புத்தளம், குருணாகல் மாவட்ட அபிவிருத்திக்கு 2001 கோடி ரூபா
வடமேல் மாகாண சபைக்குட்பட்ட புத்தளம், குருணாகல் மாவட்டங்களின் இவ்வாண்டு அபிவிருத்திக்காக 2001 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதலான நிதி பாதை புனர்நிர்மாணம், சுகாதாரம், கல்வி அபிவிருத்திக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண தலமைச்சர் சட்டத்தரணி அதுல விஜேசிங்க தெவித்துள்ளார்.
இதில் பாதைகள் அபிவிருத்திக்காக 36 கோடி நிதியும், சுகாதார நடவடிக்கைக்காக 33 கோடி ரூபாவும், கல்வி முன்னேற்றத்துக்காக 29 கோடி ரூபாவும் இம்றை வரவு – செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு ள்ளது.
மற்றும் பொது வேலைத்திட்டத்துக்காக 1773கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ள அதே வேளை இதர நிர்மாண, கட்டுமான செலவு க்காக 228 கோடி ரூபாவும் வழங்கப்பட் டுள்ளது. இதனோடு தனியார்துறை வளர் ச்சிக்காக 1362 கோடி ரூபாவும் ஒதுக்கப் பட்டுள்ளதென தலமைச்சர் அதுலவிஜே சிங்க மேலும் தெவித்துள்ளார் .








மாவட்டத்தின் தலைநகர் புத்தளம் என்றுதான் சட்டகோவைகள் கூறுகிறது ஆனால் அபிவிருத்திக்கான நிதி என்று வரும்போது அந்த நிதிகள் சிலாபத்துக்கும் ஏனைய பிரதேசங்களுகும்தான் போகிறது இதுவும் அப்படித்தான என்று பார்க்கவேண்டும் , கடந்த ஆண்டிலும் பெரும் தொகை ஒதுக்கபட்டது ஆனால் புத்தளத்துக்கு அந்த குறித்த ஒதுக்கீட்டு நீதியின் மூலம் எதுவும் செய்யப்படவில்லை ஆனால் சட்டகோவைகள் புத்தளம் மாவட்டத்தின் தலைநகரம் புத்தளம் என்றுதான் கூறுகிறது . இந்த நிலை நாட்டின் எந்த ஒரு மாவட்ட தலைநகருக்கும் இல்லை
AKR
December 31, 2011 at 12:27 am