வயோதிப பெண் ஒருவர் படுகொலை
வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசத்தில் முஸ்லிம் வயோதிப பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தப் பெண்ணின் கணவர் வெளியே சென்றிருந்த போதே இவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. ஓட்டமாவடி, புஹாரி மௌலவி வீதியை சேர்ந்த வெள்ளைக்குட்டி வெள்ளை உம்மா வயது 64 என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது ஜனாஸா பரிசோதனைக்காக வாழைச் சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது என்று ஓட்டமாவடி தகவல்கள் தெரிவிக்கின்றன.







