Lankamuslim.org

One World One Ummah

Archive for December 2011

10 ஆயிரத்துக்கும் அதிகமான நியமனங்கள் முஸ்லிம் எவருக்கும் நியமனம் வழங்கப்படவில்லை

leave a comment »

அண்மையில் வடமாகாணத்தில் 100 முஸ்லிம் இளைஞர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டது இதை தொடர்ந்து அமைச்சர் ரிஷாத் பதியூதீன் வேலை வாய்ப்பு வழங்கும் விடயத்திலும் பக்கச்சார்பாக நடந்து கொண்டதாக சிலர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர் இது தொடர்பாக தெளிவு படுத்தியுள்ள அமைச்சர் 100 முஸ்லிம் இளைஞர்களுக்கு நான் விவசாயதிணைக்களத்தில் வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுத்ததாகக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கடந்த 21 வருடங்களில் வட மாகாணத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான நியமனங்கள் வழங்கப்பட்டன. Read the rest of this entry »

Written by lankamuslim

December 31, 2011 at 6:19 pm

11 பேருடன் சடலத்தை காணவில்லை: போலிச் செய்தி அமைச்சர் டக்ளஸ்

leave a comment »

சென்னையிலிருந்து விமானம் மூலம் கொண் டுவரப்பட்ட இறந்தவரின் சடலத்தை பொறுப்பெடுத்து யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதற்கு வந்த அவரது 11 உறவினர்கள் பத்து நாட்களாக காணாமல் போயிருக்கிறார்கள் என்ற செய்தியை டிசம்பர் மாதம் 29ஆம் திகதி உதயன் பத்திரிகையின் முன்பக் கத்தில் பார்த்த பின்னர் அதுபற்றி தாம் விசாரணை களை மேற்கொண்ட போது இது ஒரு தவறான செய்தி என்பதை தெரிந்து கொண்டேன். Read the rest of this entry »

Written by lankamuslim

December 31, 2011 at 6:19 pm

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம்

with one comment

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல், தொழில்நுட்ப பீடம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல் தெரிவித்துள்ளார். அதேவேளை மேலும் விஞ்ஞான பீடத்தில் கணணி, புள்ளிவிபரவியல், பௌதீகவியல் இரசாயனவியல் உயிரியல் துறைகளில் விசேட கற்கை நெறிகளை ஆரம்பிக்க Read the rest of this entry »

Written by lankamuslim

December 31, 2011 at 12:49 pm

“சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா!” XII

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்
பாகம் 12: “ஒவ்வொரு நட்பின் பின்னாலும் சில சுய அக்கறை இருக்கிறது. சுய அக்கறையின்றி நட்பில்லை . இது ஒரு கசப்பான உண்மை” – சாணக்கியன் There is some self-interest behind every friendship. There is no Friendship without self-interests. This is a bitter truth.” – Chanakya – “பேராளர்களும்” “ போராளிகளும்”! முஸ்லிம் காங்கிரஸ் கட்சின் ”போராளிள் ” என்று சொல்லப்பட்ட நிசாம் காரியப்பர் பின்னாளில் பேராளர்கள் என்று சொல்லப்பட்டவர்களால் திட்டமிட்ட வகையில் ஓரங்கட்டப்பட்டார். Read the rest of this entry »

Written by lankamuslim

December 31, 2011 at 8:34 am

புலிகள் இழைத்த கொடுமைகளை யாழ்.மாநகர சபையில் பேசமுடியாத மிக ஆபத்தான நிலை ?

with 18 comments

இணைப்பு -2 யாழ் இஷாக்: யாழ்.மாநகர சபையின் 2011 ஆண்டுக்கான இறுதிக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. சபை ஆரம்பித்தவுடன் முதல்வரின் விசேட அனுமதி பெற்ற ஆளும் தரப்பு உறுப்பினர் விஜயக்காந், ‘சிறைகளில் வாடுவோரின் விரைவான விடுதலையும் காணாமல் போனோர் தொடர்பான விசாரணையும்’ என்ற தலைப்பிலான பிரேரணை முன்வைத்து உரை நிகழ்த்தினார். Read the rest of this entry »

Written by lankamuslim

December 30, 2011 at 9:21 pm

யு.என்.எச்.சீ.ஆர் நிறுவனதிற்கு எதிராக வழக்கு தொடருவோம் : அமைச்சர் ரிஷாத்

leave a comment »

வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு யு.என்.எச்.சீ.ஆர் நிறுவனமே தடையாக உள்ளது என கைத்தொழில் மூதலீட்டு அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான றிசாட் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் யு.என்.எச்.சீ.ஆர் நிறுவனத்திற்கு எதிராக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

December 30, 2011 at 7:53 pm

அரசு, தமிழ் கூட்டமைப்பு பேச்சு ஜனவரி 17 இல் முஸ்லிம் அரசியல் கூட்டு முன்னணி தயாராகி விட்டதா ?

leave a comment »

முஸ்லிம் அரசியல் கூட்டு முன்னணியை உருவாக்க எந்த ஏற்பாடுகளையும் காணமுடியவில்லை:   அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வாவும் பேச்சுநடத்தித் தீர்மானிப்பார்கள் என பேச்சுவார்த்தையில் பங்கெடுக்கும் அரசாங்கக் குழுப் பிரதிநிதியும், பாராளுமன்ற உறுப்பினருமான ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

December 30, 2011 at 11:42 am

யாழ். பிரதி மேயராக ஒரு முஸ்லிம் நியமனம்

leave a comment »

யாழ். பிரதி மேயராக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினரான சட்டத்தரணி எம்.எம்.ரமீஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இவர் விரைவில் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

December 30, 2011 at 11:41 am

உயர்தர பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதல் 10 இடத்திற்குள் தெரிவான முஸ்லிம் மாணவர்கள்

with 6 comments

2011 ஆம் ஆண்டு  க.பொ.தா. உயர்தர பெறுபேறுகளுக்கமைய விஞ்ஞான,  கணித கலை, வர்த்தக, பிரிவுகளில் சிறப்பு சித்தி பெற்ற முதல் 10 பேரின் பட்டியலை பரீட்சைகள் திணைக்க ஆணையாளர் அநுர எதிரிசிங்க நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டார். இதன்படி உயிரியல் விஞ்ஞான பிரிவில் கொழும்பு-12 பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி எம்.எஸ். பாத்திமா ஹாலிதா மூன்றாவதாகவும், கணித பிரிவில் கொழும்பு தேர்ஸ்டர்ன் கல்லூரி மாணவன் எம்.ஆர்.எம். ஜவாத் சாலி 10 ஆவதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். Read the rest of this entry »

Written by lankamuslim

December 30, 2011 at 11:31 am

புற்றுநோயை பரப்புகின்றதாக அமெரிக்கா ?: சாவிஸ் குற்றச்சாட்டு

leave a comment »

அமெரிக்கா தனக்கு வேண்டாத நாடுகளின் தலைவர்களுக்கு ரகசியமாக புற்றுநோயைப் பரப்பி வருகின்றதா என தான் சந்தேகம் கொண்டுள்ளதாக வெனிசுலா ஜனாதிபதி ஹூகோ சாவிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தீவிர எதிர்ப்பாளரான சாவிஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இவரைத் தவிர பரகுவே ஜனாதிபதி பெர்ணான்டோ லுகோ, பிரேசில் ஜனாதிபதி டில்மா ரௌசெப், பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி லூலா டி சில்வா ஆகியோரும் Read the rest of this entry »

Written by lankamuslim

December 30, 2011 at 11:20 am

பாணந்துறையில் வர்த்தகர் கோடரியினால் வெட்டி கொலை

with one comment

பாணந்துறை கொறக்கானை என்ற இடத்தில் வர்த்தகர் ஒருவர் கோடரியினால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்று முன்தினம் (28) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான 48 வயதையுடைய முகம்மது சித்தீக் என்பவர் என பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். Read the rest of this entry »

Written by lankamuslim

December 30, 2011 at 11:18 am

காணி போலீஸ் அதிகாரம் தொடர்பில் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு என்ன ?

leave a comment »

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் துணை பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் அரசாங்கத்தின் காணி மற்றும் போலீஸ் அதிகாரங்களை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வழங்குவது இல்லை என்ற தீர்மானத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உடன்படவில்லை என்று தெரிவித்துள்ளார் மேலும் அவர் தெரிவித்துள்ள தகவலில் கடந்த 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற அனைத்து கட்சி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ வடக்கு கிழக்கு பிரச்சினையை தீர்பதற்கு அதிகார பகிர்வு வழங்கபடும் என்று தெரிவித்திருந்தார் என்றும் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் அரசாங்கள் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் என்றும் நன்புவதகவும் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

December 29, 2011 at 8:11 pm

முதல் இனச்சுத்திகரிப்பை செய்து முஸ்லிம்களை சிங்களவர்களை வெளியேற்றியவர்கள் புலிகள்

leave a comment »

