்  மேற்கு நாடுகள் ஈரானிடமிருந்து பெற்றோலியத்தை இறக்குமதி செய்வதை முற்றாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது . ஆனால் ஈரான் பொருளாதார தன்னிறைவை கொண்ட நாடு அதனால் ஈரானை இந்த தடை பாதிக்க போவதில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை அமெரிக்காவும் , இஸ்ரேலும் ஐரோப்பிய நாடுகளில் Read the rest of this entry »

Written by lankamuslim

January 24, 2012 at 8:07 am

இஸ்லாமிய போதகர்களின் வெளியேற்றம் முஸ்லிம்களைக் கவலையடையச் செய்துள்ளது.

with 3 comments

அஷ் ஷெய்க்  Dr.மஸிஹுதீன் இனாமுல்லாஹ்
அதிகாரிகளின் அணுகுமுறை ஆத்திரமூட்டக் கூடியது. சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வருகை தந்திருந்த தப்லீக் ஜமாஅத் பிரச்சாரகர்களை உடனடியாக நாட்டிலிருந்து வெளியேறுமாறு குடிவரவு குடி பெயர்வு திணைக்களம் விடுத்த அறிவுறுத்தலுக்கிணங்க பொலிஸார் தப்லீக் ஜமாஅத் தலைமையகம் சென்று வேண்டுகோள் விடுத்ததாகவும் பின்னர் 161 பிற நாட்டு இஸ்லாமிய பிரமுகர்களின் சுற்றுலா வீசாவை ரத்துச் செய்ததாகவும் ஊடகங்கள் வாயிலாக இலங்கை முஸ்லிம் சமூகம் அறிந்து கொண்டது. Read the rest of this entry »

Written by lankamuslim

January 24, 2012 at 8:01 am

யாழ்.பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் விசேட உரை

with 6 comments

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் வரவேற்புக்கு மத்தியில் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் அணு விஞ்ஞானானியுமான அப்துல் கலாம் விசேட உரையாற்றியுள்ளார். இவரை யாழ் பல்கலைகழகம் மற்றும் யாழ் இந்து கல்லூரி மற்றும் தமிழ் நிறுவங்கள் யாழ் அழைத்து அவரை சந்தித்துள்ளது அதேவேளை கொழும்பு , மற்றும் மொறட்டுவ பல்கலை கழகங்களுக்கு இவர் விஜயம் செய்துள்ளார் . ஆனால் முஸ்லிம்களை Video Read the rest of this entry »

Written by lankamuslim

January 23, 2012 at 11:36 pm

முஸ்லிம் முதலமைச்சர் என்கின்ற பதம் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கு சொந்தமானது

with 4 comments

ஏ.அப்துல்லாஹ் : கிழக்கு மாகாண முஸ்லிம் முதலமைச்சர் என்கின்ற பதம் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசுக்கு சொந்தமானது. முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எங்களுக்கு முதலமைச்சர் பதவி தேவையில்லையென்று கூறிய பொழுது அதனை தைரியத்தோடும், துணிவோடும் எதிர் கொண்ட கட்சிதான் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ். ஆனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் Read the rest of this entry »

Written by lankamuslim

January 23, 2012 at 6:31 pm

மர்கசின் சிபாரிசுடன் வந்தால் விஸா

with 2 comments

இலங்கையில் முஸ்லிம்கள் மத்தியில் இஸ்லாமிய மார்க்க பிரசாரத்தில் ஈடுபடும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள முஸ்லிம் மார்க்க பிரசாரகர்களை இரு வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்தமை தொடர்பாக இன்று திங்கட்கிழமை குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேராவுடனான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

January 23, 2012 at 6:30 pm

வன்னி : பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும்

leave a comment »

தகவல் ஹபீல், பர்ஹான்: சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் எம்.பி.பாராளுமன்றத்தில் உரை: குற்றவியல் கருமங்களில் உதவியளித்தல் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாறூக் ,பாராளுமன்றில் கூறினார் Read the rest of this entry »

Written by lankamuslim

January 23, 2012 at 10:34 am

மூன்று பாடங்களிலும் திறமைச்சித்தி பெற்றவர்களும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாவதில்லை

leave a comment »

தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள இஸட் ஸ்கோர் முறை ,கல்வி முறை உட்பட  நடைமுறையில் உள்ள அனைத்து நடைமுறைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார் .சில மாணவர்கள் 3 (ஏ) பாடங்களிலும் திறமைச்சித்தியைப் பெற்றிருந்த போதிலும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் சந்தர்ப்பத்தை இழக்கின்றனர். Read the rest of this entry »

Written by lankamuslim

January 23, 2012 at 10:17 am

முன்னாள் புலி உறுப்பினர்கள் 73 பேர் விடுதலை

leave a comment »

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 73 பேர் இன்று மட்டக்களப்பில் வைத்து சமூகமயப்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலைகள் புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் எஸ்.சதீஸ்குமார் தெரிவித்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

January 22, 2012 at 11:26 pm

எகிப்தின் பாராளுமன்ற தேர்தல் இறுதி முடிவுகள் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் அபார வெற்றி

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah:எகிப்தின் பாராளுமன்றத்தின் கீழ் சபைக்கான மூன்றாம் கட்ட தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. உத்தியோக பூர்வ அறிவிப்பின் பிரகாரம் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெற்று மிகப் பாரிய வெற்றி பெற்றுள்ளது. இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சி 47 வீதமான வாக்குகளை பெற்று 498 ஆசனங்களில் 235 ஆசனங்களை கைப்பற்றி முதல் தரத்தில்  வெற்றி பெற்றுள்ளது. ஸலபிகள் அமைப்பின் அரசியல் கட்சியான விரிவாக….