விடுதலைப் புலிகளால் முதல் இனசுத்திகரிப்பு செய்து வெளியேற்றப்படுவதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களும் சிங்களவர்களும்  அதிகமாக வசித்தனர். சிங்களவரோ, தமிழரோ முஸ்லிமோ அவர், யாராக இருந்தாலும் விரட்டியடிக்ககப்பட்ட அவர்களுக்கு   அவர்களின்  பாரம்பரியமாக வாழ்விடம் அவர்களிடம் திருப்பி கொடுக்கப்படவேண்டும். மேற்குலகம் என்னைத் தங்களின் அடிமையாக வைத்திருக்கப் பார்க்கிறது. அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

December 29, 2011 at 11:36 am

புத்தளம், குருணாகல் மாவட்ட அபிவிருத்திக்கு 2001 கோடி ரூபா

with one comment

வடமேல் மாகாண சபைக்குட்பட்ட புத்தளம், குருணாகல் மாவட்டங்களின் இவ்வாண்டு அபிவிருத்திக்காக 2001 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதலான நிதி பாதை புனர்நிர்மாணம், சுகாதாரம், கல்வி அபிவிருத்திக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண தலமைச்சர் சட்டத்தரணி அதுல விஜேசிங்க தெவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

December 29, 2011 at 11:30 am

இரண்டாவது அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணி ஜனவரியில் ஆரம்பம்

leave a comment »

நாட்டின் இரண்டாவது அதிவேக நெடுஞ்சாலையாக கொழும்பு – கண்டி வீதியை அமைப்பதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் புதுஆண்டுடன் ஆரம்பிக்கப்படும் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை கண்டியிலிருந்து ரம்புக்கன வழியாக கொழும்புக்கு செல்லும் வகையில் அமைக்கப்படவிருந்தது. என்றும் பலரின் விருப்பத்திற்கு அமைவாக வீதி அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

December 29, 2011 at 10:34 am

வர்த்தக கேந்திர நகரமாக நமது நகர் வளர்த் தெடுக்கப்பட வேண்டும்

leave a comment »

புத்தளம் நகர சபையின் 2012ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை சபை தலைவர் கே. ஏ. பாயிஸ் சபையில் சமர்ப்பித்து ஆற்றிய உரையின் சில முக்கிய பகுதியை இங்கு தருகிறோம். முக்கிய பகுதி:  நகர சபையின் கடந்துபோன பல நிருவாகங்களுக்கு தெரியாமலே போய் விட்ட நகர சபைக்கு சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை தேடிக்கண்டுபிடித்திருக்கும் நாம் அவற் றின் மூலம் புதிய வருமானங்களைப் Read the rest of this entry »

Written by lankamuslim

December 29, 2011 at 10:27 am

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும் முஸ்லிம் விமர்சங்களும்

leave a comment »

ஏ.அப்துல்லாஹ்: கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்து அது தொடர்பான விமர்சங்கள் தொடராக முன்வைக்கப்படுகின்றது, தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த அறிக்கையை நிராகரித்துள்ளது அதேபோன்று ஜாதிக ஹெல உரிமைய கட்சியும் அதை நிராகரித்துள்ளது. இன்னும் பல தமிழ் ,சிங்கள கட்சிகளும் நிராகரித்துள்ளது. இந்த நிலையில் முஸ்லிம்கள் தொடர்பில் குறித்த அறிக்கை மௌனம் காத்துள்ளது என்று விமர்சங்கள் முன்வைக்கப் பட்டுவருகின்றது. Read the rest of this entry »

Written by lankamuslim

December 28, 2011 at 3:36 pm

ஹமாஸ் அரசியல் தலைவருக்கு இஹ்வான்களின் பலத்த வரவேற்பு

leave a comment »

OurUmmah: பலஸ்தீன பிரதமரும் ஹமாஸ் இயக்கத்தின் முன்னணித் அரசியல் தலைவர்களுள் ஒருவருமான இஸ்மையில் ஹனியா எகிப்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள தகவலில் ஹமாஸ் எகிப்து இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் இராணுவ பிரிவு என்று தெரிவிதுள்ளார். -أن حركة حماس لا تخفى انتماءها للإخوان، وأنها تمثل الحركة الجهادية للجماعة.-இப்படி கூறியதன் மூலம் பலஸ்தீன விடுதலை போரில் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் காசாவில் ஆயுதப்போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.Video விரிவாக…..

Written by lankamuslim

December 28, 2011 at 11:41 am

எகிப்தை ஆளத் தயாராகும் இஸ்லாமிய கட்சிகள்

leave a comment »

M.ரிஸ்னி முஹம்மட்
OurUmmah: இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் அரசியல் கட்சியான சுதந்திரத்துக்கும் நீதிக்குமான அரசியல் கட்சி அரசியல் யாப்பை வரைவதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டும் என்ற சில ஆர்பாட்டகாரர்களின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. யாப்பை வரைய முன்னர் இராணுவ நிர்வாகம் தனது அதிகாரத்தை துறந்து அதனை பொது மக்களில் ஒருவருக்கு வழங்க வேண்டும் அவர் இடைக்கால ஜனாதிபதியாக செயல்பட வேண்டும் என்று ஆர்பாட்டத்தில் ஈடுபடும் சிறிய அமைப்புக்கள் கூறிவருகின்றது. விரிவாக…

Written by lankamuslim

December 28, 2011 at 11:35 am

இடம்பெயர்ந்த வடமாகாண ஆசிரியர்களை மீண்டும் வடமாகாணத்தில் இணைக்க நடவடிக்கை

leave a comment »

யாழ் இஷாக்: வடமாகாணத்தில் வசித்து இடம்பெயர்ந்து ஏனைய மாகாணங்களில் உள்ள அரசாங்க பாடசாலைகளில் கடமையாற்றிக்கொண்டிருக்கும் வடமாகாண முஸ்லிம் ஆசிரியர்கள் ஆசிரிய உதவியாளர்கள் முதலாம் தவணை ஆரம்பத்தில் வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் மீண்டும் கடமைப் பொறுப்பேற்பதற்கு நடவடிக்கை மே ற்கொள்ளப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

December 28, 2011 at 9:59 am

கிராமத்தின் பெயர் மாற்றம்: ஈராக் தூதுவராலயம் அறிக்கை

leave a comment »

மட்டக்களப்பு ஏறாவூர், சதாம் ஹுஸைன் கிராமத்தின் பெயர் மாற்றம் தொடர்பில் எவ்வித தலையீடுகளையும் நாம் மேற்கொள்ளவில்லை என கொழும்பிலுள்ள ஈராக் தூதுவராலயம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக்கான ஈராக் தூதுவர் கஹ்தான் தாஹா ஹலப் தெரிவித்துள்ளதாவது, Read the rest of this entry »

Written by lankamuslim

December 28, 2011 at 9:57 am

ஒலுவில் ஆலிம் சேனை பிரதேசத்தில் முஸ்லிம்களின் காணிகள் தொடர்பில் நடவடிக்கை

leave a comment »

ஒலுவில் ஆலிம் சேனை பிரதேசத்தில் முஸ்லிம்களின் காணிகளில் இராணுவத்தினர் முகாம் அமைத்திருப்பது தொடர்பான பிரச்சினைகளை கேட்டறிந்து கொள்வதற்காக  சில தினங்களுக்கு முன்னர் ஆலீம் சேனை பிரதேசத்திற்கு கல்னை மாநகரசபையின் பிரதிமேயரும், முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளருமான சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.இவ்விஜயத்தின் போது பிரபல சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவும் சென்றுள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

December 27, 2011 at 2:54 pm

சகல இன மக்களினதும் இன மற்றும் பிரதேச சமத்துவம் பேணப்பட்டே நிதி ஒதுக்கீடுகள் வேண்டும்

leave a comment »

சகல இன மக்களினதும் இன மற்றும் பிரதேச சமத்துவம் பேணப்பட்டே எதிர்காலத்தில் அபிவிருத்திப் பணிக்கான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஏறாவூர் பிரதேச அபிவிருத்திக் குழுத்தலைவரும், பிரதியமைச்சருமான பஷீர் சேகுதாவூத் கூறினார். ஏறாவூர் நகர பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தலைமை வகித்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

December 27, 2011 at 2:38 pm

புத்தளத்துக்கு இரண்டு புதிய உள்ளூராட்சி மன்றங்கள்

leave a comment »

எமது புத்தளம் செய்தியாளர்: வடமேல் மாகாணத்தில் மேலும் மூன்று உள்ளூராட்சி மன்றங்களை புதிதாக ஏற்படுத்த தீர்மானித்திருப்பதாக வடமேல் மாகாண தலமைச்சர் அத்துல விஜேசிங்க தெவித்துள்ளார். புதிதாக ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் புத்தளம் மாவட்டத்தில் இரு உள்ளூராட்சி மன்றங்களும் குருணாகல் மாவட்டத்தில் ஒன்றுமாக உருவாக்கப்படவுள்ள என்று அறிய முடிகின்றது. Read the rest of this entry »