Written by lankamuslim

January 22, 2012 at 8:47 pm

அப்துல் கலாம் – ரவூப் ஹக்கீம் சந்திப்பு

leave a comment »

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களை இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது கிராமிய பிரதேச அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் Read the rest of this entry »

Written by lankamuslim

January 22, 2012 at 4:48 pm

நாட்டை விட்டு வெளியேறுங்கள் இஸ்லாமிய பிரசாரகர்ளுக்கு அரசு பணிப்பு

with 11 comments

M.ரிஸ்னி முஹம்மட்: தப்லீக் ஜமாஅத்தின் மர்கசுக்கு சென்ற போலீசார் உத்தரவு: இலங்கையில் இஸ்லாமிய மார்க்க பிரசாரத்தில் ஈடுபடும் நோக்கில் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள முஸ்லிம் மார்க்க பிரசாரகர்களை இரு வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கள் உத்தரவிட்டுள்ளது . கொழும்பு கிராஸ்பாசிலுள்ள தப்லீக் ஜமாஅத்தின் தலைமையகத்துக்கு வியாழகிழமை சென்ற பொலிசார் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் . சிற்றுலா விசாவில் வந்து வேறு பணிகளில் ஈடுபட முடியாததால் இவர்களை வெளியேறுமாறு Read the rest of this entry »

Written by lankamuslim

January 22, 2012 at 1:21 pm

சம்மாந்துறை மெளலவி போதைப் பொருள் குற்றசாட்டில் சென்னையில் கைது! ?

with one comment

சம்மாந்துறையை சேர்ந்த ஏ.சீ.எம்.புஹாரி மௌலவி உள்ளிட்ட ஆறு பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் சென்னை விமான நிலையத்தில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுமார் 1.5 கோடி இந்திய ரூபா பெறுமதியான 6.5 கிலோ கிராம் போதைப்பொருட்களை சென்னை விமான நிலையத்திலிருந்து கோலாம்பூரிற்கு கடத்த முற்பட்ட போதே, சுமார் 70 வயதான புஹாரி மௌலவி உள்ளிட்ட ஆறு பேர் Read the rest of this entry »

Written by lankamuslim

January 22, 2012 at 10:25 am

மதில் உடைந்து வீழ்ந்ததில் இரு சிறுவர்கள் வபாத்

leave a comment »

தகவல்:ஏ.அஜ்மல்: நீர்கொழும்பு பெரியமுல்லை பகுதி வீடொன்றின் முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மீது மதில் உடைந்து வீழ்ந்ததில் இரு சிறுவர்கள் பரிதாபகரமாக வபாத்தாகியுள்ளனர். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் பெரியமுல்லை லாஸரஸ் வீதியில் இடம்பெற்றுள்ள்து. Read the rest of this entry »

Written by lankamuslim

January 22, 2012 at 9:59 am

‘மும்மொழி இலங்கை’ செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது

leave a comment »

‘மும்மொழி இலங்கை’ செயற்திட்டம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஆகியோர் ‘மும்மொழி இலங்கை’ திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளனர். Read the rest of this entry »

Written by lankamuslim

January 21, 2012 at 10:15 pm

வடகிழக்குத் தமிழரும் முஸ்லிம்களும் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும்

with 5 comments

எம் .ஐ.எம். முஹிதீன்
*கிழக்கு மாகாணம் விரைவில் சிங்கள மயமாகுவதிலிருந்து பாதுகாக்கப்பட வேண் டுமானால் இலங்கை-இந்திய உடன்படிக்கையில் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழ்விடம் எனக்கூறப்பட்டிருக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு தனியான ஒரு மாகாண சபை ஏற்படுத்தப்பட வேண்டும்.

*அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தில் கூறபட்டிருக்கும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் உடனடியாக அனைத்து மாகாண சபைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். Read the rest of this entry »

Written by lankamuslim

January 21, 2012 at 12:59 pm

நீதியமைச்சு தொடர்பான பரிந்துறைகள் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை

leave a comment »

நீதியமைச்சினால் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால்  பரிந்துரைக் கப்பட்டுள்ள பரிந்துரைகளை குறுகிய கால எல்லைக்குள் நிறைவேற்றுவதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என நீதியமைச்ர் ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

January 21, 2012 at 11:54 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 102 other followers