Written by lankamuslim

December 27, 2011 at 2:02 pm

அலவி மௌலானாவின் கூற்றை கண்டித்து காத்தான்குடி சம்மேளனம் அறிக்கை

with one comment

எமது காத்தான்குடி செய்தியாளர்: ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இந்நாட்டில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்கள் சம்பந்தமாக அவர்களுடைய இருப்பு நிலைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதத்தில் பல்வேறு சிங்கள மற்றும் தமிழ் கடும்போக்காளர்கள் அவ்வப்போது முஸ்லீம்களின் மனதைப் புன்படுத்தும் விதத்தில் பல்வேறு அறிக்கைகளை விடுவதை நாம் அண்மைக் காலமாக அவதானித்து வருகின்றோம். குறிப்பாக கிழக்கு வாழ் முஸ்லீம்களை மையப்படுத்தியதாக பல்வேறு பொய்யான, அபாண்டமான, Read the rest of this entry »

Written by lankamuslim

December 27, 2011 at 1:04 pm

சிறுபான்மையினர் ஒருவர் பிரதமராக முடியாதிருப்பது கவலைக்குரிய விடயமாகும்

leave a comment »

நூற்றுக்கு ஒரு வீதமாக இருக்கின்ற சீக்கியர் ஒருவர் இந்தியாவில் பிரதமராக பதவி வகிக்க முடிந்தபோதும் சிறுபான்மை இனத்தவர் ஒருவர் இலங்கையின் பிரதமராக முடியாதிருப்பது கவலைக்குரிய விடயமாகும் என்று உயர் கல்வி அமைச்சர் எஸ். பி திஸநாயக்கா தெரிவித்தார்.கண்டி, மட்டவளை வை.எம்.எம்.ஏ இயக்கத்தினர் மட்டவளை மதீனா தேசியப்பாடசாலையில் ஒழுங்கு செய்த கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

December 27, 2011 at 12:20 pm

வயோதிப பெண் ஒருவர் படுகொலை

leave a comment »

வாழைச்சேனை, ஓட்டமாவடி பிரதேசத்தில் முஸ்லிம் வயோதிப பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தப் பெண்ணின் கணவர் வெளியே சென்றிருந்த போதே இவர் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. ஓட்டமாவடி, புஹாரி மௌலவி வீதியை சேர்ந்த வெள்ளைக்குட்டி வெள்ளை உம்மா வயது 64 என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இவரது ஜனாஸா பரிசோதனைக்காக Read the rest of this entry »

Written by lankamuslim

December 27, 2011 at 10:25 am

இலங்கையின் மிகவும் உயரமான கட்டடத்திற்கான நிர்மாணப் பணிகள்

leave a comment »

இலங்கையின் மிகவும் உயரமான கட்டடத்திற்கான நிர்மாணப் பணிகள் அடுத்த மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ளதென தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பு மாநகரில் நிர்மாணிக்கப்படவுள்ள 350 மீற்றர் உயரம் கொண்ட இந்தக் கட்டத்தை நிர்மாணிப்பது தொடர்பிலான உடன்படிக்கை அடுத்தவாரம் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் Read the rest of this entry »

Written by lankamuslim

December 27, 2011 at 10:11 am

தியத்தலாவை இராணுவ பயிற்சிக் கல்லூரியில்பிரதம அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி

leave a comment »

தியத்தலாவை இராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிகளை முடித்து வெளியேறும் இராணுவ அதிகாரிகளின் பிரியாவிடை மற்றும் மரியாதை அணிவகுப்பு நிகழ்வு இன்று 27.12.2011 தியத்தலாவையில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மாலைதீவு ஜனாதிபதி மொஹமட்  நசீத் கலந்துகொண்டுள்ளார் . தியத்தலாவை இராணுவ பயிற்சிக் கல்லூரியில் நடைபெறும் பிரியாவிடை, மரியாதை அணிவகுப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு அரச தலைவர் இவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

December 27, 2011 at 10:03 am

மன்னாரில் 2 ஆம் கட்ட பெற்றோலிய அகழ்வு

leave a comment »

மன்னார் கடல் படுக்கையில் அண்மையில் பெற்றோலிய வளமுள்ளதாகக் கண்டறியப்பட்ட எண்ணெய்க் கிணறுகளில் அடுத்த கட்ட அகழ்வாய்வை மேற் கொள்ளவுள்ளதாக ஆய்வுக்குப் பொறுப்பான Cairn “கரைன் லங்கா’ என்ற இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. அது வெளியிட்டுள்ள தகவலில் மன்னாரில் மூன்று எண்ணெய்க் கிணறுகளில் எமது நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டது. இதன் போது அவற்றின் இரண்டு கிணறுகளில் இயற்கை வாயு கண்டறியப்பட்டது. Read the rest of this entry »

Written by lankamuslim

December 27, 2011 at 10:03 am

“சொல்லவா கதை சொல்லவா நடந்த கதை சொல்லவா!” XI

leave a comment »

எஸ்.எம்.எம்.பஷீர்
“என்ன, எப்பொழுது, எங்கே, எப்படி யார் பெறுகிறார்கள் என்பதே அரசியல் “- ஹரல்ட் லாஸ்வெல்தொடர்: பதினொன்று முதற் கோணல் முற்றும் கோணல்: காரியப்பருக்கு ஏற்பட்ட க(ச)தி பற்றியும் எழுத முன்னரே காரியப்பரே சில தகவல்களை வெளிப்படையாகவும் சொல்லிவிட்டார்.நிஸாம்: இரவு எடுத்த முடிவை அடுத்த நாள் காலையில் நடைமுறைப்படுத்துவதற்கு திராணியற்ற தலைமைத்துவம் இரண்டு வருடங்கள் கழித்து இதனை நடைமுறைப்படுத்தும் Read the rest of this entry »

Written by lankamuslim

December 27, 2011 at 9:24 am

கல்முனை வலய ஆசிரியைகளின் இடமாற்றம் ரத்து

leave a comment »

கல்முனை வலயத்திலிருந்து கிண்ணியா வலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட சகல ஆசிரியைகளின் இடமாற்றமும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார இவ்வறிவுறுத்தலை கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஈ. போலியிடம் விடுத்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

December 26, 2011 at 3:50 pm

ஏழாவது சுனாமி அனர்த்தத்தை நினைவூட்டும் தேசிய பாதுகாப்பு தினம்

leave a comment »

F.M.பர்ஹான்: ஏழாவது சுனாமி அனர்த்தத்தை நினைவூட்டும் டிசம்பர்26 திகதியான இன்று 06வது தேசிய பாதுகாப்பு தின வைபவங்கள்  மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் கோலாகலமாக பிரதமர் தி.மு.ஜயரத்ன தலைமையில் நடைபெற்றது. இதன்போது சுனாமி அனர்த்தின் போது உயிர்நீத்தவர்களுக்காக இரண்டு நிமிட நேர மௌனம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழவில் இராணுவம் மற்றும் பொலிஸ், விமானப்படை, கடற்படை Read the rest of this entry »

Written by lankamuslim

December 26, 2011 at 3:25 pm

பொத்துவில் முஸ்லிம் விவசாயிகளுக்கு வன இலாகா மீண்டும் தடை

leave a comment »

பொத்துவில் கறங்கோவையிலுள்ள விவசாயக் காணியில் முஸ்லிம் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு வன இலாகா மீண்டும் தடை ஹஸன் அலி தனது ஆட்சேபனையை எழுத்து மூலம் அமைச்சரிடம் ஒப்படைத்து நியாயம் வேண்டியுள்ளார்.பொத்துவில் கறங்கோவையிலுள்ள 502 ஏக்கர் விவசாயக் காணியில் முஸ்லிம் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு வன இலாகா மீண்டும் தடை விதித்துள்ள விடயம் 21.12.2011ல் காணி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

December 26, 2011 at 2:59 pm

தேசிய,மாவட்ட ரீதியிலான தர அறிவிப்பில் தவறு

leave a comment »

நேற்று இரவு வெளியாகியுள்ள 2011 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் மாவட்ட மற்றும் தேசிய ரீதியிலான நிலைகளில் குழப்பங்கள் காணப்படுவதால் மாவட்ட, தேசிய ரீதியிலான நிலைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனை சீர்செய்யும் நடவடிக்கைகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read the rest of this entry »

Written by lankamuslim

December 26, 2011 at 1:17 pm

டி.பி.ஜயா மாவத்தையில் இளைஞர் வெட்டிக் கொலை

leave a comment »

கொழும்பு டி.பி.ஜயா மாவத்தையில் இரு தரப்பினருக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 24 வயதுடைய முஹம்மத் சிராஸ் என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மோதல் சம்பவம் நேற்றிரவு 9.40 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

December 26, 2011 at 1:00 pm

தேசிய பாதுகாப்பு விழாவில் ஐவருக்கு பாராட்டு

leave a comment »

மட்டக்களப்பு காதான்குடியில் இன்று நடைபெரும் 6 ஆவது தேசிய பாதுகாப்பு தின விழாவின்போது மூன்று உயர் அதிகாரிகளும் இரண்டு மக்கள் பிரதிநிதிகளும் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர். இவ்வருடற்பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது ஆற்றிய Read the rest of this entry »

Written by lankamuslim

December 26, 2011 at 12:07 pm

க. பொ. த. உயர்தரப் பரீட்சை முடிவுகள் இணையத்தில்

leave a comment »

2011 ஆம் ஆண்டு க. பொ. த. உயர்தரப் பரீட்சை முடிவுகள்  சற்று முன்னர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  பெறுபேறுகளை பார்க்க இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளமான http://www.doenets.lk/exam/index.html க்கு சென்று பரீட்சை சுட்டிலக்கத்தை உள்ளீடு செய்து பெறுபேறுகளை பார்வையிடமுடியும்

Written by lankamuslim

December 25, 2011 at 10:57 pm

தங்காலை பிரித்தானிய பிரஜை கொலை விசாரணை ஆரம்பம்

leave a comment »

தங்காலை ஹோட்டல் ஒன்றில் வெளிநாட்டவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் Read the rest of this entry »

Written by lankamuslim

December 25, 2011 at 9:04 pm

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுத் தொடர்பில்

with 8 comments

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடனான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சு தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராஜாவிடம் தினகரன் வினாவிய போது முஸ்லிம் மக்கள் இல்லாமல் வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது சாத்தியமாகாது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனியாக போட்டியிட்டால் பெரும்பான்மை இனத்திற்கு தாரைவார்த்துக் கொடுக்கும் செயலாக அமைந்துள்ளது. முஸ்லிம்கள் இன்றி கிழக்கைக் கேட்டாலும் Read the rest of this entry »

Written by lankamuslim

December 25, 2011 at 1:26 pm

மொக்குத் தனமான அறிக்கைகளை விட்டு முஸ்லிம்களைக் காட்டிக் கொடுக்க வேண்டாம்

with 10 comments

கிழக்கில் ஆயுதக் குழுக்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை இது சுத்தமான பொய் ஆளுநர் அலவி மௌலானாவின் அறிக்கையை கண்டு நான் ஆச்சரியப்பட்டேன் மொக்குத் தனமான அறிக்கைகளை விட்டு முஸ்லிம்களைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் என பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கேட்டுக்கொண்டுள்ளார் , கிழக்கை பற்றி எதுவும் அறியாத அவர் உளறிகொட்டிக் கொண்டுடிருக்கிறார். Read the rest of this entry »

Written by lankamuslim

December 25, 2011 at 12:20 pm

அரசையும் , தமிழ் கூட்டமைப்பையும் நோக்கி முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கை

leave a comment »

தேசிய இனப்பிரச்சினைக்கு பேச்சின் ஊடாக தீர்வு ஒன்றைக் காணக் கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நழுவவிடக் கூடாது அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொண்டு நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்பட ஒத்துழைக்க வேண்டும் என்றும் அது தெரிவித்துள்ளது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »

Written by lankamuslim

December 25, 2011 at 10:50 am

சம்மாந்துறையில் இளம் மாணவியின் ஜனாஸா

with one comment

ஏ. அப்துல்லாஹ் : சம்மாந்துறை  மல்கம்பிட்டி வீதி தல்அரம்மல 2ஆம் பிரதேசத்தில் நேற்று மாலை கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் இளம் பெண்ணின் ஜனாஸா ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை தகவல்கள் தெரிவிக்கின்றது. இது கொலை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. மகள் ஒரு நபரை காதலிக்கிறார் எனவும் அந்த ஆணுடன் சுத்தித் திரிவதாகவும் அயலவர்கள் Read the rest of this entry »

Written by lankamuslim

December 24, 2011 at 8:56 pm

A/L பரீட்சை பெறுபேறு நாளை வெளியாகிறது

leave a comment »

நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை -25- வெளியிடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை காலை 10 மணியளவில் பெறுபேறுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Written by lankamuslim

December 24, 2011 at 8:16 pm

குழந்தைகளை கடத்தியதாக பெற்றோர் கைது !!!

leave a comment »

பிரிட்டனில் நீதிமன்ற உத்தரவின் பேரில் பெற்றோரிடமிருந்து பிரித்து பராமரிக்கப்பட்டு வந்த இரு குழந்தைகளுடன் அந்த குழந்தைகளின் பெற்றோரான இலங்கையை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படும் மொஹம்மத் பாயிஸ் மற்றும் சுக்ரி வஹாப் என்ற தம்பதியர்  தலைமறைவாகியுள்ளனர் என்ற அறிவிப்பு பிரிட்டன் Read the rest of this entry »

Written by lankamuslim

December 24, 2011 at 8:10 pm

இந்திய முஸ்லிம்கள்:சிறுபான்மை ஒதுக்கீடு-ஆதரவும் எதிர்ப்பும்

leave a comment »

BBC Tamil செய்தி :இந்தியாவின் நடுவணரசில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் 27 சதவீத ஒதுக்கீட்டில், மதச் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீதத்தை தனியே உள் ஒதுக்கீடு செய்ய ஒப்பதல் அளித்துள்ளது.  இந்த முடிவு விரைவில் நடக்க இருக்கும் உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை கவனத்தில் கொண்டு Audio Read the rest of this entry »

Written by lankamuslim

December 24, 2011 at 1:01 pm

கிராமத்துக்கு எந்த பெயர் வைப்பது ?

leave a comment »

மட்டக்களப்பு ஏறாவூரில் அமைந்துள்ள சதாம் ஹூஸைன் கிராமம் “சதாம் ஹூஸைன் கிராமம்”கிராமம் என சட்டரீதியாக பதிவு செய்யப்படாததால் ஈராக் மக்களினால் உருவாக்கப்பட்ட அக்கிராமத்தின் பெயரை ஈராக் கிராமம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இனி அக்கிராமம் ஈராக் கிராமம் என்றே அழைக்கப்படும் என உள்நாட்டு வர்த்தக கூட்டுறவுத்துறை பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

Written by lankamuslim

December 24, 2011 at 10:44 am

வக்பு சபை பிரதிநிதிகளின் வடமாகாண விஜயம்

leave a comment »

யாழ் இஷாக்: வக்பு சபை பிரதிநிதிகள் வடமாகாணதிற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்குள்ள மஸ்ஜிதுக்கள் தொடர்பாக ஆராந்துள்ளது மன்னார் , வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு யாழ்பாணம் ஆகிய பிரதேசங்களுக்கு சென்றுள்ளனர் யாழ்பாணம் சென்ற வக்பு சபை பிரதிநிதிகள் நாச்சிக்குடா, கொடிகாமம், யாவகச்சேரி பருத்தித்துறை, நயினாதீவு, மண்கும்பான், ஆகிய பிரதேசங்களுக்கும் யாழ்நகர மஸ்ஜிதுக்கள் அனைத்துக்கும் சென்று பார்வையிட்டனர். Read the rest of this entry »

Written by lankamuslim

December 24, 2011 at 10:30 am

முஸ்லிம் மாணவிகளுக்காக பிரத்தியேக தங்குமிடவசதி: உயர் கல்வி அமைச்சர்

with one comment

பல்கலைக்கழக மாணவ மாணவிகளுக்கான அடுத்த தலைமைத்துவ பயிற்சிக்கு முன் அகில இலங்கை முஸ்லிம் வாலிப முன்னனியுடன் பேசி முஸ்லிம் மாணவிகளுக்காக பிரத்தியேக தங்குமிடவசதி ஏற்பாடு செய்து கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நேற்று தெரிவித்துள்ளார். அகில இலங்கை ஜம்இயதுல் உலமா பிரதிநிதிகள், அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் ஆகியோர் கடந்த மே மாதம் 22 ஆம் திகதி உயர் கல்வி அமைச்சர் Read the rest of this entry »

Written by lankamuslim

December 23, 2011 at 8:17 pm

இராணுவப் புரட்சி கிடையாது: பாக். இராணுவம்

leave a comment »

பாகிஸ்தானின் ஆட்சியை இராணுவம் பொறுப்பேற்கப்போவதாக வந்த செய்திகள் தவறானவை என்று கூறி அவற்றை பாகிஸ்தானிய இராணுவத்தின் தலைவரான ஜெனரல் அஸ்பாக் கயானி நிராகரித்துள்ளார். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை தூக்கி வீசுவதற்கான சதி மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் யூசுப் ரசா கிலானி நேற்று எச்சரித்திருந்தார். Read the rest of this entry »

Written by lankamuslim

December 23, 2011 at 5:05 pm

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,826 other followers